Headlines

20 பேருக்கு போட்டியிட தடை: ஜனாதிபதி தீர்மானம்

கடந்த ஆட்சிக் காலத்தில் ஊழல், மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் 20 பேரின் வெட்புரிமையை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய் இரவு நடைபெற்ற விஷேட சந்திப்பில் இந்த முடிவுகள் எடுக்கபட்டதாக அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக இவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி.க்களான மேர்வின் சில்வா, துமிந்த சில்வா,…

Read More

மாணவரை காணவில்லை!

பண்டாரவளையைச் சேர்ந்த மொஹமட் அஸ்மி என்ற மேற்படி மாணவரை கடந்த (14/06/2015) ஞாயிற்றுக் கிழமை முதல் காணவில்லை. இவர் குறித்த தினமன்று காலை 6.30 மணிக்கு வீட்டிலிருந்து சென்றுள்ளார். மாலை வரை வீடு திரும்பாத நிலையில் இது பற்றி பண்டாரவளைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப் பட்டுள்ளபோதும் இதுவரை இவர் பற்றி எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. இவர் இறுதியாக பச்சை நிற டிசேர்ட்டும், சாம்பல் நிற ஜேர்ஸியும் கருப்பு நிற ட்றவ்சரும் அணிந்திருந்ததாக இவரின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இவர்…

Read More

தெரிவுக் குழுத் தலைவராக சனத் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுத் தலைவராக சனத் ஜயசூரிய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரோடு களுவித்தாரன, ரஞ்சித் மதுரசிங்க மற்றும் உபசாந்த ஆகியோர் தேர்வு குழு அங்கத்தவர்களாக நிமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனது கடமையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி பொறுப்பேற்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Read More

கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலில் புதிய ஜனாதிபதி

அஸ்ரப் ஏ சமத் கண்டி தலாதா மாளிகையில் புதிய ஜனாதிபதி அஸ்கிரிய மகா பீடாதிகளிடம் ஆசிர்வதிப்பதிலும் மற்றும்  கண்டி மீரா மக்கா பள்ளிவாசலிலும் துஆ பிரத்தனையிலும் ஈடுபட்டனர்.

Read More

சர்வதேச வர்த்தகங்களின் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்!

சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளின் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைத் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் மாதம் சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான முகவர் நிறுவனமொன்று அமைக்கப்பட உள்ளது. இந்த நிறுவனம் நிறுவப்படுவதுடன் சர்வதேச வர்த்தகம் குறித்த முகவர் நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் சீனாவுடனும் இந்தியாவுடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட்ட ஒரே நாடாக இலங்கை காணப்படும்….

Read More

வில்பத்து தொடர்பான வழக்கு இன்று

– வாஜித் – பேரினவாத சமூகம்,இனவாத ஊடகங்கள் மற்றும் வங்குரோத்து அரசியல்வாதிகள் ஒன்றாக சேர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட இருக்கின்றது. அமைச்சர் மீது சுமத்தபட்ட குற்றசாட்டுக்கள் றிஷாட் பதியுதீன் வில்பத்து காடுகளை அழித்து முஸ்லிம் வலையம் ஒன்றை உருவாக்குகின்றார்,காட்டு யானைகளை அழிக்கின்றார் என்றும் இன்றும் பல போலியான குற்றசாட்டுகளை சுமத்தியும் ஆறுக்கு மேற்பட்ட வழக்குகளை தொடுத்து உள்ளார்கள். வில்பத்து…

Read More

வடக்கிலும், கிழக்கிலும் 20000 புதிய தொழில் வாய்ப்புக்கள் – அமைச்சர் றிஷாத்

வடக்கிலும்,கிழக்கிலும் 20000 புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அதற்கு அமெரிக்காவின் உதவிகளையும் எதிர்பார்ப்பதாக கூறினார். அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும்,இலங்கைக்கான அமெரிக்க பதில் துதுவர் அன்று சீமானுக்கும் இடையில் இன்று ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் இடம் பெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள்விடுத்தார் மேலும் இந்த சந்திப்பின் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிக்கையில் – அதே வேளை இலங்கையின் நுகர்வு பொருட்களை அமெரிக்க கொள்வனவு…

Read More

தெல்லிப்பளையில் குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் குண்டுகளை கண்டு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

உடுவே தம்மாலோக்கதேரரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு

உடுவே தம்மாலோக்கதேரரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தம்மாலோக்க தேரரை கைது செய்வதற்கு முன்னதாக அவரிடம் வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்வதற்கான போதியளவு ஆதாரங்கள் காணப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

யானை மீது ஏறிக்கொண்டு மரத்தைக் காப்பாத்துமாறு கூறுகின்றனர் – சிராஸ்

– அகமட் எஸ். முகைடீன் – கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்போது சாய்ந்தமருது பிரதேச மக்கள் பெரும் ஆதரவுடன் அன்பாக வரவேற்று ஆசீர்வதித்தனர். இச்சந்தர்ப்பத்தில் மக்கள் கருத்துத்தெரிவிக்கையில் பதினைந்து வருடங்கள் அரசியல் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் வைத்திருந்தபோதிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவிதமான பிரயோசனமும் இருக்கவில்லை. எதனையும் செய்யாத இவர்கள்…

Read More

அமைச்சர் றிஷாத்தின் நிதி ஒதுக்கீட்டில்  85 மில்லியன் பெறுமதியான காபட் பாதை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி  ஒதுக்கீட்டில் அளக்கட்டு,வேப்பங்குளம்,பிச்சைவாணிபக்குளம் கிராமங்களுக்கான    ரூபா 85 மில்லியன் பெறுமதியில் காபட் பாதை அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது அமைச்சரது  இணைப்புச்செயலாளரான முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதீதியாக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் இலங்கையில் நிலவும் நல்லாட்சியை தொடர்ந்து யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிறுபான்மை மக்கள் அமைச்சர்…

Read More

ஜனக பண்டார தென்னகோனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோனை நவம்பர் 11ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனக பண்டார தென்னக்கோன் 1999ல் நடந்த கொலை சம்பவம், தொடர்பில்,  அக்டோபர் 6ம் தேதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த வந்த ஜனக பண்டார தென்னக்கோன், இன்று நீதிமன்றில் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.

Read More