Headlines

பாதுகாப்பு கட்டமைப்பில் புதிய மாற்றங்கள்; பலர் வெளியேற்றம்

புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு கட்டமைப்பில் உடனடி மாற்றங்களை செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய  பாதுகாப்பு கட்டமைப்பில் பதவியில் உள்ள இராணுவத்தளபதி, விமானப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர் , சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடத்திலேயே இந்த மாற்றத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தற்போதைய இராணுவ தளபதி ஜெனரல் தயா ரட்னாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோரை…

Read More

தரமற்ற ஒருதொகை லஞ்சீட்கள் மீட்பு

உணவு பொதியிட பயன்படுத்தப்படும் தரமற்ற ஒருதொகை பொலித்தின்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளன. போகந்தர தெற்கு மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த, பொலித்தின் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் இருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக, அதிகார சபையின் தலைவர் ஷசித திலகரத்ன குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய போகந்தர தெற்கு பகுதியிலுள்ள நிறுவனத்தில் இருந்து தலா 10 சீட்கள் அடங்கிய 510 பக்கற்றுக்களும் இரத்மலானை நிறுவனத்தில் இருந்து, இதுபோன்ற 410 பக்கற்றுக்களும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த பொருள்களை…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் புதுக்குடியிருப்பு பாடசாலை அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.

அமைச்சர் ரிஷாட் பதியுதினின் நிதிஒதுக்கீட்டின் கீழ்புதுக்குடியிருப்பு பாடசாலையின் புனரமைப்பு கட்டிட வேலையை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.ஜே.எம். முஜாஹிர் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எம்.எம். முஜீப், பாடசாலை அதிபர் பஸ்மி மற்றும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஹமீம் அவர்களுடன் புதுக்குடியிருப்பு பள்ளிவாசல் தலைவர் ஐயுப் அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Read More

வளைகுடாவில் நாளை முதல் ரமழான் நோன்பு!

சவூதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நேற்று, இரவு சவூதியில் எந்த பகுதிகளிலும் ரமழான்  பிறை தென்படாததால் ஷஃபான் பிறை 30 என கணக்கிடப் பட்டு, நாளை வியாழன் ரமழான்  முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் இதற்கிடையே நேற்று ரமழான்  பிறை தென்பட்டால் உடன் தகவல் தர வேண்டும் என்று சவூதி வாழ் மக்களுக்கு சவூதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஊத்துச்சேனை பிரதேசத்தில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

நேற்று 19.02.2017 ஆம் திகதி ஊத்துச்சேனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மோகன்  தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் , மீனவர்களுக்கான மீன் பிடி வலை, மண்வெட்டி, மற்றும்  சோளன் விதைகளும் வழங்கி வைக்கப்பட்டது. யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்குவதன் மூலம்  அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்படுவதாக…

Read More

அனைவரிடத்திலும் ஒரு அன்பான வேண்டுகோள்!

படத்தில் காட்டப்பட்டுள்ள அஹமட்லெப்பை ஹாரூன் நௌசாட் என்ற சம்மாந்துறையைச் சேர்ந்த சகோதரரது கடவுச் சீட்டு கொழும்பில் வைத்து (All Countries) தவறவிடப்பட்டு விட்டது அல்லது தொலைந்து விட்டது. Passport No : N3072525 இதனைக் யாராவது கண்டெடுத்தால் கீழே வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி அறியத் தரவும் என்பதை அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம். இர்சாட்  : 0779441312 பசீர்  : 0770774465 நௌசாட் : 0779783559 வீட்டு முகவரி  No : 76/15/06,  Fowse Mawatha,  Sennal Girammam – 01,…

Read More

‘நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகத்தை இடமாற்றக்கூடாது’ அமைச்சா் ரிஷாட், ஐ.ம.கூ. தலைவா் ஹசன்அலி வலியுறுத்தல்!

-ஊடகப்பிரிவு- நிந்தவூரில் உள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை வேறெந்த பிரதேசத்திற்கும் இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சா் கலாநிதி சரத் அமுனுகமவிடம் எழுத்துமூலம் முன்வைத்துள்ள கோரிக்கையிலேயே அமைச்சா் இவ் வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன்அலியும் நிந்தவூரிலேயே மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகம்…

Read More

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகிறது!

நடந்து முடிந்த க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். இதேவேளை, க.பொ.த சா/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 5ம் திகதிவரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Read More

தாருல் உலும் வித்தியாலய அதிபர் பைஸல் தலைமையிலான குழு பிரதி அமைச்சர் அமீர் அலியை சந்திப்பு

ஒட்டமாவடி தாருல் உலும் வித்தியாலய அதிபர் பைஸல் தலைமையில் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி சந்தித்து பாடசாலையின் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அன்மாயில்  கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற பிரதி அமைச்சர், அடுத்த வருடம் எனது நிதி ஒதுக்கீட்டு மூலம் நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.

Read More

அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த வீடியோவை பார்க்காதவர் நஷ்டவாளியே!

பலஸ்தீனில் முஸ்லிம்களுக்கும் யுத வெறியர்களுக்கும் இடையே பிரச்சனைகள் வளர்ந்து வருகிறது இன்று முஸ்லிம்களின் புனித இல்லமான பைத்துல் முகத்தஸில் தொழுகைக்கா சென்ற முஸ்லிம்களை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தியது தடுப்பு சுவராக நின்று முஸ்லிம்களை புனித தலத்தை நோக்கி முன்னேற விடாமல் தடுத்த இஸ்றேல் இராணுவத்தின் முன்பே தொழுகை விரிப்புகளை விரித்து வீதியிலேயே முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்றினர் அந்த அர்புதமான காட்சியை தான் காட்சி விளக்குகிறது கீழ் கானும் வீடியோ    

Read More