Headlines

ஜனாதிபதி மைத்திரிபாலவை போன்ற எந்தத் தலைவர்களையும் அரசியல் வாழ்க்கையில் கண்டதில்லை : சமரசிங்க

எனது அரசியல் வாழ்க்கையில்  அதிகாரங்களை கைவிட்ட  எந்தத் தலைவரையும் நான் கண்டதில்லை.    தமது அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவே  தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி தனது அதிகாரங்களை குறைத்துக்கொண்டுள்ளார் என்று நிதி இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க  தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்க செயலர் இலங்கைக்கு வந்ததன் மூலமும் அவர் கூறிய விடயங்களின் மூலமும் உலகின் மிகப்பெரிய  வல்லரசு நாட்டின் உதவி எமக்கு கிடைத்துள்ளமை உறுதியாகியுள்ளது. இது   மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும்  அமைச்சர்…

Read More

மீண்டும் பிறந்தார் இளவரசி டயானா

இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபத் டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், கேம்ப்ரிட்ஜின் மதிப்பிற்குரிய இளவரசி சார்லட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக தகவலை அறிவித்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ்–டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் (வயது 32). ஸ்காட்லாந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, கேட் மிடில்டனை சந்தித்தார். இருவரும் காதலித்து, 2011 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு…

Read More

பேக்கரிகளில் தராசு இல்லாவிடின் 100,000 ரூபாய் தண்டம்

பேக்கரி மற்றும் பேக்கரி உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் பாண் உள்ளிட்ட தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்து கொள்வதற்கு தராசு வைக்கப்படவேண்டும். அவ்வாறு தராசு வைக்கப்படாவிட்டால் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பாண் உள்ளிட்ட பேக்கரி தின்பண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சாதாரண நிலையங்களில் தராசு…

Read More

நேபாளில் அசிங்கப்பட்ட இந்திய பத்திரிக்கைத் துறை!

80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கத்தை சந்தித்த நேபாளத்தில் இதுவரை 7 ஆயிரம் பேருக்கு மேல் இறந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு செய்தி சேகரிக்க சென்றுள்ள இந்திய பத்திரிகையாளர்களை மனிதாபிமானம் அற்ற முறையில் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாகக்கூறி அவர்களை வெளியேறும்படி வலியுறுத்தி உள்ளனர். இந்திய பத்திரிகையாளர்களுக்கு எதிராக, “உங்கள் நாட்டிற்கு திரும்பி போங்கள்” என்று ஹேஷ்டேகை நேற்று உருவாக்கி டுவிட்டரில் ஒரு லட்சம் டுவிட்டுகளை பதிவு செய்துள்ளார்கள் நேபாள மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள். டுவிட்டர்…

Read More

சவுதி அரேபியாவின் எதிர்காலம் என சவுதி மன்னரால் அடையாளம் காட்டபட்டுள்ள சவுதி அரேபியாவின் புதிய இளவரசர்கள் !

மௌலவி செய்யது அலி ஃபைஜி சவுதி அரேபியாவின் மன்னாராக சுமார் 100 நாட்களுக்கு முன்பு பதவியேற்ற மன்னர் சல்மான் தொடர்ந்து அதிரடியாக செயலாற்றி வருகிறார் நீண்ட நெடுகாலத்திர்கு பிறகு சவுதி அரேபியாவிர்கு ஒரு சிறப்பான தலைமை கிடைத்திருப்பதாக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் இந்த 100 நாட்களில் அதிரடியான 50 அரசாணைகளை பிரப்பித்து சவுதி மக்களுக்கு மட்டும் இன்றி ஏமன் ஏஜிப்ட் பர்மா சிரியா பலஸ்தீன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள உலக முஸ்லிம்கள் பயன் பெறும் விதத்தில் பல்வேறு…

Read More

வெயிலுக்கு மோர்தான் பெஸ்ட்! வெப்பம் தணிக்கும் மோர் சிறந்த பிணி நீக்கி எத்தனை பேருக்கு தெரியும்..!

தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி. எத்தனைதான் வண்ணவண்ணமான குளிர்பானங்கள் சந்தையில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் (Artificial flavour, Artificial colour) கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா? வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், செரிமானம் சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு ‘திம்மென்று’ இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு குவளை பருக அரைமணி…

Read More

நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுவதாகவும் இது தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் எமக்குள் இருக்கம் கருத்து முரண்பாடுகளை களைந்து சமூகத்தின் விமோசனத்திற்காக செயற்படுவோம் என்றும் தெரிவித்தார். வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம் பள்ளிசாசல் துறை அல்-ஹம்றா மீள்குடியேற்றக் கிராமத்தில் வசிக்கும் மக்களின் தேவை தொடர்பில் அறிந்து கொள்ளும் வகையில் இன்று விஜயம் செய்த அமைச்சர்…

Read More

மீட்புப் பணிகளை நிறுத்திக்கொள்வதாக நேபாள அரசு அறிவிப்பு!

மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதால் மீட்புப் பணிகளை நிறுத்திகொள்வதாக நேபாள நாட்டு அரசு அறிவித்துள்ளது. நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் அந்நாடு சீர்குலைந்து போனது. வெறும் 3 கோடி மக்கள் தொகை மட்டுமே உள்ள நேபாளத்தில் 80 லட்சம் பேர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியா, சீனா,அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் நேபாள நாட்டின் மீட்புப் பணிகளுக்கு உதவி வருகின்றன. பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 500ஐ தாண்டி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்…

Read More

பொலிஸார் இடைநிறுத்தம்; நீதவான் அதிரடி

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத குற்றத்தடுப்பு பொலிஸ் பரிசோதகர் தற்காலிகமாக பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பரிசோதகர் சிசேர என்பவரே இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அவர் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் யாழ். நகரப்பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்….

Read More

சாய்ந்தமருதில் ஆடை கைத்தொழில் பயிற்சி நிலையம் திறப்பு

எஸ்.அஸ்ரப்கான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடின் அயராத முயற்சியினால் கொண்டுவரப்பட்ட ஆடை கைத்தொழில் பயிற்சி நிலைய திறப்பு விழா இன்று (04) திங்கட்கிழமை அம்பாரை மாவட்டத்தின் சாய்ந்தமருதில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் கலந்து கொண்டு இந்நிலையத்தினை திறந்து வைத்தார். கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவினரின் பங்குபற்றுதலுடன் சாய்ந்தமருது அமைப்பாளர்…

Read More

மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி வபாத்

ஏ.எஸ்.எம்.ஜாவித் மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள்  (04) மாலை நீரில் மூழ்கி பலியானதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற தபாலகர் ஏ.ஜி.எம். நௌபர் என்பவரின் புதல்வர்களான முஹமட் சிபான் (28), முஹமட் முபாஸ் (19) ஆகியோராவர். மாரணமான இரு கோதரர்களின் ஒரு சகோதரர் திருமனமாகி ஒரு வாரமான நிலையில் மேற்படிக் குடும்பத்தினர் சிலாவத்துறைப் பகுதிக்கு பொழுது போக்கிற்காகச் சென்ற சமயமே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இன்று (04) மாலை சுமார்…

Read More

இறக்காமத்தில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும், பயன் பெரும் குடும்பங்களை விழிப்பூட்டும் கூட்டமும்..

அப்துல் அஸீஸ்​  இறக்காமம்  பிரதேசத்துக்குட்பட்ட  வறிய குடும்பம்களை  சேர்ந்த யுவதிகலுக்காக  தையல் பயிற்சி நிலையம்   திறந்து வைக்கும் நிகழ்வும், இவ்விடயம் தொடர்பாக பயன் பெரும் குடும்பங்களை   விழிப்பூட்டும் கூட்டமும்  இறக்காமம் பிரதான வீதியில்   நேற்று மாலை   (03 ) இடம்பெற்றது. இலங்கை புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தினால் அமைக்கப்படுள்ள இந்த பயிற்சி நிலையம்களின்   ஊடக இறக்காமம்  பிரதேசத்தில் உள்ள  வறிய குடும்பம்களை  சேர்ந்த  யுவதிகள் கட்டம் கட்டமாக  தொடர்சியாக  பயன்பெறவுள்ளனர். இறக்காமம்  பிரதேச  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர்  எ.எம்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் வீடமைப்பு  மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர்  அமீர் அலி ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More