Headlines

புத்தளம் பிரதேச சபை வேட்பாளர் அலுவலகம் திறப்பு நிகழ்வில் நவவி எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- புத்தளம் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் றிபாஸ் நசீரின் தேர்தல் காரியாலயம் திறப்பு நிகழ்வு நேற்று (06) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.        

Read More

பாராளுமன்றில் தடால் – புடால்?

அனுர குமார திசாநாயக்க; இப்படியான ஒரு பதவி தேவையா?? ஒரு தனிப்பட்ட மனிதர் ஒரு மாபெரும் பணத்தொகையை வீணடிக்கும், ஒரு மாபெரும் தொகையை செலவழிக்கும் ஒரு ஆட்சியாளர் நமக்கு தேவையா? இந்த நடப்பாண்டின் கணக்குப்படி ஒரு நாளுக்கான செலவு இருநூற்று அறுபத்து இரண்டு இலட்சங்கள். இதை எப்படி செலவழிப்பார்கள் என்பதை நினைத்து பாருங்கள். ஐயாயிரம் ரூபாய் தாள்களாக மாற்றி சாப்பிடுகின்றார்களோ தெரியாது!!! காலையில் ஐயாயிரம் ரூபாத்தாள் சம்பல், இரவுக்கு சொதி என்று சாப்பிடுவார்களோ தெரியாது!! யோசித்துப்பாருங்கள் இந்தளவுக்கான…

Read More

சவூதியில் சாரதி அனுமதி பத்திரத்தை 72 மணித்தியாளங்களுக்குள் புதுப்பிக்கும் வசதி !

சவூதி அரேபியாவில் சாரதி அனுமதிப்பத்திரத்தை துரிதமாக புதுப்பித்துக்கொள்ள புதிய முறையை அந்த நாட்டு போக்குவருத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக சாரதி அனுமதிபத்திரத்துக்கு விண்ணப்பித்து 72 மணித்தியாலங்களுக்குள் அல் வெசல் சேவை ஊடாக உங்கள் முகவரிக்கே அனுப்பப்படுமென அந்த நாட்டு போக்குவருத்து துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை சவூதி அரேபிய போக்க்குவர்த்து திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள முடியும்..

Read More

மக்கள் காங்கிரஸின் மகளிர்பிரிவின் ஏற்பாட்டில் அக்குரணையில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் அக்குரணையில் பெண்களுக்கான இலவச உளவியல் மற்றும் மருத்துவ கருத்தரங்கு இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பெண்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வின் ஒரு பகுதியாகவே அக்குரணையில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மகளிர் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா தெரிவித்தார். வேலைக்குச் செல்லும் பெண்களும், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து குடும்பச்சுமைகளையும் தாங்கிக்கொண்டிருக்கும் தாய்மார்களும் பல்வேறு மன உளைச்சல்களுக்கும், தாக்கங்களுக்கும் உள்ளாகிவருவதை கருத்திற்கொண்டே இவ்வாறான செயலமர்வு நடாத்தப்பட்டு வருவதாகவும்,  அவர்களுக்கு…

Read More

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை வெள்ளிக்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதியன்று பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Read More

குடி போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 600 வாகனச் சாரதிகள் கைது

குடி போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 605 வாகனச் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவருட கொண்டாட்டங்களின் போது எது வித அசம்பாவிதங்களும் ஏற்படாமலிருக்கும் படி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 291 மோட்டார் வாகனச் சாரதிகளும், 240 ஓட்டோ வாகன சாரதிகளும், 24 கார் சாரதிகளும்,  20 லொறி சாரதிகளும்,08 வான் சாரதிகளும் உள்ளடங்குகின்றனர். அவற்றுள் 04 தனியார்…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு! பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-முர்ஷித் கல்குடா- அதிகாரம் கொண்ட அரசியல் ஓட்டமாவடி பிரதேசத்தில் இருக்கக் கூடாது என்று சில கல்வியலாளர்கள் இப்பிரதேசத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள், அவர்களை நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையின் சம்பிரதாய பூர்வமான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று  வியாழக்கிழமை மாலை (26  சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர்…

Read More

எயிட்ஸ் – மாணவர்களே அவதானம்!

எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியின் போதே, இந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் ஒழிப்புப் பிரிவு வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை, பாடசாலைகளிலும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பான தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக வைத்தியர் சிசிர லியனகே கூறியுள்ளார். இதன்படி உயர் கல்வி…

Read More

முசலி, இலந்தைக்குளம் கிராமத்துடான சந்திப்பு

முசலி, இலந்தைக்குளம் கிராமத்தினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார்

Read More

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கை

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கை உருவாக்கப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கைகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலங்களில் பாதிக்கப்பட்டு தங்களது சொந்த காணிகளை பலர் இழந்துள்ளனர். இதுவரையில் அவர்களுக்கு உரித்தான காணிகளோ அல்லது வேறு ஒரு காணியோ வழங்கப்படவில்லை. இதனை கருத்திற்கொண்டு அவர்களுக்கான தீர்வினை பெற்றுத்தரக்கூடிய தேசிய கொள்கையொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Read More

36 இலங்கை மீனவர்கள் விடுதலை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 36 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

3 மில்லியன் பெறுமதியான வீதி புனரமைப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேச சபை எல்லைக்கரப்பட்ட தலைமன்னார் படப்படி மற்றும் தலைமன்னார் கிராமம் போன்ற பகுதிகளுக்கு பாதை அமைக்கும் வேலைத்திட்டம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் அவர்களது தலைமையின் கீழ் இடம்பெற்றது. 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் தலைமன்னார் படப்படி கிராமத்திற்கான கிறவள் பாதை மற்றும் தலைமன்னார் கிராமத்திற்கு 1 மில்லியன் பெறுமதியான தார் வீதியும் அமைக்கும் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக…

Read More