Headlines

கணவன், மனைவி இருவருக்கும் முதியோர் கொடுப்பனவு

-வி.தபேந்திரன் – சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் செயலகத்தால் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை கணவன், மனைவி இருவரும் பெறுவதற்கான புதிய சுற்றுநிரூபத்தை அமைச்சின் செயலாளர் டீ.கே.றேணுகா ஹேரத் மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். 70 வயதை கடந்த முதியவர்களுக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டம், சமூக சேவை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் கணவன், மனைவி இருவரும் 70 வயதைக் கடந்திருந்தாலும் ஒருவருக்கு மட்டும்…

Read More

முன்னாள் விமானப்படைத்தளபதியிடம் விசாரணை

முன்னாள் விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் டொனால்ட் பெரேராவிடம் நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவு, இன்று புதன்கிழமை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 2006ஆம் ஆண்டு, மிக் விமானங்கள் நான்கு, மற்றும் விமானங்கள் சிலவற்றை திருத்தும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த கொடுக்கல் வாங்கலில் 14 மில்லியன் அமெரிக்கடொலருக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

சிறுவர் இல்லத்திலிருந்த சிறுமியை காணவில்லை

– செல்வநாயகம் கபிலன் – யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமியை காணவில்லையென இல்ல உத்தியோகத்தரால், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. நிஷாந்தன் திலக்கி (வயது 11) என்ற சிறுமியே இவ்வாறு காணாமற்போயுள்ளார். செவ்வாய்க்கிழமை (31) மதியம் மலசல கூடத்துக்குச் சென்ற சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினர்.

Read More

தாதியர் பயிற்சிப் பெற்ற 2738 பேருக்கு நிரந்தர நியமனங்கள்

தாதியர் பயிற்சிப் பெற்ற 2738 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (31) அலரிமாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க- சுகாதார மற்றும் சுதேசதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன- சுகாதார சேவை ராஜாங்க அமைச்சர் ஹசன் அலி- சுகாதார அமைச்சின் செயலாளர் டி.எம்.ஆர்.பி. திஸாநாயக்க உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read More

நைஜீரிய தேர்தலில் முன்னாள் போராளி குழுத்தலைவர் வெற்றி

நைஜீரியாவில் நேற்று (31) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முதற்தடவையாக எதிர்கட்சித் தலைவர் முகம்மட் புஹாரி சரித்திர புகழ் பெற்ற வெற்றியை ஈட்டியுள்ளார். 72 வயதான முகம்மட் புஹாரி முன்னாள் போராளிக்குழு தலைவர் ஆவார் அவர் சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார் என்று அங்கிருந்து வரும் உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்கு மோசடிகள் இடம்பெற்றபோதிலும் இவ்வெற்றி பாராட்டத்தக்கது என கருத்து தெரிவித்துள்ளனர் கண்காணிப்பாளர்கள். இவ்வெற்றியை பொதுமக்கள் மிக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் என பிபிஸி…

Read More

டெங்கு அதிகரிப்பை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படை ஒத்துழைப்பு

 நாட்டில் வேகமாக பரவும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மேல்மாகாண பாதுகாப்புத் தலைமையவினால் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கமைய கொழும்பு- மாத்தறை- இரத்தினபுரி- கேகாலை- குருணாகலை- மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. மேல்மாகாண பாதுகாப்புப்படை தலைமையகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட படையினர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. மேல்மாகாண பாதுகாப்புப்படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் யு.ஏ.பீ மெதவலவின் கண்காணிப்பில் மார்ச் 26 முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

கிழக்கு கடலோரங்களில் சிறிதளவில் மழை பெய்யலாம்!

நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (01) மாலை அல்லது இரவு வேளையில் இடி , மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருகோணமலை பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடலோரப்பகுதிகளில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம். கிழக்கு  கரையோரமாக மணிக்கு 20 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும்  வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.

