வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களில் பலர் படுகொலை
வெள்ளை வானில் கடத்தப்பட்ட வர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டவர்கள் கிரித்தலே இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இயங்கி வந்த சித்திரவதை மற்றும் கொலை முகாமில் கடுமை யாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் வெளியிடங்களில் உள்ள கல்லறைகளில் மேல் பாகம் திறக்கப்பட்டு அந்த கல்லறைகளுக்குள் மறைத்து வைக்கப்…
