Headlines

இலங்கை றப்பர் தொழில் துறை மூலம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டவுள்ளத

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்ற கொள்கையின் கீழ், எமது அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் றப்பர் தொழில் துறை மூலம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதற்கான ஒர் இலட்சியத்தில் உள்ளது. ஒரு சாத்தியமான முறையில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதெனில் எமது சிறிய றப்பர் தொழில் சார் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கப்படுதல் அவசியமாகும். இலங்கையில் முதல் முறையாக அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலக றப்பர் மாநாட்டின்; அங்குரார்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு…

Read More

தலைவர் ரிஷாட் திருமலை விஜயம் – ஆதரவாளர்களுடன் சுமுகமான சந்திப்பு!

திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை, குச்சவெளி பகுதிகளுக்கு இன்றைய தினம் (03) விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச வாழ் மக்களை சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

Read More

அம்பாறை மாவட்டத்தில் உற்பத்தியாக்கும் தொழிற்சாலை

– அஸ்ரப் ஏ சமத் – சீனாவின் தனியார் முதலீட்டாளர் உதவியுடன் 45 மில்லியன் ரூபாய் முதலீட்டில் அமைய விருக்கும் கழிவு பொருட்களை மூலப் பொருளாகப் பாவித்து உரம் உற்பத்தியாக்கும் தொழில் சாலை அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப் படவுள்ளது. குறிப்பாக கரை யோரப் பகுதிகளில் இன்று வரை தீர்த்து வைக்க முடியாத ஒரு பெரும் பிரச்சினையாக விருந்து கொண்டிருக்கும் கழிவுப் பொருள்கள் அகற்றுதல் , இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி சீனாவின்…

Read More

மஹிந்த தோற்கடிக்கப்பட்டமை தெற்காசியாவின் ஆச்சரியமாகவுள்ளது – அமெரிக்கா

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டமை தெற்காசியாவின் ஆச்சரியமாகவுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஊழல் மோசடி, குடும்ப ஆட்சி, அச்சுறுத்தி பிளவுபடுத்தும் கொள்கை, உறுதியற்ற நிலையில் சிக்கி தவித்த இலங்கையில் இடம்பெற்ற தேர்தலின் போது நம்பிக்கையளிக்கும் வகையில் மக்கள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி…

Read More

காவத்தமுனை பிரதேசத்தில் முப்பெரும் விழா (வீடியோ)

கடந்த 17.10.2016 காவத்தமுனை பிரதேசத்தில் முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்ட வீடியோ பதிவு…..

Read More

2763 படையினர் சேவை நீக்கம்

பொது மன்னிப்பின் கீழ் 2763 படையினர் சட்டரீதியாக பதவியிலிருந்துநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் உத்தியோகபூர்வமாக விலகுவதற்குகடந்த திங்கட்கிழமை முதல் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய கடந்த 3 நாட்களில் 2574 இராணுவ சிப்பாய்கள் சட்டரீதியாக இராணுவத்திலிருந்து விலகுவதற்கு முன்வந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். அத்துடன் விமானப்படை சிப்பாய்கள் 118 பேரும், கடற்படை சிப்பாய்கள் 71பேரும் குறித்த இந்தக் காலப் பகுதியில் சட்டரீதியாக விலகுவதற்கு முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்….

Read More

சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்த விழா தொடர்பான கலந்துரையாடல்!

“மன்னார் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் சவால்கள்” என்ற தொனிப்பொருளில் ஒக்டோபர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று காலை (28) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாகப் பங்கேற்கும் இந்த விழாவை முன்னிட்டு, மன்னார் அரசாங்க அதிபர் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். சுற்றாடல் அதிகார சபை உயரதிகாரிகள்,…

Read More

நலன்புரி சங்கங்களுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு!

-ஊடகபிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில்,  மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதியொதுக்கீட்டில், அனுராதபுர மாவட்டத்தில் உள்ள நலன்புரிசங்களுக்கு  குடி  நீர் தாங்கிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கலாவெவயில் உள்ள  அலுவலகத்தில் இஷாக் ரஹ்மான் எம்.பியின் தலைமையில் நடைபெற்றது இன, மத, கட்சி வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ஓர் எண்ணப்பாட்டுடன் ஒன்றிணைந்து நம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றும், தனது சேவையானது கட்சி வேறுபாடின்றி தான் செய்வதாகவும், தன்னால்…

Read More

பாஸ்டனில் வெடிகுண்டு; வாலிபருக்கு அதிகாரபூர்வமாக மரண தண்டனை விதித்து தீர்ப்பு

அமெரிக்காவில் பாஸ்டன் நகரை சேர்ந்தவர் ஷோகார் சர்னேவ் (21). கடந்த 2013–ம் ஆண்டில் பாஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. அதில் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 260 பேர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து ஷோகார் சர்னேவ் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு ஷோகார் சர்னேவுக்கு 12 பேர் அடங்கிய மக்கள் நீதிபதிகள் குழு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது….

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஏற்பாட்டில் பாடசாலை கட்டிட அடிக்கல் நாட்டுவிழா!!

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மோதரை புனித அந்தோனி ஆரம்ப பாடசாலையில் புதிய இரண்டுமாடிக்கட்டிடத்திற்கான  அடிக்கல் நாட்டுவிழாவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் மேல் மாகாண சபை முதல் அமைச்சர் இசுரு தேசப்பிரிய விழாவி கலந்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.

Read More

ஞானசாரவை குற்றவாளி கூண்டில் ஏறும்படி நீதவான் கடுமையான உத்தரவு

கொழும்பு, கொம்பனி வீதி நிப்போன் ஹோட்டலினுள் அத்துமீறி நுழைந்து ஊடக மாநாடொன்றுக்கு ஊறு விளைவித்தமை மற்றும் புனித குர்ஆனை அவமதித்தமை தொடர்பில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கங்கொடத்தே ஞானசார தேரர் உட்பட்ட ஐந்து பிக்குகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் பிரியந்த லியனகே இன்று (27) இவ் உத்தரவினைப் பிறப்பித்தார். வழக்கு விசாரணகள் எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்றைய வழக்கின் போது வழமையாக குற்றவாளி கூண்டில்…

Read More

ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்துள்ள 4 கேள்விகள்…!

கொழும்பில் மகளிர் அணியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அதன் போது அரசாங்கத்திடம் நான்கு கேள்விகளை தொடுத்தார். இதற்கமைய ஐ.நா. பொது சபை கூட்டத் தொடரிற்காக அமெரிக்கா சென்ற போது புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை சந்தித்து யார்? ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் விடுதலைப் புலிகள் தடை நீக்க வழக்கில் அரசு தலையிடாமைக்கான காரணம் என்ன? இதன் பின்பாவது இவ்வழக்கில் அரசு தலையிடுமா ? விடுதலைப் புலிகளிடம் அமெரிக்காவில் இருக்கும் 300 பெற்றோல் நிலையங்கள்,…

Read More