Headlines

வெல்பொதுவெவ யுவதிகளுக்கான அமைப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைவு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை குருநாகல் மாவட்டம் முழுவதும் அறிமுகம் செய்யும் வேலைத்திட்டங்கள் கடந்த சில வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல் தடவையாக வெல்பொதுவெவ பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸை அறிமுகம் செய்யும் நிகழ்வு மாவட்டத்தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவருமான என்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது யுவதிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு விடையங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களை அகில…

Read More

பள்ளிவாசலுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்கான நிதி வழங்கிவைப்பு

அடம்பன் மினுக்கன் கிராமத்தில் அமைந்துள்ள அந் நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கான குடிநீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இணைப்புக்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகத்தின் செயலாளர் மக்கீன் அவர்களிடம் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார்.

Read More

சபை முதல் அமர்வில் சூடுபிடித்த தர்கா நகர் வரிப்பணம்!

-ஊடகப்பிரிவு- பேருவளை பிரதேச சபையின் முதல் அமர்வு நேற்று முன்தினம் (24) சபையில் ஒன்று கூடியது. இதன் போது, சபை தவிசாளர் இம்மாதத்துக்கான முன்மொழிவுகள் அனைத்தையும் அடுத்த மாதம் எடுத்துக் கொள்வதாகவும், தலைவரின் யோசனைகள் மாத்திரம் விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று அறிவித்தார். இதன்போது, பேருவளை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் உரையாற்றுகையில், “நீங்கள் தர்கா நகர் வரிப்பண சங்கத்தை சந்தித்த வேளை ஒரு வாக்கு கொடுத்துவிட்டு வந்தீர்கள், 24ம் திகதி…

Read More

உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைப்பு

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுமதிப் பத்திரங்கள் கிடைத்தவுடன் அவற்றை பரீட்சார்த்திகளுக்கு விநியோகிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சார்த்திகளின் நலன் கருதி உயர்தரப் பரீட்சை அனுமதிப் பத்திரங்களில் புதிதாக மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம், பாடப் பிரிவு. மற்றும் பரீட்சை நிலைய…

Read More

காலி கூட்டத்தில் மஹிந்த

வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டைக்கு முன்பாக சமன விளையாட்டு மைதானத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்காக மூன்று மேடைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கலாசார நிகழ்வுகளுக்காக பாரிய மேடையொன்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களுக்காக மற்றுமொரு மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடைகளுக்கு அருகில் பாரிய வரவேற்பு பதாகையொன்றும் கட்டப்பட்டுள்ளது. அதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படமும் முன்னாள் ஜனாதிபதிகளின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில், ஒன்றிணைந்த எதிரணியின் கொழும்பு, கிருலப்பனை கூட்டத்துக்கு செல்வதாக அறிவித்துள்ள…

Read More

ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பு வெளியிடப் போகும் -“மஹிந்த ராஜபக்ஸ ஊழல்” நூல்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்களை நூல் வடிவல் ஆவணப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க இந்த தகவல் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பிற்கு அண்மைக் காலங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்இ ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நூல் வெளியிடப்பட உள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றவியல் விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு இந்த…

Read More

கொழும்பில் மிதந்துவந்த மீனுடன் விளையாடிய 21 பேர், வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸை கடலில் மிதந்து வந்த நச்சுத்தன்மை கொண்ட ஜெலி மீன் (நுங்கு மீன்) ஒன்றை வைத்து விளையாடிய 21 பேர் கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்தநிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான சொறி, எரிச்சல், தடிப்பு மற்றும் வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எவரது உயிருக்கும் ஆபத்து இல்லை என்று வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

Read More

அமீர் அலி தலைமையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (10) பிரதேச செயலக செயலாளர் உதயஶ்ரீ அவர்களினால் இறைவனக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் வியாழேந்திரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீநேசன், யோகேஷ்வரன் ,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்ணம், கிருஷ்ணப்பிள்ளை , கருணாகரன், பிரசன்னா, மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களினால் கிழக்கு மாகாணத்திலுள்ள 1119 பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் நியமனங்கள்  திருகோணமலையில் இன்று (25/11/2017) வழங்கி வைக்கப்பட்டன. கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய மக்கள் காங்கிரஸின் பா.உ  அப்துல்லா மஹ்ரூப், அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் தோற்றிய அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்குமாறும், 35 தொடக்கம் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களுக்கான நியமனங்களை…

Read More

வடக்கு,   கிழக்கு அபிவிருத்திக்கு  பாரிய நிதி ஒதுக்கிடு –   அமைச்சர் ரிஷாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு (14) அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.  அமைச்சர் றிஷாட் மேலும் கூறியதாவது, வடக்கிலே இந்த நான்கு வருட காலத்தில் பிரதமரின் கீழான  அமைச்சில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியினால் பாரிய…

Read More

தாருல் உலூம் வித்தியாலய மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதி சித்தியடைந்த மற்றும் சிறப்புப் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (29) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம். பைசல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக  மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, மட்டக்களப்பு மத்தி…

Read More

சிரியா மக்களை உலகம் கைவிட்டு விட்டது: பான் கி-மூன் வேதனை

உள்நாட்டு போரினால் சிரியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை மொத்த உலகமும் கைவிட்டு விட்டதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வேதனை தெரிவித்துள்ளார். 2011-ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த மக்கள் போராட்டம் பெரும் உள்நாட்டு போராக வெடித்தது. இதன் காரணமாக இன்று வரை அந்நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். நான்கு ஆண்டுகளையும் கடந்து ஐந்தாவது ஆண்டில் நுழையவிருக்கம் இப்போரில் இதுவரை 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், 4 மில்லியனுக்கு…

Read More