Read More

மீன் எண்ணெய் பக்கவாதம் நோயை தடுக்குமா?: ஆதாரம் இல்லை என தகவல்

மீன் எண்ணெய் பக்கவாதம் நோயை தடுக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாரடைப்பு மற்றும் பக்கவாத நோயை தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் மீன்எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அதில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் இருப்பால் அவை மேற்கண்ட நோய்களில் இருந்து காக்கும் என நம்பப்படுகிறது. இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் மீன் எண்ணெயால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பை தடுப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இருந்தும் மீன்எண்ணெய்…

Read More

இஸ்லாத்தில் இணைந்த கால் பந்தாட்ட வீரர் ! திருகுர்ஆன் முழுவதையும் மனனம் செய்ய போவதாக அறிவித்தார்!

காதிசிய கால் பந்தாட்ட அணிக்காக விளையாடுவதர்கு ஒப்பந்தம் செய்ய பட்டவர் தான் ஆப்ரிக்காவை சார்ந்த கங்கோலி இவர் கிருத்துவ மதத்தை சார்ந்தவர் அவர் ஆடும் காதிசிய அணியில் இருக்கும் முஸ்லிம் கால்பந்தாட்ட வீரர்களையும் அவர்களின் இனிய நடை முறைகளையும் நேரம் தவறாமல் அவர்கள் தொழுகைக்கு முக்கியத்துவம் தருவதையும் பார்த்த கங்கோலிக்கு இஸ்லாத்தின் பால் ஈர்ப்பு ஏர்படுகிறது இஸ்லாத்தை ஏர்க்க விரும்பிய அவர் முதலில் இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்கிறார் ஆய்வின் முடிவில் இஸ்லாம் மட்டுமே உண்மை மார்க்கம்…

Read More

உயிருக்கு போராடும் மகன்!போருக்கு புறப்படும் சவுதி அரேபியாவை சார்ந்த இராணுவ வீரர் தந்தை! ! நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வு!

நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வு ,இறைவனின் பாது காப்பில் விட்டு செல்கிறேன் இறைவன் நாடினால் திரும்பி வருகிறேன் இல்லையேல் சுவனத்தில் சந்திப்போம் என்ற உறுதி மொழியோடு அவசர சிகிட்சை பிரிவில் சிகிட்சை பெற்றுவரும் தனது மகளை முத்தமிட்டு விடை கொடுத்து விட்டு போருக்கு புறப்படும் சவுதி அரேபியாவை சார்ந்த இராணுவ வீரர் ஒருவரை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்

Read More

காணாமல்போன படையினரை மீட்டுக்கொடுங்கள்: சிங்கள உறவுகள்

காணாமற்போயுள்ளதாகக் கூறப்படுகின்ற நான்கு கடற்படை சிப்பாய்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதியிலிருந்து முல்லைத்தீவு மற்றும் சுண்டிங்குளம் ஆகிய கடற்படை முகாம்களில் கடமையாற்றிய நிலையில், இந்த கடற்படை சிப்பாய்கள் காணாமல் போயிருந்தனர். இதேவேளை, அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் S.W.M.சேனாரத்ன முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றையும் இதன் போது…

Read More

பூனைக்கு பால் கொடுக்கும் நாய்

-க.கிஷாந்தன்- அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆகுரோவா தோட்டத்திலுள்ள நாயொன்று பூனை குட்டிக்கு பால் கொடுப்பதாக இத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்த பிரதேச மக்கள் மத்தியில் பாரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தோட்டத்தில் உள்ள சௌந்தராஜன் என்பவர் தனது வீட்டில் பூனையொன்றையும், நாயொன்றை வளர்த்து வருகின்றார். வெவ்வேறு இனத்தினை சேர்ந்த ஜந்தறிவுள்ள மிருகங்களாக இவை இருந்தபோதும் பசியில் தவிக்கும் பூனை குட்டிக்கு பாசத்துடன் பாலுட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More