Headlines

ஆளும் தரப்பினர் சிங்கபூருக்கு படையெடுப்பு

ஆளும் தரப்பினர் முக்கியஸ்தர்கள் சிங்கபூருக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம, சிங்கபூருக்கு பயணமாகியுள்ளார். இதேவேளை, பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா நேற்று (26) பகல் 12.45க்கு சிங்கபூருக்கு பயணமாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர், சிங்கபூரிலிருந்து நாட்டுக்கு திரும்பியதன் பின்னர் முக்கியமான தீர்மானம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதற்கிடையில், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பியான சஜின் வாஸ் குணவர்தன நேற்று காலை 9.50க்கு சிங்கபூருக்கு பயணமாகியுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. -Tamilmirror-

Read More

ஆட்சி மாறியிருக்காவிடின் நாடு மோசமடைந்திருக்கும்

ஜனவரி-8இல் இந்த நாட்டில் மாற்றம்ஏற்பட்டிருக்காவிட்டால் இன்று நாட்டின் நிலைமை மோசமடைந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடகங்களின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுடனான சந்திப்பின்போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், மார்ச் மாதம் நடை பெற்ற ஐ.நா.  மனித உரிமைகள் சபையின் 28ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் முன்னாள் ஆட்சியாளர்கள் பலருக்குப் பயணத்தடை விதிக்கப்படும் நிலைமை காணப்பட்டது. இராணுவப் பிரதானிகள் சிலருக்கும் இப்படியான நிலைமை…

Read More

FCID இல்லாதொழிக்கப்படாது –

நிதி மோசடி விசாரணை பிரிவு ஒரு போதும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று (22) தெரிவித்தார். புதிதாக கடமையேற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை வரவேற்கும் நிகழ்வு பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நிதி மோசடி விசாரணை பிரிவு மேலும் பலப்படுத்தப்படுமே தவிர இல்லாதொழிக்கப்படாது. மேலும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் கட்டாயம் கைது செய்யப்படுவர் என்றார்.

Read More

3200 கோடி அமெரிக்க டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய, அதிநவீன விமான நிலையம்: துபாயில்

உலகின் மிகவும் பரபரப்பான இரண்டாவது விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகின்றது.இந்த பெருமை மட்டும் போதாது என்று தீர்மானித்த துபாய் அரசு, இந்த விமான நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ’துபாய் வேர்ல்ட் சென்ட்ரல்’ பகுதியில் மற்றோரு சர்வதேச விமான நிலையத்தை புதிதாக கட்ட ஏற்பாடு செய்து வருகின்றது. 32 பில்லியன் (3200 கோடி) அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்படும் இந்த விமான நிலையத்தை சுமார் நான்கரை…

Read More

மிஹின் லங்கா விமானம் பறப்பதை 6 மணிநேரம் தாமதப்படுத்திய எலி!

– ஆர்.கிறிஷ்­ணகாந் – கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து நேற்று முன்­தினம் (9) காலை மதுரை நோக்கி புறப்­ப­ட­வி­ருந்த மிஹின் லங்கா விமான சேவைக்கு சொந்­த­மான என் 3001 என்ற விமானம் புறப்­ப­டு­வ­தற்கு 6 மணித்­தி­யா­லங்கள் தாமதம் ஏற்­பட்­டுள்­ளது. விமா­னத்­திற்குள் எலி­யொன்று புகுந்­துள்­ள­தாக பய­ணி­யொ­ருவர் விமானப் பணி­யா­ளர்­க­ளுக்கு அறி­வித்­த­த­னை­ய­டுத்து விமா­னத்­தி­லி­ருந்த பய­ணிகள் அனை­வரும் உட­ன­டி­யாக வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். விமான நிலைய பொறுப்­பா­ளர்கள் எலியை விமா­னத்­தி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கு ஏறத்­தாழ 6 மணித்­தி­யா­லங்கள் வரை சென்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் பின்னர் முற்­பகல் 7.30 மணிக்கு…

Read More

கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக பலி…!!

ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை கிணற்றில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது. பாலாவி வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இராசசேகரன் கோபினா பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. தாயார் கிணற்றடியில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்த போது, குழந்தை தாய்க்கு முன்பாக நின்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் குழந்தையை காணவில்லை என தாயார் அயல் வீடு முழுவதிலும் தேடிய போது குழந்தையை காணவில்லை. பின்னர் கிணற்றிற்குள் பார்த்த போது, குழந்தை கிணற்றில் சடலமாக மிதந்துள்ளது. குழந்தை கிணற்றிற்குள் விழுந்து உயிரிழந்தமை…

Read More

5000 ரூபாய் போலி பணத்தாள் பாவணையாளர் கைது

5000 ரூபாய் போலி பணத்தாள் கொடுத்து சிக்கரட் பெற்ற சந்தேக நபர் சிசிடிவி காணொளி   மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். வரகாபொல வர்த்தக நிலையமொன்றில் கடந்த 7 ஆம் திகதி இவர் குறித்த போலி பணத்தாள் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. அலவ்வ பிரதேசத்தினை சேர்ந்த 23 வயதான நபரே குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்த 65 இலங்கையர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவியபோது, தென்னிந்தியாவிற்கு சென்று, அங்கு தங்கியிருந்த 65 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர். தமிழகத்தின் அகதி முகாம்களில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய தலையீட்டினால், நாடு திரும்பவுள்ளனர். இலங்கையர்கள் இரண்டு விமானங்கள் மூலம் இன்று முற்பகல் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இந்த மக்கள், அவர்களின் சொந்த இடங்களில்…

Read More

நல்லாட்சிக்கெதிராக ஆர்ப்பாட்டம்!

நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் புதிய அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ள குழுக்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சத்தியாக்கிரகங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. இலங்கையில் அரசு மாற்றம் ஏற்பட்டு ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைய உள்ளது. அன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்த ஜே.வி.பி தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளினால் ஏற்பட்ட அதிருப்தி நிலையை வெளிப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 3…

Read More

புதிய சூழ்ச்சியில் மஹிந்த: எச்சரிக்கும் புலனாய்வுப் பிரிவு

பௌத்த விகாரைகளை மையமாகக் கொண்ட நவபாசிச அமைப்பொன்றை உருவாக்குவதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவான எஸ்ஐஎஸ் பிரிவினர் இது தொடர்பான புலனாய்வு அறிக்கையொன்றையும் தயாரித்துள்ளனர். அதன் ஒரு பிரதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னர் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நோக்கில் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் நவபாசிச அமைப்பொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது….

Read More

சோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லை – மைத்திரிபால சிறிசேன

தாம் சோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவரல்ல என்று ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சோதிடக்காரர்கள், பொதுமக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை பரப்புகின்றனர். தம்மை பற்றியும் சில சோதிடர்கள் பல கதைகளை கூறுகின்றனர். இந்தநிலையில் தாம் எதிர்வரும் முதலாம் திகதி நல்லாட்சி தொடர்பில் மஹிந்த ராஜபக்சவை விவாதத்துக்கு அழைத்துள்ளமையை மைத்திரிபால நினைவுப்படுத்தினார். அண்மையில் தாம் கூறிய கருத்துக்கு பிழையான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேற தடைவிதிக்கப்படும் என்று அர்த்தம் அதற்கு கற்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்….

Read More

UPFA யில் போட்டியிட கைச்சாத்திட்ட விமல், வாசுதேவ, பந்துல, டலஸ் அழகப்பெரும..

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவில் கைச்சாத்திடுகின்றமை குறிப்பிடத்தக்கது. மகாவலி கேந்திரத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகிறது. இதுவரை விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும…

Read More