Headlines

மு.கா உறுப்பினர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு

முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் ,உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களை கொழும்புக்கு வருமாறு கட்சியின் தலைமையால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முகா உறுப்பினர் பிரமுகர் எம்மிடம் தெரிவித்தார். பம்பலப்பட்டி சிலோன் ஹோட்டலில் நாளை ஞாயிறு (23)அவசர கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலும் இங்கு தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, அமுலுக்கு வரும் சட்டம்

` போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015 ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் 29 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் நாட்டில் பாவனையில் உள்ளன. இவற்றில் 53 சதவீதமானவை தினமும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால், மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படும்…

Read More

சீமெந்து வாங்க முன்னர் பொதியுறையைப் பாருங்கள்

சீமெந்துக்காக அதிகரிக்கப்பட்ட புதிய விலையானது, புதிய கையிருப்புகளுக்கு மாத்திரமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதலாம் திகதி முதலான கையிருப்புகளுக்கு மாத்திரம் 930 ரூபாய் விலையினைச் செலுத்துமாறு, நுகர்வோர் அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுள்ளது. 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலை, 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை காலமும் 870 ரூபாய்க்கு காணப்பட்ட சீமெந்து மூடையொன்று, 930 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சீமெந்து நிறுவனங்கள் பலவற்றின் வேண்டுகோளுக்கு இனங்கவே, சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதென அதிகாரசபை மேலும் கூறியது.

Read More

பல்கலை மாணவர்கள் மீண்டும் போராட்டம்?

பாறுக் சிகான் யாழ் பல்கலைக்கழக மருதனார்மட நுண்கலைப் பீடத்தின் வரைதலும் வடிவமைத்தலும் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை (26) வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். முகங்களில் பல்வேறு வரைபடங்களை வரைந்து கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருதனார்மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள் கடந்த காலத்தில் சீராக நடைபெறவில்லைஇ ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும் நுண்கலைப் பீடத்தில் வரைதலும் வடிவமைத்தலும் துறைக்கு பரீட்சைகள் நடைபெறவில்லைஇ மற்றும் தமது…

Read More

கடந்த கால திருடர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம்

கடந்த கால திருடர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம். இப்போது கைவசம் 35 “பைல்கள்” உள்ளது. இவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றது என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். டுபாய் வங்கியில் 650 மில்லியன் டொலர்கள் யாருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் பலரின் வங்கிக் கணக்கு தகவல்கள் வெளியில்வரும் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 9 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே…

Read More

அரசியல் கட்சிகளையும் இல்லாமல் செய்யும் நோக்கிலேயே மஹிந்த செயற்படுகின்றார்: மைத்திரி

கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநயாகத்தை முற்றுமுழுதாக அழித்து விடவே ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிடுகின்றார். ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நான் ஜனாதிபதியாவது நிச்சயம். சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தேன். எனக்கு மட்டுமல்ல இந்த அனுபவம் என்னுடன் வெளியேறிய அமைச்சர் ராஜித சேனாரட்ன உள்ளிட்டவர்கள் மற்றும்அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கும் இதே நிலைமையே காணப்படுகின்றது. நாட்டில்…

Read More

ஒபாமா மீது பிடல் காஸ்ட்ரோ பாய்ச்சல்

தேன் தடவிய பேச்சால் கியூபா மக்களை திசைதிருப்ப முயலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு புரட்சியாளரும், கியூபா முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது. இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க…

Read More

உரியவர்கள் மோ. சைக்கிள், சைக்கிளை பெறலாம்

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை உரியவர்கள் பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று கேட்டுக் கொண்டுள்ளது. நெடுந்தீவுச் சந்தைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த லுமாலா சைக்கிள் ஒன்றை நெடுந்தீவுப் பொலிஸார் மீட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். அவ்வாறு கடந்த மே மாதம் ஊர்காவற்றுறைப் பொலிஸார் என்.பி.ஜே.கியூ இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டு நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். அவற்றை உரியவர்கள் பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றப் பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More

புஹாரி பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா!

பிரதம அதிதியாக Dr.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு! முள்ளிப்பொத்தானை, புஹாரி பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பிரதம ஆசிரியை சவ்ஜானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, விழாவினை சிறப்பித்திருந்தார்.

Read More

மஹிந்தவின் அதிகாரத் திமிருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத் திமிருக்கு நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி பாடம் புகட்ட வேண்டும் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பின் ஊழல் மோசடிகளுக்கு எதிராக விசேட ஆணைக்குழுவினூடாக விசாரணைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது எதிரணியின் முதலாவது உத்தியோகபூர்வ பிரச்சாரக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிமை கண்டியில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன…

Read More

சோபித தேரர் மறைவு: அமைச்சர் றிஷாத்  இரங்கல்

இலங்கையின் அரசியலில் மாற்றமொன்று ஏற்படுவதன் மூலம் சிறுபான்மை சமூகங்கள் தமது அரசியல் அந்தஸ்த்தையும், பாதுகாப்பினையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் செயற்பட்டு வந்த சோபித தேரரின் இறப்பு, இலங்கையில் தற்போதைய சூழலில் ஈடுசெய்யப்பட முடியாததொன்று என்று அகில .இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வெளியிட்டுள்ள இறங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மாதுலுவாவ சோபித்த தேரரின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது – ஜனவரி 8 ஆம்…

Read More

குடும்பத்தை கொலை செய்வோம் : 17 வயது சிறுமி துஸ்பிரயோகம்

குடும்பத்தாரை கொலை செய்வோம் என மிரட்டி 17 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவம் கடந்த  22ஆம் திகதி அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பெண்கள் அமைப்பினர் இணைந்து நேற்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரியாலை முள்ளி வீதியைச் சேர்ந்த குறித்த 17 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டிற்கு கடந்த தீபாவளி தினத்தன்று மாலை சென்றுள்ளார். இதன்போது அங்கு வந்த 28 வயதுடைய அதேயிடத்தை சேர்ந்த…

Read More