Headlines

எவரையும் வீழ்த்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் எமக்கில்லை

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த அபிலாஷைகளையும் உள்ளடக்கும் வகையில் அந்த சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கி பொருத்தமான அரசியல் திட்ட வரைபொன்றை உருவாக்குவதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எண்ணமாகுமென்று அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று மாலை தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தயாரித்துள்ள அரசியல் திட்ட வரைவை மேலும் மெருகூட்டி அதனை முழுமைப்படுத்துவதற்காக முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் அரசியல் மறுசீரமைப்பு ஆலோசனைக்குழு நடத்திய…

Read More

பாலமுனை பள்ளிவாயலுக்கு இரண்டு மில்லியன் நிதியுதவி

பாலமுனை ஜும்ஆ பெரி பள்ளிவாயலின் கட்டிட நிர்மாணப் பணிகளின் தேவை கருதி ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபையினர் வேண்டிக் கொண்டதற்கிணங்க, முன்னாள் தவிசாளரும் நுகர்வோர் அதிகார சபை நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலின் முயற்சியின் பயனாக கௌரவ அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட 2 மில்லியன் ரூபாவுக்கான காசோலை பள்ளிவாசல் பரிபாலன சபையினரிடம் கையளிக்கும் நிகழ்வு  (2019.03.16) அஷர் தொழுகையை தொடர்ந்து ஜும்ஆ பெரி பள்ளிவாசலில் இடம்பெற்றது. மேற்படி நிதியானது பிரதான வீதியில்…

Read More

தமிழ் நாட்டு தேர்தல்: வைகோ அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையவில்லை எனில், இனி தேர்தலில் போட்டியிட மாட்டோம் என வைகோ தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், நடை பெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி சுமார் 150 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறோம். இது போன்ற நல்ல ஒரு கூட்டணி வாய்ப்பு மீண்டும்…

Read More

காணாமல் போன மகிந்தவின் மோதிரம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணிந்திருந்த மோதிரம் ஒன்று நேற்று (28) காணாமல் போனது. கொழும்பின் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கல்யாண வைபவம் ஒன்றில் வைத்து இந்த மோதிரம் காணாமல் போனது. இந்தநிலையில் கல்யாணத்துக்கு வந்தவர்களுக்கு தெரியாத வகையில் முழுமையாக தேடுதல்கள் நடத்தப்பட்டன. மஹிந்தவின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் அனைத்து இடங்களிலும் தேடிபார்த்த பின்னர் பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதன்போதே விடயம் அனைவருக்கும் தெரியவந்தது. எனினும் குறித்த மோதிரம் சில விநாடிகளில் ஹோட்டல் பணியாளரால் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்த இடம்ஒன்றில்…

Read More

துறைமுக நகர்த்திட்டம் மூலம் நாடு அதல பாதாளத்தில் விழும் – JVP

அரசாங்கத்தினால் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக நகர அபிவிருத்தி  திட்டத்தின்  மூலம் நாடு அதல பாதாளத்துக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் நிலவுகின்றன. எனவே இது தொடர்பான பூரணமான அறிக்கையொன்று எதிர்வரும் வாரம் மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்படும்  என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே    அவர் இதனை தெரிவித்தார்.  அவர்…

Read More

ஒற்றையாட்சி மாறாது; பிரதமர்

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை 21 ஆம் நூற்­றாண்­டுக்கு ஏற்றால் போல் தயா­ரிக்க உள்ளோம். இதன்­போது மக்­களின் கருத்­துக்­க­ளுக்கே பெரும் முக்­கி­யத்­துவம் அளித்து செயற்­ப­டுவோம். நான் ஒரு இலங்­கை­யன். இந்த நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு ஒரு போதும் இட­ம­ளிக்கமாட்டேன் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். நாட்டில் வாழும் அனைத்து இனத்­த­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வதற்கு எனக்கு இட­ம­ளி­யுங்கள். ஒற்­றை­யாட்­சிக்கு முர­ணான அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கமாட்டோம். மக்­களை குழப் பும் வகையில் வீணான எதிர்ப்­பு­களை உட­ன­டி­யாக கைவி­டு­மா­று­ கோ­ரு­கின்றேன். உலக வர­லாற் றில் முதல்…

Read More

முஸ்லிம் வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்

எதிர்வரும் 17ம் திகதிக்குப் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியே ஆட்சியமைக்குமென தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சரும், வேட்பாளருமான றிஷாட் பதியுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களை பெற்று வெற்றியீட்டுமென தெரிவித்தார். முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம்கள் மீதான விரோத மனப்பான்மையினால்தான் அவர் ஜாதிபதி தேர்தலில் தோட்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இன்று நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றது. முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தற்காலிகமாக…

Read More

சேயா செதெவ்மி கொலை – 10 பேரிடம் வாக்குமூலம்

சேயா சதெவ்மி என்ற சிறுமியின் கொலை தொடர்பில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்ட கொட்டதெனியாவை பகுதியைச் சேர்ந்த சிலர் இன்று திவுலுபிட்டிய காவற்துறை நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் கைதாகி விடுவிக்கப்பட்ட 17 வயதான மாணவர் மற்றும் குடும்பஸ்த்தர் ஆகிய இரண்டு பேரும், காவற்துறையினருக்கு எதிராக முறைபாட்டை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளின் நிமித்தம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 10 பேர் வரையில் வாக்குமூலம் வழங்கியதாக காவற்துறை…

Read More

வௌிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற நிதியுதவியில் வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டங்கள்

வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள நிதியுதவிகள் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக நிதி முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த வகையில், இந்த வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் 312 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியில் 302 மில்லியன் டொலர் நிதி செயற்றிட்ட கடன் தொகையாகவும், எஞ்சிய தொகை நேரடி உதவியாகவும் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த நிதியுதவித் தொகையில் பெரும் பகுதி சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

Read More

ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

ஊடகப் பிரிவு வவுனியா மாவட்டத்தின் ஆண்டியா புளியங்குளம்  முஸ்லிம் வித்தியாலயத்தின்  வருடாந்த பரிசளிப்பும்,கவிதை நூல் வெளியிட்டு விழாவும் இன்று மாலை பாடசாலை மைதானத்தில்  இடம் பெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஜாபிர்  தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில்,பிரதம அதிதியாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் வவுனியா வலயக் கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் ; கலந்து கொண்டனர்.

Read More

வேட்புமனு நிறைவு.. ஐ.தே.க கொழும்பு வேட்பாளர்கள்

ஐ.தே.கட்சியில் கொழும்பில் கேட்கும் வேட்பாளர்கள் விபரம். 1.ரணில் விக்கிரமசிங்க 2.ரவி கருணாநாயக்க 3.விஜயதாச ராஜபக்ச 4.ஹர்ஷா த சில்வா 5.ரோசி சேனாநாயக்க 6.எரான் விக்கிரமரட்ன 7.சுஜீவ செனசிங்க 8.மஞ்சு ஸ்ரீ அரங்கள 9.நிரோஷன் பாதுக்க 10.முஜிபுர் ரஹ்மான் 11.எஸ்.எம்.மரிக்கார் 12.உபுல் ஷாந்த சன்னச்கல 13.உதார ரத்நாயக்க 14.ஜயந்த த சில்வா 15.சுனேத்ரா ரணசிங்க 16.ஸ்ரீநாத் பெரேரா 17.லேனார்ட் கருணாரத்தன 18.மனோ கணேசன் 19.எஸ்.குகவார்த்தன் 20.பெரோசா  முசம்மில் 21.ஹிருனிகா பிரேமசந்திர 22.சம்பிக்க ரணவக்க

Read More