பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் ஜூன் மாதத்தில் ஒரு வினாடி அதிகம்
பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு வினாடி நீண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டிஸ்கவர் இதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரமானது ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு 00:00:00 என்று மாறுவதற்கு பதிலாக 23:59:60 இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பூமியின் சுழற்சியானது வழக்கத்தை விட ஒரு வினாடி குறைவதால் இது ஏற்படுகிறது. இதனால் பூமியில் உள்ள கடிகாரங்களில் நேரத்தை மாற்றி அமைக்கவேண்டும். கூடுதல் வினாடி அல்லது லீப் வினாடி…
