Headlines

மக்கள் காங்கிரஸின் அக்குரனை, நீரல்லை கிளை அங்குரார்ப்பணம்!

கண்டி மாவட்டத்தின் அக்குரனை பிரதேச சபைக்குட்பட்ட நீரல்லை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  புதிய கிளை அங்குரார்ப்பண நிகழ்வும், எதிர்கால அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும் கடந்த வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான  ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன், அக்குரனை கிளையின் தலைவர் இல்யாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் இஸ்வி ஜேபி உட்டப ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Read More

குறைந்த வருமானம் பெறுவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அன்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இப்பொலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம் அவர்களின் தலைமையில் கலாவெவயில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

எரிவாயு கசிவால் வீடு முற்றாக எரிந்து நாசம்

ராஜகிரிய – நாவல பகுதியில் எரிவாயு கசிவு காரணமான வீடு தீப்பற்றிய சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் பரவிய தீயை கோட்டை மாநகர சபையின் தீயனைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட தீ காரணமாக உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை எனவும், வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பெண்கள் வெளிநாடு செல்வதை நிறுத்த முடியாது.!

பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதை நிறுத்த முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கையில் விவசாயம், ஆடை கைத்தொழில் உள்ளிட்ட வருமானத் துறைகள் வீழ்ச்சியடைந்து காணப்படுவதால் பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை நிறுத்த முடியாது. வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் வருமானம் மூலமே இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்றது. குறைந்த வயதில்  பெண்கள் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புகளுக்கு செல்வதனூடாக , குறைந்த வயதிலேயே அவர்கள் பணம்…

Read More

உப்பு நிறுவனம் குத்தகையில் வைத்திருந்த 1050 ஏக்கர் காணியை விடுவிக்கத் தீர்மானம்!

பிரபல உப்புத் தொழிற்சாலை நிறுவனத்துக்கு, திருகோணமலையில் நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த 1050 ஏக்கர் நீர்ப் பிரதேசத்தை விடுவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். திருகோணமலை, நிவாவெளி, இறக்க கண்டி, கும்புறுபிட்டி, குச்சவெளி சிறுமீன்பிடி கைத்தொழிலாளர்களின் தொழிலைத் தடையின்றி மேற்கொள்ளும் பொருட்டே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இதனால், அன்றாட ஜீவனாம்சங்களில் ஈடுபடும் சிறுமீனவர்கள், தங்களது தொழிலை முன்னெடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்…

Read More

ஐ.எஸ் எவ்வாறு உருவானது.. ? விளாடிமிர் புடின் விவரிக்கிறார் (வீடியோ)

‘ஒபாமா அடிக்கடி ஐ.எஸ் பற்றி பேசுகிறார். ஓகே… இந்த உலகில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆயுத சப்ளை செய்வது யார்? சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியிருப்பவர்கள் யார்? இது போன்ற ஒரு குழப்பமான நிலையை அந்த நாட்டில் உருவாக்கியவர்கள் யார்? போரிடுபவர்களுக்கு ஆயுத சப்ளை செய்பவர்கள் யார்? ஆசாத் அரசுக்கு எதிராக போரிடுபவர்கள் உண்மையில் யார் தெரியுமா? அவர்கள் அனைவரும் கூலிப்படையினர். அவர்கள் அனைவருக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் தருபவர்கள் பக்கம் சார்ந்து போரிடும்…

Read More

ஹஜ் ஏற்பாடுகளை அரசாங்கம் பொறுப்பேற்பதே தீர்வுக்கு வழி – அமைச்சர் பௌசி

‘ஹஜ்’ கோட்டா பகிர்வில் ஊழல்கள் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறி தொடர்ந்து நீதி­மன்­றத்தை நாடு­வது சமூ­கத்­துக்கு அவப் பெய­ரையே ஏற்­ப­டுத்தும். இதைத்­த­டுப்­ப­தற்கு ஒரே வழி ஹஜ் ஏற்­பா­டு­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­ப­தாகும் என அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சரும் முன்னாள் ஹஜ் குழுவின் இணைத்­த­லை­வ­ரு­மான ஏ.எச்.எம் பௌசி தெரி­வித்தார். இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்வில் அநீ­தி­யி­ழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் நீதி­மன்றம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்த பொறி­மு­றைக்­கேற்ப கோட்ட பகி­ரப்­ப­ட­வில்லை எனத்­தெ­ரி­வித்து அதற்கு இடைக்­கால தடை­யுத்­த­ரவு விதிக்கக் கோரி மூன்று முகவர் நிலைய உரி­மை­யா­ளர்கள் உயர்­நீ­தி­மன்­றத்தில் வழக்­கொன்று தாக்கல் செய்­ய­துள்­ளமை…

Read More

நாங்கள் திருகுர்ஆனை நேசிக்கும் சமுதாயம் வானில் பறந்தாலும் நீரில் மிதந்தாலும் திருமறையை நாங்கள் ஓதி கொண்டே இருப்போம் !

சவுதி விமான நிறுவன மேலாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள படத்தை தான் நீ்ங்கள் பார்க்கின்றீர்கள் விமானம் பறந்து கொண்டிருக்கும் நிலையிலும் துணை விமானி ஒருவர் திருகுர்ஆன் ஓதி கொண்டிருக்கும் காட்சியைதான் படம் விளக்குகிறது இது பற்றி கருத்து தெரிவித்த அந்த விமானி “நாங்கள் திருமறை குர்ஆனை நேசிக்கும் சமுதாயம் வானில் பறந்தாலும் நீரில் மிதந்தாலும் எங்கள் இறைவன் வழங்கிய வேதம் எங்களுடன் இருக்கும் எப்போதும் அதை நாங்கள் ஓதி கொண்டே இருப்போம். ” என கூறியிருப்பது…

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு! அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸின் ஏற்பாட்டில், இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கொழும்பு ஹம்சா வித்தியாலயத்தில் நேற்று மாலை (30) இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வில், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன்,  மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ரம்ஸி உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.    

Read More

பாலியல் தொழிலில் ஈடுபட்டால்: கைதுசெய்வோம்

பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டத்திற்கு முரணானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வாழ்வாதாரம் கிடையாது என்பதனால் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறி அண்மையில் சில பெண்கள் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர். எனினும் இலங்கையின் சட்டங்களின் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபட முடியாது. பாலியல் தொழிலில் ஈடுபடுதல் மற்றும் பாலியல் தொழில் மையங்களை நடாத்துதல் சட்டத்திற்கு விரோதமானது. எனவே, பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர். வாழ வழியில்லை இதனால்…

Read More

175 ஆண்டுக்கு முன் உலகில் வெளியிடப்பட்ட முத்திரையை, இலங்கை மீண்டும் வெளியிடுகிறது

உலகில் வெளியிடப்பட்ட முதலாவது முத்திரை புதிய முத்திரையாக இலங்கையில் மீள வெளியிடப்படவுள்ளது. 1840ம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி உலகின் முதல் முத்திரை வெளியிடப்பட்டது. அப்போதைய பிரிட்டன் அரசியான விக்டோரியா மகாராணியின் மார்பளவு புகைப்படம் இந்த முத்திரையில் பதிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரையின் அப்போதைய மதிப்பு ஒரு பென்னி (பவுண்ட்சின் சத அலகு) ஆகும். இந்த முத்திரை வெளியிடப்பட்டு தற்போதைக்கு 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உலக தபால் தினத்தை முன்னிட்டு உலகில் முதலாவதாக வெளியிடப்பட்ட முத்திரையை…

Read More