Headlines

பெற்றோருக்கு என்ன பதில் சொல்வேன்!- ராம்குமாரின் வக்கீல் வருத்தம்

ராம்குமாரை என்னுடைய மூத்த பிள்ளையைப் போல பார்த்துக்கொள்வதாக அவர்களின் பெற்றோரிடம் கூறியிருந்தேன். இனி என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார். ஜாமீன் கிடைத்த பின்னர் கொலையில் உள்ள முக்கியத்தடயங்களை வெளியே சொல்வதாக சொன்னார். அதற்குள் அவரை கொன்று விட்டனர் என்றும் ராம்ராஜ் தெரிவித்துள்ளார். சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மின் கம்பியை கடித்து அவர்…

Read More

சட்டக்கல்லூரி பரீட்சை: மும்மொழியிலும் வினாத்தாள்கள்!

சட்டக்கல்லூரி மாணவர்களின் பரீட்சைக்காக வழங்கப்படும் பரீட்சை வினாத்தாள் அரச மொழி கொள்கைக்கமைய மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அந்த கொள்கை தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இது தொடர்பில் அமைச்சு கிடைத்த முதல் வாரத்திலேயே நான் நடவடிக்கை எடுத்தேன்….

Read More

கட்டணத்தைக் குறைத்தால் இலவச மின்சாரம்

மின் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ‘மின்சாரப் பரிசு’ வழங்கும் வேலைத்திட்டமொன்றை, இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மின்வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ‘கடந்த ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தைக் குறைத்துக்கொண்டவர்களும் இந்த போட்டியில் உள்ளடக்கப்படுவார்கள்’ என்று கூறினார். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் வாடிக்கையாளர்களுக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Read More

முஸ்லிம் சமுகத்தின் உரிமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் தேர்தலே ஊவா தேர்தல்- அமைச்சர் ரிசாத் சூளுரை

முஸ்லிம்களின் உரிமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் தேர்தலாகவே ஊவா மாகாண சபைத் தேர்தலை தான் பார்ப்பதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவிதித்தார்   ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில் மு.காவுடன் இணைந்து போட்டியிடும் அ.இ.ம.கா வின் தேசியத் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வெள்ளி ,சனி ஆகிய தினங்களில் மேற்கொண்ட  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   மு.கா. , அ.இ.ம.கா இத்தேர்தலில் ஒற்றுமைபட்டதானது நாடு பூராகவும் உள்ள 20 இலட்சம்…

Read More

உங்கள் பிரதேசங்களில் இனவாத அச்சுறுத்தலா? – களத்தில் குதிக்க முஸ்லிம் சட்டதரணிகள் தயார்

-AAM. Anzir- முஸ்லிம் பிரதேசங்களில்  தற்போது புதிது புதிதாக உருவாகும் இனவாத அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தின் மூலம் எதிர்கொள்ள முஸ்லிம் சட்டத்தரணிகள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற தயார் என் அறிவித்துள்ளனர். அந்தவகையில் முஸ்லிம் சட்டத்தரணிகளைக் கொண்ட  ஆர்.ஆர்.டி.அமைப்பின் தலை­வ­ர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் இதனை Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார். கீழ்வரும் இலக்கங்கள் மூலமாக தொடர்புகொள்ளலாம் SHAINAS MOHAMED 0767410287 SHAFRAZ HAMZA 0778198075 SAFEEN RAHIM 0771502043 RUSDHI HABIB 0774440019 அதேவேளை இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு தயவுசெய்து…

Read More

கசினோ மட்டுமா சூது. ‘ருஜுனோ’ சூதாட்டம் இல்லையா?

