Headlines

மக்கள் காங்ரஸின் சர்வதேச விவகார பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராகவும் அன்வர் நியமனம்

அகில இலங்கை மக்கள் காங்ரஸின் சர்வதேச விவகார பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராகவும் அன்வர் எம். முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீனினால் அண்மையில் வழங்கப்பட்டது. சிம்ஸ் கெம்பஸின் பணிப்பாளர் நாயகமான அன்வர் எம் முஸ்தபா, தென் கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் முன்னாள் உறுப்பினராவார்.

Read More

ஜப்பானில் தாறுமாறாக ஓடிய விமானம்: 20 பயணிகள் காயம்

ஜப்பானில் ஓடுபாதையை தாண்டி தாறுமாறாக விமானம் ஓடியதால் ஏற்ப்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். தென் கொரியாவில் இருந்து ஜப்பானின் ஹிரோசோமா நகருக்கு சென்றது ஆசியானா நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 விமானம். விமானம் ஹிரோசோமா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையை தாண்டி விமானம் சென்றதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் உட்பட அனைவரும் விமானத்தின் அவசர வழி மூலம் வெளியேறினார்கள். இந்த விபத்தில் யாறும்…

Read More

படகு கவிழ்ந்து 400 பேர் பலி: லிபியாவில் துயரம்

லிபியா அருகே படகு கவிழ்ந்ததில் 400 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.லிபியா பகுதியில் இருந்து புறப்பட்ட படகு ஒன்றில் சுமார் 540 பேர் வரை பயணம் செய்துள்ளனர். இத்தாலி நாட்டின் கடற்பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இத்தாலி கப்பல் படை வீரர்கள் சுமார் 140 பேர்களை மட்டும் உயிருடன் மீட்டனர். விபத்தில் இறந்து போனவர்களின் 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மாயமானோர் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.மேலும் பலியானவர்களில் பெரும்பாலும்…

Read More

இலங்கையின் முதலாவாவது, இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை – காத்தான்குடியில் திறக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)

இலங்கை வரலாற்றில் முதலாவாவது இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை இன்று காத்தான்குடி நகரில் திறந்து வைக்கப்பட்டது. கலாச்சார மரபுரிமைகள் அமைச்சின அனுசரணையுடன் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் வழிகாட்டலில் பல மில்லியன் ரூபாய் செலவில் 4 மாடிகளுடன் இந்த நூதனசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, வணக்கவழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந்நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன. பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களின் உருவங்களும் பதிவாக வைக்கப்பட்டுள்ளமை விசேட…

Read More

நிதி மோசடியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் – என்.கே இளங்ககோன்

நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களை கைதுசெய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்தார். கைதுசெய்யப்படும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மாஅதிபர் கூறினார். விசாரணைகளின் பின்னர் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் என்.கே இளங்ககோன் கூறினார்.

Read More

நைஜீரிய மாணவிகள் 200 பேரை கடத்தியதன் ஒரு வருட நினைவு தினம் இன்று

நைஜீரியாவில் ஆயுதமேந்தி போராடிவரும் பொக்கோஹராம் வாதிகளினால் 200 பாடசாலை மாணவிகள் கடத்தப்பட்டதன் ஒருவருட நினைவு நிகழ்வு இன்று (14)  பிரிட்டன்- அமெரிக்கா உட்பட உலகின் பல  நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. நைஜீரிய தலைநகர்  அபுஜாவில் நடைபெற்ற நினைவு ஊர்வலத்தில் கடத்தப்பட்ட சிறுமிகளை நினைவுகூறும் வகையில் 210 சிறுமிகள் கலந்துகொண்டனர்.கடந்த வருடம் தொடக்கம் இதுவரை சுமார் சுமார் பெண்களும் சிறுமிகள் பொக்கோஹராம் அமைப்பினால் கடத்தப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.இவர்கள் சமைப்பதற்காகவும் பாலியல் அடிமைகளாகவும் போராளிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த…

Read More

குடி போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 600 வாகனச் சாரதிகள் கைது

குடி போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 605 வாகனச் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவருட கொண்டாட்டங்களின் போது எது வித அசம்பாவிதங்களும் ஏற்படாமலிருக்கும் படி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 291 மோட்டார் வாகனச் சாரதிகளும், 240 ஓட்டோ வாகன சாரதிகளும், 24 கார் சாரதிகளும்,  20 லொறி சாரதிகளும்,08 வான் சாரதிகளும் உள்ளடங்குகின்றனர். அவற்றுள் 04 தனியார்…

Read More

இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர தேவையான உதவிகளை வழங்குவேன் – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் வவுனியா மாவட்ட இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில் இது தொடர்பில் கவனத்தை செலுத்துவதாகவும் கூறினார். வவுனியா இரம்பைக்குளம் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம் பெற்ற புதுவருடன விளையாட்டுப் போட்டிகளின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். திரிபேர்ட்ஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த…

Read More

நேர்மைக்கு கிடைத்த வெற்றி!(குட்டிக்கதை)

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார். என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை…

Read More

உங்க வீட்டுல A/C இருக்கா… உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்!

உங்க வீட்டுல A/C இருக்கா… உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்! நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக… இனி, குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. விடிந்துவிட்டாலும் கூட, ஏ.சி. மெஷினை அணைக்க மனமில்லாமல், குதூகல தூக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலரும். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வந்த பத்திரிகை செய்தி, ஏ.சி-க்கார பார்ட்டிகளை எல்லாம் திகிலில் ஆழ்த்தியிருக்கிறது. சென்னை, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீவள்ளி, முதல்…

Read More

வளைகுடா முஸ்லிம் நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாத நண்பர்களின் கனிவான கவனத்திற்கு..!

வளைகுடா முஸ்லிம் நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாத நண்பர்களின் கனிவான கவனத்திற்கு..! மேலும் பன்றி இறைச்சி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாத மற்ற மதத்தவருக்காக அந்த இறைச்சி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு (சவுதியை தவிர்த்து)அங்காடிகளில் முஸ்லிமல்லாதவர்களுக்காக என்று அறிவிப்பு செய்து விற்பனை செய்யப் படுகிறது. பிழைப்புக்காக இந்த நாடுகளுக்கு வந்திருப்பவர்களாக இருப்பினும் அவர்களது மத மற்றும் தனி சுதந்திரத்துக்கு குறுக்கே நிற்காமல் உரிமை வழங்கியிருப்பதன் மூலம் இந்த நாட்டு அரசுகளின் சகிப்புத் தன்மையை…

Read More

குடிப்பழக்கத்தால் உருவாகும் நோயில் இலங்கைக்கு உலக தரவரிசையில் முதலிடம் …????

உலகில் கல்லீரல் பாதிப்படையும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இலங்கை முதலிடத்தை அடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிரோசிஸ் என அழைக்கப்படும் கல்லீரல் பாதிப்படையும் நோய் குடிப்பழக்கத்து அடிமையானவர்களை அதிகம் ஆட்கொள்ளும் ஒரு நோய் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஒரு லசத்துக்கு முப்பத்து மூன்று பேருக்கு இந்த நோய் இருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை இந்த நோயையும் குடிப்பழக்கத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கடந்த…

Read More