நீங்க துபாய் டிரைவரா? கட்டாயம் இதை கேளுங்க!
நீங்க துபாய் டிரைவரா? கட்டாயம் இதை கேளுங்கள்!
நீங்க துபாய் டிரைவரா? கட்டாயம் இதை கேளுங்கள்!
2015 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து ஏப்ரல் 07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட சுமார் 5500 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கபட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இனிமேலும் இவ்வாறான நடவடிக்ககைளில் வர்த்தகர்கள் ஈடுபட கூடாது எனவும் அமைச்சர் றிஷாத் எச்சரித்துள்ளார். நேற்று (08) காலை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் உயர்மட்ட குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் அதனை…
அனைத்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய சாம்பியா நாட்டை நோக்கி பயணமாகியுள்ளார். சாம்பியாவின் லுலகா நகரில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தொடரானது 167வது கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க 167 நாடுகளைச் சேர்ந்த சபாநாயகர்கள் உட்பட 2000 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையிலிருந்து சபாநாயகர் கருஜயசூரியவுடன் இராஜங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க,பிரதி அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான்,கே.கோடீஸ்வரன், பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க…
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர் ஹமீட் றஹீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார் . திருகோணமலை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அப்துல்லா மஹ்றூபை ஆதரித்து, முள்ளிப்பொத்தானை நகரில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ. நஜீமுல்லாஹ்வின் தலைமையில், நேற்று (25) நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பின் போது, குறித்த மு.கா…
தவ்ஹீத் ஜமாத் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளனர். பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸார் இதனை அறிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய அறிக்கை ஒன்று சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர். மேலும்…
தற்போதைய அரசோ இஜனாதிபதியோ பிரதமரோ ஒருதீர்வுத்திட்டத்தை தருவர் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது என்றும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டி இருப்பதாகவும் அரசின் எஞ்சிய ஆயுட்காலத்திற்குள் அதுசாத்தியமாகுமென்று தான் நினைக்கவில்லை என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா கலாச்சார மண்டபத்தில் இன்று மாலை (24) அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புவிழாவில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர் பீட உறுப்பினர் முத்து…
-முர்ஷிட் கல்குடா- தமிழ் கிராமங்கள் நகர பிரதேசங்களுக்குச் சமமாக, அந்தப் பிரதேசங்களை முன்னுரிமை அடிப்படையில் கட்டியெழுப்ப வேண்டும் என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டு தலைமையுரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக பொறுப்பேற்கும் இந்த சந்தர்ப்பத்தில் இதனை நிறைவேற்றித் தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், இப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற ஆலோசனையும், வழிகாட்டலும் தந்த…
இலங்கை ஒரு சுயாதிபத்திய நாடு. சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய நாம் ஒரு போதும் செயற்பட முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (24/04/2016) தெரிவித்தார். வவுனியா, சின்னப் புதுக்குளத்தில் அமைந்துள்ள, சமுர்த்தி வங்கி சங்கத்தில் இடம்பெற்ற, புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார் அமைச்சர் மேலும் கூறியதாவது,,, இந்த நாடு குறிப்பாக வடக்கு, கிழக்கு கடந்த மூன்று தசாப்தங்களாக யுத்தத்தின் பிடிக்குள் சிக்குண்டு…
அஷ்ரப் ஏ சமத் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட 9 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. ஜனசெத பெரமுன சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன, ஒக்கொம ரஜவரு கட்சியின் சார்பில் எம்.பீ.தெமினிமுல்லே, சமாஜவாதி சமனதா கட்சியின் சார்பில் பானி விஜேசிங்க ,எக்சத் சமாஜவாதி கட்சியின் சார்பில் விஜேசிங்க சிறிதுங்கவும் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ராஜபக்ஷ…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின், பாராளுமன்ற விவகாரப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் வேண்டுகோளுக்கிணங்க, கல்முனை வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் கல்முனை 03, ஆட்டா பஸார், பழைய கடற்கரை வீதி காபட் பாதையாக அமைக்கப்படவுள்ளது. இந்த வீதிப் புனரமைப்பின் ஆரம்பகட்டப் பணிகளை, ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மற்றும் பாதை அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் திரு. பரதன் ஆகியோர் இன்று காலை (24/11/2017) சென்று…
தம்புள்ளை மாநகர சபை பிரதி மேயர் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளார். தம்புள்ளை கம்உதா மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற மைத்திரிபால சிறிசேனவின் பரப்புரைக் கூட்டத்திற்கு வருகை தந்த தம்புள்ளை மாநகர சபை பிரதி மேயர் குசுமசிறி ஆரியதிலக மற்றும் மாநகர சபை உறுப்பினர் எச்.எம்.ரூபசிங்க ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் வடக்கு மாகாணசபை முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரனை விரைவில் சந்திக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் புதுடில்லியில் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, புதுடில்லி வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களை இன்று சனிக்கிழமை காலை சந்தித்தார். இலங்கையில் நிலவும் தற்போதைய சூழல் பற்றியும் அதிகாரப்பகிர்வு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் தங்களின் மதிப்பீடுகளும் எதிர்பார்ப்புகளும் எவ்வாறு உள்ளன என்பது பற்றியும் இரா. சம்பந்தன்…