Headlines

மைத்திரி வீடு செல்ல வேண்டும் : உதய கம்மன்பில

எமது நாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளின் ஆலோசணைகளின் பேரிலேயே வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களை உடனடியாக பதவி நீக்க வேண்டும் இல்லாவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகிச்செல்ல வேண்டும் என்று பாராளுமன்ற உருப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். தூய்மையான ஹெல உருமயவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

Read More

இலங்கையில் இ-மோட்டர் சேவை

உலகில் பெரும்பாலான நாடுகளில் செயற்படுத்தப்படும் இ-மோட்டர் முறையை தற்போது இலங்கையிலும் அறிமுகம் செய்யவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் வீட்டில் இருந்தவாறே வாகன அனுமதிபத்திரத்தினை தொலைபேசியின் மூலம் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளும் முறையே இ-மோட்டர் ஆகும். திருகோணமலையில் மோட்டார் வாகன திணைக்களத்தின் காரியாலயம் ஒன்றை திறந்து வைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Read More

‘மனச்சாட்சியுள்ள எந்தவொரு சிறுபான்மை குடிமகனும் கோட்டாவை ஆதரிக்கமாட்டான்’ வவுனியா தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

மனச்சாட்சியுள்ள எந்தவொரு சிறுபான்மை மகனும் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கமாட்டான் எனவும் வாக்களிக்கக் கூடாதெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில், இன்று (03) தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களான எருக்கலங்கல், அண்ணாநகர், முகத்தான்குளம், மறக்காரம்பளை, வாழவைத்தகுளம், மதீனா நகர், சூடுவெந்தபுலவு, பாவற்குளம் ஆகிய கிராமங்களில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற சூறாவளி பிரசாரத்தின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,…

Read More

LANKA ASHOKE LEYLAND (PVT) LTD இன் தலைவராக கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் நியமிப்பு

கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும்,மெட்றோ போலியன் கலாசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் அவர்கள். லங்கா அசோக் லெலன்ட் நிறுவனத்தின் LANKA ASHOKE LEYLAND (PVT) LTD இன் தலைவராக வர்த்தக கைத்தொழில் அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவருமான கௌரவ அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களால். 12/10/2016இல் உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

யானை தாக்கி கணவன் மற்றும் கர்ப்பிணி மனைவி பலி! (2ம் இணைப்பு)

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் யானை தாக்கியதன் காரணமாக மூன்று மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 1.00 மணியளவில் குறித்த குடும்பம் வசித்த வீட்டை தாக்கிய போது வீடு உடைந்த நிலையில் அதனுள் இருந்த மனைவி உயிரிழந்துள்ளார். இதன்போது யானையின் தாக்குதலில் இருந்து தப்ப முனைந்த கணவரும் யானையின் தாக்குதலினால் உயிரிழந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மூதுரை பிறப்பிடமாகவும் நெல்லிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ்.மோகனதாஸ் (30வயது)  அவரது…

Read More

சவூதியில் சாரதி அனுமதி பத்திரத்தை 72 மணித்தியாளங்களுக்குள் புதுப்பிக்கும் வசதி !

சவூதி அரேபியாவில் சாரதி அனுமதிப்பத்திரத்தை துரிதமாக புதுப்பித்துக்கொள்ள புதிய முறையை அந்த நாட்டு போக்குவருத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக சாரதி அனுமதிபத்திரத்துக்கு விண்ணப்பித்து 72 மணித்தியாலங்களுக்குள் அல் வெசல் சேவை ஊடாக உங்கள் முகவரிக்கே அனுப்பப்படுமென அந்த நாட்டு போக்குவருத்து துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை சவூதி அரேபிய போக்க்குவர்த்து திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள முடியும்..

Read More

ரணில் விக்ரமசிங்கவை காட்டிக் கொடுக்கப் போவதில்லை – ஜனாதிபதி

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நடத்தவுள்ள சந்திப்பின் போதுää தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்த ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்புக்களை காட்டிக் கொடுக்க மாட்டேன். முக்கிய அமைச்சர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி ஜனாதிபதி இதனை  தெரிவித்துள்ளார். இதுதொடாபில் சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.(SM)

Read More

உழைக்கும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க குரல் கொடுப்போம்!

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் உழைக்கும் மக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். அந்த வகையில் மலையக உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுக்கவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தமிழ் முற்போக்கு கூட்டணி துணிந்து குரல் கொடுக்கும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தமது செய்தியில், மலையக மக்களின்…

Read More

பட்ஜெட்டில் 3 மடங்குகளினால் விலைகள் குறையும்: அசாத் சாலி

100 நாட்கள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது போல எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். அந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதை விடவும் மூன்று மடங்குகளால் விலைகள் குறையும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாகவே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் கொழும்பில் நேற்று புதன்கிழமை (28)…

Read More

VAT வரி: கொத்து ரொட்டியின் விலை உயர்வு

கொத்து ரொட்டி, ப்ரைட் ரைஸ் மற்றும் டெவல் போன்றவற்றின் விலைகள் உயர்த்தப்பட உள்ளன. வற் வரி காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இதனால் ஹொட்டல் உற்பத்திகளின் விலைகளை உயர்த்த நேரிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, கொத்துரொட்டி, டெவல், ரைஸ் போன்றவற்றின் விலைகள் நாளை முதல் 10 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளது. சோஸ் வகைகள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளின்…

Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை

மனிதக்கொலை தொடர்பில் குற்றச்சாட்டப்பட்ட மூவருக்கு நுவரெலியா மேல்  நீதிமன்றம் இன்று (09) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த உத்தரவினை நுவரெலியா மெல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க பிறப்பித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு தலவாக்கலை டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை வெட்டிக்கொலை செய்தமை தொடர்பில் குறித்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வற் வரி மறு அறி­வித்தல் வரை நிறுத்­தி­வைப்பு.!

ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் 15 சதவீத­மாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வி­ருந்த பெறு­மதி சேர் வரி மறு அறி­வித்தல் வரை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில், உள்­நாட்டு இறை­வரித் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் கல்­யாணி தஹ­நா­யக்க வெள்­ளிக்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் இந்த வரி அதி­க­ரிப்பு நிறுத்­தப்­பட்­டுள்ள விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய, மறு அறி­வித்தல் வரை முன்னர் இருந்­தது போன்று 11 சதவீத­மான பெறு­மதி சேர் வரியே நடை­மு­றையில் இருக்கும் என்றும், யாரும் 15 சதவீத­மாக வரியை அறி­விடக் கூடாது…

Read More