என்னை இனவாதியாக காண்பிக்கின்றவர்களே ! அது உண்மை என்றால் …3500 வீடுகளை தமிழ் மக்கள் எவ்வாறு பெற்றிருப்பார்கள் …
வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா – வன்னி மாவட்டத்தில் வாழும் மக்களுக்கென கடந்த காலங்களில் 15 ஆயிரம் வீடுகள் வரை பல்வேறு நிறுவனங்கள் நிர்மாணித்துக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரான றிசாத் பதியுதீன் இதில் அதிகமான வீடுகள் தமிழ் மக்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வவுனியா அல்-அரபா பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடத் திறப்புவிழாவிலும்,வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்விலும் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர் எம்.புஹாரி தலைமையில் இடம் பெற்ற…