– ஜே.ஜி.ஸ்டீபன், ப.பன்னீர்செல்வம் – கசினோவுக்கு வரியை அதிகரித்துள்ள அரசாங்கம் “ருஜுனோவு”க்கு வரியை நீக்கியுள்ளது. ஏன் கசினோ மட்டுமா சூது. ருஜுனோ சூதாட்டம் இல்லையா என ஜே.வி.பி. எம்.பி நளின்த ஜயதிஸ்ஸ நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். சர்வதேச பிச்சைக் காரர்களாக இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் பிச்சையெடுக்கும் பொருளாதார கொள்கை மாற்றப்பட வேண்டும் எனக் கூறியோர் இன்று வரவு செலவு திட்டம் மூலம் மீண்டும் சர்வதேச பிச்சைக்காரர்களாக மாறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Read More

150 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில் திட்டம்

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மகாத்மா காந்தி புலமைப் பரிசில் திட்டம், இந்த ஆண்டு இலங்கையில் 150 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களுக்கும் இந்த எண்ணிக்கையான புலமை பரிசில்கள் பகிரப்பட்டுள்ளன. பத்ரமுல்லை கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழாவில் இந்த உதவித் தொகையை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, உயர்நிலை கல்வி மாணவர்களுக்கே இந்த உதவித் தொகை வழங்கப்படுவதுடன்…

Read More

திருமண வீட்டு உணவு பிரச்சினை: மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

ஜவ்பர்கான் மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீன முற்றவர்கள் திருமண வீட்டில் உட் கொண்ட உணவு மாதிரிகள் கொழும்பிலுள்ள மருத்துவ ஆய்வு நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக மண்முனைப் பற்று (ஆரையம்பதி) சுகாதார வைத்திய அதிகாரி  வி.பவித்ரா தெரிவித்தார்.  தாழங்குடா பிரதேசத்தில் திருமண வீட்டில் சமைக்கப்பட்ட உணவு மாதிரி மற்றும் இதில் திடீர் சுகயீனமுற்றவரின் மலம் என்பன கொழும்பிலுள்ள மருத்துவ ஆய்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்தோடு மண்முனைப் பற்று(ஆரையம்பதி) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச்…

Read More

பிரதமரின் மேலதிக செயலாளர், ஐடிஎன் தலைவராக நியமனம்

சுயாதீன தொலைக்காட்சி (ஐடிஎன்) வலையமைப்பின் தலைவராக சமன் அதாவுடஹெட்டி இன்று முதல் கடமையாற்றவுள்ளார். இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேலதிக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இந்தியா செல்லும் ஒபாமாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பாகிஸ்தான் ஆதரவோடு இயங்கி வரும் லஷ்கர் இ தொய்வா தீவிரவாத அமைப்பு செயற்பட்டால், பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வருகிறார். இதையடுத்து பாகிஸ்தான் ஆதரவோடு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்வா தீவிரவாத அமைப்பு, காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிகள் மேற்கொண்டு, இங்கு பயங்கரமானத் தாக்குதல் நிகழ்த்தவும் திட்டமிட்டு…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி உதவியில் மன்னார் உப்புக்குளம் பள்ளிவாசால் கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின்  நிதி உதவியில் (15 லட்சம் ரூபா) மன்னார் உப்புக்குளம் பெரியபள்ளியின் கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து யைக்கப்பட்டது… இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் முன்னாள் மன்னார் நகரசபை உறுப்பினர் நகுசீன் மன்னார்  மாவட்ட மீள் குடியேற்ற செயலணியின் இணைப்பாளர் முஜீப் மற்றும் உப்புக்குள பள்ளித்தலைவர் ஊர் பிரமுகர்களும்  கலந்துகொண்டனர்.

Read More

பெருந்தொகை மதுபான போத்தல்களுடன் மூவர் கைது

நாரஹேன்பிட பகுதியில் இருந்து பெருந்தொகையான மதுபான போத்தல்களை கலால் சுற்றிவளைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது, கைப்பற்றியுள்ளனர். இதன்படி 60 இலட்சம் ரூபா பெறுமதியான 800 மதுபான போத்தல்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று (17) மாலை, குறித்த பகுதியில் இருந்த வீடொன்று மற்றும் அதன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் மதுபான போத்தல்கள் இருந்துள்ளன. மேலும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த…

Read More