Headlines

சுவிஸில் நண்பியை கொலை செய்த இலங்கையருக்கு நியூஸிலாந்தில் விளக்கமறியல் நீடிப்பு

குறித்த இலங்கையர் இன்று ஒக்லேன்ட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். 42 வயதான இந்த இலங்கையர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார். சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே அவர் கைது செய்யப்பட்டார். முன்னாள் நண்பியான 23 வயதான கவிதா கந்தையா என்பவரை 2000 ஆம் ஆண்டு பாசெல் நகரில் வைத்து இந்த இலங்கையர் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த இலங்கையர் சார்பில் இன்று பிணை மனு எவையும் தாக்கல் செய்யப்படவில்லை. குறித்த…

Read More

12 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் (10) கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்கள் பயணித்த இரண்டு இழுவை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Read More

சிறுத்தைகளை கொலை செய்வோர் பற்றிய விபரங்களை வழங்கினால் பணப்பரிசு

சிறுத்தைகளை கொலை செய்வோர் பற்றிய விபரங்களை வழங்கும் நபர்களுக்கு பணப் பரிசு வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாணத்தில் சிறுத்தைகள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அகில இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Read More

அ.இ.ம. காங்கிரஸின் அம்பாரை மாவட்ட செயற்குழு கூட்டம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கௌரவ அல்-ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்கள் அம்பாரை மாவட்டத்திற்கான அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு 20-10-2019, இன்று நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள அமீர் பிளேஸில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் M.A.M. தாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரிப்பதோடு தேர்தலை எப்படி நாம் முன்னெடுத்து செல்வது பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமுகர்களாலும் கட்சித் தொண்டர்களாலும்…

Read More

பொதுபலசேனாவுக்கு முழுமையான ஆதரவு வழங்கியவர்தான் இந்த கோட்டாபய ராஜபக்ஷ – ரிஷாட் பதியுதீன்.

பொதுபலசேனாவின் காரியாலயத்தை திறந்து வைத்தவர் இந்த கோட்டாபய ராஜபக்ஷ என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து குருநாகல், தித்தவல்கால பகுதியில் அன்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் காலியிலே பொதுபலசேனாவின் காரியாலயத்தை திறந்து வைப்பதற்காக கோட்டாபய ராஜபக்ச போக இருக்கின்ற விடயம் கேள்விப்பட்ட உடனேயே முன்னாள் ஜனாதிபதியாக…

Read More

குருநாகல் முஸ்லிம்களின் ஒற்றுமை இந்த தேர்தல் முடிவில் வெளிப்படும் – சாபி

குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் சஹாப்தீன் முஹமட் சாபி வைத்திய அதிகாரியாவர். இவர் நீண்ட காலமாக சமூக சேவையில் கால் பதித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை வகுத்துக் கொண்டவர். இவர் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். இவ பத்திரிகைக்கு வழங்கி செவ்வி நேர்காணல் இக்பால் அலி நீங்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான காரணம் என்ன? நான் ஒரு வைத்திய அதிகாரியாக இருந்து சேவைகள் ஆற்றி வந்துள்ளேன் என்பவற்றுக்கப்பால் அதிகளவு சமூக…

Read More

அனுர சேனநாயக்கவிடம் தீவிர விசாரணை

– எம்.எப்.எம்.பஸீர் – பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில்  மேல் மாகாணத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அனுர சேனநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினர் நேற்று (19) இரண்டாவது நாளாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று முன்தினம்  முதல் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவை விசாரணை  செய்யும் நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசேகரவின் கீழான சிறப்புக்…

Read More

வெனிசுவேலாவில் கடும் மின் தட்டுப்பாடு – வேலை நாட்கள் குறைப்பு!

வெனிசுவேலாவில் நிலவும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை எனும் கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது. மின்சாரப் பிரச்சினை தீரும் வரை அரசு ஊழியர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மாத்திரமே வேலைக்கு வரவேண்டும் என துணை ஜனாதிபதி அரிஸ்டோபுலோ இஸ்துரிஸ் தெரிவித்துள்ளார். மின்சார நெருக்கடி காரணமாக சுமார் இருபது லட்சம் அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பணிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை…

Read More

சர்வதேச குழந்தைகள் தினம் இன்று

சர்வதேச குழந்தைகள் தினமாக நவம்பர் 20 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபையால் 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஐ சர்வதேச குழந்தைகள் தினமாக பிரகடணப்படுத்தியது. அதிகளவிலான குழந்தைகள் நாள்தோறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். அடிப்படை கல்வி இல்லாத குழந்தைகள் அனேகம் பேர். மூன்று வேளை உணவுகூட கிடைக்காமலும், சரியான உடை கிடைக்காமலும், முறையான தங்குமிடம் இல்லாமலும் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர்,…

Read More

முஸ்லிம்களின் எதிர்ப்பினை தேடிக்கொள்ள மஹிந்தவும் அவரது குடும்பமுமே காரணம்: எஸ்.பி

மஹிந்த ராஜபக் ஷ யுத்­தத்தை வெற்றி கொண்­டதன் மூலம் 96 வீத­மான நன்­மை­களை வடக்கு தமிழ் மக்­களே பெற்றுக் கொண்­டார்கள். ஆனால் தமிழ் மக்­களை மஹிந்த ராஜபக் ஷவினால் வெற்றி கொள்ள முடி­யாமற் போனது. வெறு­மனே நாம் முஸ்லிம் மக்­களின் எதிர்ப்­பினைத் தேடிக் கொண்டோம். இதற்கு மஹிந்­தவும் அவ­ரது குடும்­ப­முமே காரணம் என கிரா­மிய பொரு­ளா­தார விவ­கார அமைச்சர் எஸ்.பி .திசா­நா­யக்க தெரி­வித்தார். அமைச்சர் திசா­நா­யக்க ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய பேட்­டி­யொன்­றிலே இவ்­வாறு கூறி­யுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது….

Read More

மின்சார நெருக்கடியை ஏற்படுத்த சிலர் முயற்சி

திட்டமிட்டு நீர் மட்டத்தைக் குறைத்து நீர்மின் உற்பத்தியில் நெருக்கடி நிலையை ஏற்படுத்த மின்சார சபையில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொள்வதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் மின்சார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். மின்சாரக் கட்டமைப்பில் சமநிலையைக் குழப்பி மின் நெருக்கடியை தோற்றுவிக்க மின்சார சபையில் உள்ள சிலர்…

Read More

‘முள்ளிக்குளக் காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இன்னும் கையளிக்கப்படவில்லை’ அமைச்சர் ரிஷாட்டிடம் கிராம மக்கள்  அங்கலாய்ப்பு

கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார் முள்ளிக்குள மக்களின் பூர்வீகக் கிராமம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அந்த மக்களுக்கு உரித்துடைய காணிகள் வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு நடைபெறுவதாக முள்ளிக்குள கிராம மக்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் எடுத்துரைத்தனர்.  முள்ளிக்குளக் கிராம மக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிளை நிர்வாகிகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அந்த பிர தேசத்தில் தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறு குறைபாடுகள் பற்றி எடுத்துரைத்தனர்….

Read More