Headlines

தேசிய அரசாங்கம் தொடர்பில் விசாரிக்க நீதிமன்றுக்கு அதிகாரமில்லை!

தேசிய அரசாங்கம் தொடர்பிலான மனுவை விசாரணை செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நேற்று உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நேற்று பரிசீலனை செய்யப்பட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் வாதிடுகையில், தற்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்…

Read More

மஹிந்தவின் ஊடகப் பேச்சாளரிடம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட வாக்குமூலம் வழங்குவதற்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவிலிருந்த பல காணொளிகள் காணாமல் போனமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு!

திருகோணமலையில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்று புதன்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இம்பெற்ற சந்திப்பில், இவர்கள் பேசிக் கொண்டனர். இதன்போது ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய, திருகோணமலையில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிளை விடுவிப்பது தொடர்பில், பிரதியமைச்சர் ஆளுநருக்கு எடுத்துக்…

Read More

அ.இ.ம.கா உயர்பீடக் கூட்டம் 10 மணிக்கு! ஜனாதிபதியுடனான சந்திப்பு நண்பகல் 12க்கு!!

ஏ.எச்.எம்.பூமுதீன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்குமிடையிலான விஷேட சந்திப்பு நாளை நன்பகல் 12 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி;த் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும்  நிலையில் இது முக்கியத்துவமான சந்திப்பு என தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம்களின் இருப்பு ,கௌரவம் மற்றும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பின்போது விரிவாக ஆராயப்படவுள்ளது. ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்பதாக ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அவசர உயர்பீட கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அமைச்சர் ரிசாத்…

Read More

என் வாழ்நாளிலேயே இதுபோன்ற கொடூரமான தாக்குதலை நான் பார்த்ததில்லை – இம்ரான் கான்

பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக, ராணுவப் பள்ளியில் தாக்குதலை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்திக்  கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். பாகிஸ்தானில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், முறைகேடுகளை செய்து நவாஸ் ஷெரீப்  ஆட்சியை பிடித்ததாக குற்றம் சாட்டிவந்த இம்ரான்கான், ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 14ம் தேதியில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்தி  வருகிறார். அதேபோன்று, ஷெரீபின்  ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக…

Read More

புதிய ஆய்வில் இறங்கியுள்ள இளம் விஞ்ஞானி அஹ்மத்

கடிகாரத்தை சுயமாக தயாரித்து பள்ளிக்கு எடுத்து வந்த முஸ்லிம் சிறுவனை, வெடி குண்டை கொண்டு வந்திருப்பதாக கருதி அந்த சிறுவனின் கையில் விலங்கு மாட்டியது ஒரு அமெரிக்க கல்விகூடம். பிறகு அந்த தவறு சரி செய்ய பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமாவே அந்த சிறுவனை அழைத்து உபசரித்து உற்சாகபடுத்தினார். அந்த சிறுவன் அஹ்மது, தற்போது அவனது குடும்பத்தோடு சவூதி மன்னர் சல்மானின் விருந்தாளியாக மக்காவிற்கு உம்ரா  செய்ய வந்துள்ளான். சிறுவன் அஹ்மது சவூதி அரேபியாவில் ரியாத் நாளேடுக்கு…

Read More

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம்

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்றொரு புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி ஜுவான் மெண்டஸ் இடம் அரசாங்கம் இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளது. குறித்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திட்டமிட்ட குற்றங்களைத் தடுத்தல், விசாரணைகளுக்கான சட்ட அமைப்புகள், மற்றும் புலனாய்வுப்பிரிவு என்று மூன்று பிரிவுகள் உள்ளடக்கப்படவுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப்பதிலாக புதிய சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் விரைவில்…

Read More

இஸ்தான்புல் தாக்குதல் – ஜனாதிபதி இரங்கல்

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வௌியிட்டுள்ளார். அத்துடன், உலகலாவிய தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுமையுடன் நிறுபோம் எனவும் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றிரவு சுமார் 10.00 மணியளவில் டாக்சியில் வந்த மூன்றுபேர் பயணிகள் வருகை பகுதி கூடத்துக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவர் இயந்திர துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் பீதியடைந்த மக்கள்…

Read More

முசலி அரசினர் கலவன் பாடசாலை இல்ல விளையாட்டு நிகழ்வு 2017

நேற்றையதினம் (02) மன்னார் முசலி அரசினர் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற 2017ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவுமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் முஜாஹிர் அகத்தி முறிப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஹனீப் மற்றும் அயல் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் விளையாட்டுக்கழகங்கள் கலந்து சிறப்பித்தமை…

Read More

2,700 பாடசாலைகளில் இணையத்தள இணைப்புகள் துண்டிப்பு

இணையத்தள கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் நாடெங்கிலுமுள்ள சுமார் 2700 பாடசாலைகளில் இணையத்தளத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாடசாலை மாணவர்களுக்கான ‘ஸ்கூல் நெட்’ எனப்படும் சேவையினை கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனடிப்படையில் நாடெங்கிலுமுள்ள அரச பாடசாலைகளுக்கு இலவச இணையத்தள வசதியினை வழங்கியிருந்தது. மேலும் இணையத்தள வசதிக்காக ஒவ்வொரு பாடசாலையும் மாதாந்தம் 7 ஆயிரம் ரூபா முதல் 9 ஆயிரம் ரூபா வரை…

Read More

எரிபொருள் நிரப்பும் போது முச்சக்கரவண்டி தீப்பற்றியதில் சாரதி படுகாயம்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த ரி.சிவதர்சன் (வயது 24) என்பவரே எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பும் போது, திடீரென தீப்பற்றியது. இதன்போது, அங்கு நின்றவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுந்துள்ளனர். சம்பவத்தில், குறித்த முச்சக்கரவண்டிக்கு பாரிய சேதம் ஏற்படவில்லை என்ற போதிலும் அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More