எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இருமாடிக்கட்டிடம் திறந்து வைப்பு நிகழ்வு
மன்னார், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இருமாடிக்கட்டிடத்தை கடந்த 23 ஆம் திகதி அமைச்சர் றிஷாத் திறந்துவைத்ததார்.
மன்னார், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இருமாடிக்கட்டிடத்தை கடந்த 23 ஆம் திகதி அமைச்சர் றிஷாத் திறந்துவைத்ததார்.
பினான்ஸ் என்ட் கெரன்ட் நிறுவனத்தில் இடம்பெற்ற பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிலியா கொத்தலாவலைக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து இலட்ச ரூபாய் ரொக்கப் பிணையிலும், 4 சரீரப் பிணையிலும் இவர் விடுதலை செய்யப்படுவதாக கொழும்பு மாவட்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று (29) உத்தரவிட்டு்ள்ளார். இதேவேளை, இவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த வழக்கிலிருந்து இவர் விடுதலை செய்யப்பட்டமையை அடுத்து கோட்டை நீதிமன்றில் ,இவர் மீது தொடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கு…
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷிந்ர ராஜபக்ஷ தற்போது விசாரணைக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச காணியில் நிர்மாணம் மேற்கொள்ளல் மற்றும் காணி விடயத்தில் முறையான விதிமுறைகளை கடைபிடிக்காமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 9ம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண அமைச்சர் எம். ரமேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார். எவ்வாறெனினும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கு பரீட்சைகள் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்ரப் ஏ சமத் சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் 18வது மாநாடு நேற்று கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு நாடுபூராவும் உள்ள 2000 சமுர்த்தி,திவிநகும, சமுர்ததி வங்கி முகாமையாளர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வுக்கு சமுர்த்தி வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவும் பிரதியமைச்சர் எம்.எம். எஸ் அமீர் அலியும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது இந்த சங்கத்திற்காக தனது சொந்த நிதியில் ஒர் இலட்சம் ருபாவை அமைச்சர் சஜித் அன்பளிப்புச் செய்தார். இங்கு உரையாற்றிய…
நல்லாட்சி அலுத்துப் போய், வெகு காலமாகிவிட்டது. இப்போது அதன் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கி விட்டது. “நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை, ஜனாதிபதியும் பிரதமரும் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால், அடுத்த தேர்தலில், மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியிருக்கின்றார். மேலும், எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது, மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும், மேற்படி ஆட்சித் தலைவர்கள் இருவரிடத்திலும், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை விடுத்திருக்கின்றார். வரக்காபொல பிரதேசத்தில், சிங்கள மக்கள் மத்தியில் அமைச்சர்…
பிரதேசபை வேட்பாளர் றஸீஸின் வேண்டுகோளுக்கினங்க மிக நீண்ட காலமாக எந்தவொரு அபிவிருத்தியும் செய்யப்படாதிருந்த மெடிவெலகெதர பாதைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் சதொச பிரதித்லைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) அவர்களின் ஆலோசனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய உப தவிசாளர் எம்.சி. இர்பான், பிரதேசபை உறுப்பினர் ஸபீர் ஆகியோரின் வேண்டுகோளுக்கினங்க பாதை புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசபை தவிசாளர் விஜய ஸ்ரீ ஏகநாயக, ரிதீகம…
இலங்கை போக்குவரத்துச் சபையை எந்தவகையிலும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபயசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில இன்று(8) பாராளுமன்றத்தில் வாய்மொழி மூலம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதில் அளிக்கையிலேயே இந்;;த விடயத்தை குறிப்பிட்டார். இலங்கை போக்குவரத்து சேவை தேசிய சொத்தாகும் இதனால் எந்தவகையிலும் தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கிரீஸ் நாட்டின் கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர் ஐம்பத்தெட்டு சிரிய அகதிகளுடன் சென்ற காற்றடைத்த படகை கவிழ்க்க முயன்ற வீடியோ துருக்கி அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கூரிய முனை கொண்ட ஈட்டியால், சிரிய நாட்டு அகதிகளின் படகை வேண்டுமென்றே சேதப்படுத்திவிட்டார். இதன்பின்னர், கவிழத் தொடங்கிய அந்தப் படகிலிருந்த சிரிய அகதிகளை காப்பாற்றிய துருக்கி அரசு இந்த வீடியோவை சமீபத்தில் பகிர்ந்துள்ளது. வழக்கமாக தமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் வீடியோவாக பதிவு செய்யும் துருக்கி அரசாங்கத்தின் இந்த வீடியோ இணைப்பின்…
தமிழ் பயங்கரவாதத்திற்கு அப்பால் முஸ்லிம் கிறிஸ்தவ பயங்கரவாத செயற்பாடுகளையும் நியாயப்படுத்தவே ஐ.நாவின் புதிய ஆணையாளர் செய்யித் அல் – ஹுசைன் முயற்சிக்கின்றார். இலங்கையின் நடந்து முடிந்த பழைய விடயங்களை மீண்டும் கிளறிவிட்டு நாட்டை சீரழிக்க வேண்டாம் என பொதுபலசேனா பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுபலசேனா அமைப்பினர் நேற்று கிருலப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ்அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; ஐக்கிய நாடுகள் மனித…
சகோதர இனங்களுடன் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் வாழ்வதன் மூலமே மீள்குடியேற்றத்தின் வெற்றி தங்கி உள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் மீள்குடியேறிய மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த பின்னர் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, 25 ஆண்டுகள் தென்னிலங்கை அகதி முகாம்களில் நாம் பட்ட கஷ்டங்கள் போதும். இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும். சிறுசிறு பிரச்சினைகளுக்காக நமக்குள் அடிபட்டுக்கொண்டிருக்க முடியாது. அதேபோன்று மாற்றுச் சமூகத்தைச்…
பாரியளவில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத்திடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. நிதி நிறுவனமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்தே அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.