Headlines

களுத்துறையில் நீர்வெட்டு

களுத்துறை பிரதேசத்தின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குறித்த நீர் வெட்டு இன்று காலை 8 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டானது வாதுவ, களுத்துறை, பயாகல, அளுத்கம, பேருவளை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளது. களுத்துறை கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பொன்சேகாவின் அமைச்சுக்கான குறை நிரப்பு நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சே­காவின் பிர­தேச அபி­வி­ருத்தி அமைச்­சுக்­கான 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா குறை­நி­ரப்பு நிதி ஒதுக்­கீடு செய்­வ­தற்கு பாரா­ளு­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று  பிரதேச அபி­வி­ருத்தி அமைச்­ச­ரான பீல்ட் மார்ஷல் சரத் ­பொன்­சேகா தனது அமைச்­சுக்கு 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா­வுக்­கான குறை நிரப்பு பிரே­ர­ணையை சமர்ப்­பித்தார். இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற விவா­தங்­களை தொடர்ந்து இத்­தொ­கையை ஒதுக்கீடு செய்வதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More

என் நண்பனை புதைக்க நானே குழி தோண்டினேன் – ரோஹிங்க்யா முஸ்லிம் சகோதரர் கண்ணீர் ரிப்போட்

அபுஷெய்க் முஹம்மது 1.ஒரு வருடத்திற்கு முன்பு ரோஹிங்க்யா முஸ்லிம்களை கடத்திய கொடுமைக்காரர்களை விட்டும் அவர்களின் முகாம்களை விட்டும் தப்பி சென்று இருக்கின்றார் தோஹா . 2.தோஹா மற்றும் அவருடைய நண்பர்கள் முகாம்களை கண்காணிக்கும் நபர்களால் கொடூரமான முறையால் இரும்புத்தடி மற்றும் கட்டையால் பெற்ற தாக்குதல் பொறுக்க முடியாமல் தப்பிச்சென்று உள்ளனர் . 3.அடர்ந்த காட்டுப்பகுதியான மலேசியா -தாய்லாந்த் நாட்டின் எல்லையோரப் பகுதிகளான வாங் கெலிஅன் என்ற இடத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த கொடுமைகள் அரங்கேறி உள்ளன ….

Read More

முன்னாள் சதோச தலைவர் கைது

முன்னாள் சதோச தலைவர் நலின் பெர்னாண்டோ சற்றுமுன்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, உத்தியோகபூர்வ வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Read More

இனத்தை மையப்படுத்திய யுத்தம் இல்லை

எமது இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர, ஓர் இனத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல.

Read More

காட்டு யானை தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணிக்கு இரட்டை சிசுக்கள்

மட்டக்களப்பு தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காட்டு யானைத் தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணித் தாயான தம்பிராசா சுயமலர் (வயது 17) என்பவரின் கர்ப்பத்தில் இரட்டை சிசுக்கள் இருந்தது, பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் அவரது கணவனும் காட்டு யானையால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி விக்ரம ஆராச்சியின் அறிக்கையில் 17 வயதான இந்த இளம் கர்ப்பிணித் தாய்க்கு காட்டு யானைத் தாக்குதலால் தலையில்…

Read More

கொண்டையாவின் இரத்தமாதிரி ஒத்துப்போகவில்லை

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொண்டையாவின் இரத்தமாதிரி குற்றத்துடன் ஒத்துப்போகவில்லை என  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சேயாவை தான் கொலை செய்ததாக கொண்டையாவின் சகோதரன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

“வருடாந்த ஜீஎஸ்பி (GSP) பிளஸ் ஏற்றுமதி வருவாயை விட, இலங்கையர்களின் புகையிலை பாவனை 37 சதவீதம் உயர்வானது” புகையிலை செய்கைத் தடை தொடர்பான மாற்றுக் கண்ணோட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் வருடாந்த ஜீஎஸ்பி பிளஸ் ஏற்றுமதி வருவாய் சுமார் 480 மில்லியன் அமெரிக்க டொலராக மட்டுமே இருக்கும் நிலையில், இலங்கையர்களின் வருடாந்த புகையிலை பொருட்களின் பாவனை வருடத்துக்கு 660 மில்லியன் அமெரிக்க டொலரை விட அதிகமானதாக காணப்படுகின்றது எனவும், பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையே நாம் செலவிட்டு வருகின்றோம் எனவும் புகையிலைப் பாவனையின் யதார்த்த நிலை இதுவே எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புகையிலைச் செய்கைத்…

Read More

புனித நோன்பு நிமித்தம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள், முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நாளை (18) விடுமுறை வழங்கப்படவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புனித நோன்பு ஆரம்பமாகவுள்ளதால் இவ்விடுமுறை வழங்கப்படவுள்ளது. இவ்வாறு விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் எதிர்வரும் ஜுலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ; பர்மா கொடியும் எரிப்பு (Photo)

அஸ்ரப் ஏ சமத் ஜக்கிய சமாதாண இயக்கம் ஏற்பாடு செய்த பர்மாவில் வாழும் முஸ்லீம்களுக்கான அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று ஜூம்ஆத் தொழுகைக்குப் பின் கொழும்பு தெவட்டகா பள்ளியில் இருந்து ஆரம்பித்து ரொஸ்மிட் பிளேசில் உள்ள மியன்மார் ;தூதுவரடிடம் கண்டன அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சர் றிஷாத் பதியுதீன், மேல்மாகாண சபை உறுப்பிணர்கள் முஜிபு ரஹ்மான், பைருஸ் ஹாஜி, தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி ஆகியேர்ர் ஊர்வலமாகச் சென்று தூதுவரிடம் கண்டன அறிக்கையும் அப்பாவி மக்களை…

Read More

திஸ்ஸ பிணையில் விடுதலை

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஒப்பந்நதம் மேற்கொள்ளப்பட்டாதாக போலியான ஆவணங்களை காண்பித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று இவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

Read More

தகவல் தொழிநுட்ப போட்டியில் கல்முனை ஸாஹிராவுக்கு 2ஆம் இடம்

 SLIIT இனால் நடாத்தப்பட்ட “CODEFEST 2014” தகவல் தொழிநுட்ப போட்டிகளின் இறுதிச் சுற்றில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசலை அணி, நாடளாவிய ரீதியில் 2ஆம் இடத்தைப் பெற்று ரூபா 50,000 பணப்பரிசையும் வென்றுள்ளது. இன்று (24.10.2014) காலை 8 மணிக்கு, மாலபேயில் அமைந்துள்ள SLIIT வளாகத்தில் இப்போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் கல்முனை ஸாஹிராவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய அணியில் ஹசீப் மொஹமட், KMM.அஸ்ஸாம் ஹுசைன், MJM.முதஸ்ஸீர் ஆகியோர் இடம்பெற்றனர். இதில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி, கொழும்பு தேஸ்டன்…

Read More