முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை விஷேட அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள் – ரீட்டாவிடம் அமைச்சர் றிஷாத்
அரசாங்கத்தின் எந்த ஓர் அரசியல் தீர்வு முயற்சியிலும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதோடு அவர்கள் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உரிய தீர்வு கிடைக்கச்செய்ய வழி வகுக்குமாறு விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடேயிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். இலங்கை வந்துள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சிறுபான்மைச்சமூகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கான விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக்…
