சர்வதேச தலையீடுகளை அரசாங்கம் சரியான முறையில் கையாளும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான அறிக்கை உள்ளக விசாரணைகளை பலப்படுத்தும் வகையில் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கை குறித்த சர்வதேச தலையீடுகளை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் கையாளும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தவறியேனும் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காவிடின் தொடர்ந்தும் மஹிந்தவின் ஆக்கிரமிப்பில் நாடு இருந்திருந்தால் எமது இராணுவ வீரர்கள் நிச்சயமாக சர்வதேச நீதிமன்றில் தண்டிக்கப்பட்டிருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது…
