Headlines

ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவின் வெற்றிப் பயணத்தில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜீத் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் நேற்று(22) கருக்காமுனையில் உள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந் தலைமையில் நடை பெற்ற இக் கலந்துரையாடலில் சஜீத் பிரேமதாசவின் வெற்றிக்கான பயணம் தொடர்பில் பேசப்பட்டது.. இதில் அப்பகுதியின் கட்சி ஆதரவாளர்கள் கிண்ணியா நகர சபை உறுப்பினர்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு இடம் பெறவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தெரிவித்தார். கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில்…

Read More

அனைவரும் சமம் என கூறிய தலைவரே எமது நாட்டுக்கு சிறந்தவர்! – சஜிதின் வெற்றியை நிச்சயித்துக் கூறுகின்றார் இஸ்மாயில் எம்.பி

நாங்கள் இன்று சஜிதை ஆதரக்க முனைந்திருப்பது அவரது முழு மூச்சான சமூக சிந்தனைக்காவே தான்! சஜித் பிரேதாசவுடன் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளோம். அந்த சந்தர்ப்பத்தில் சிறுபாண்மைக்கு நீங்கள் தரும் உத்தரவாதம் என்னவென்று வினவிய வேளையில் அவர் கூறிய முதல் வார்த்தை ‘இந்நாட்டில் சிறுபாண்மை, பெரும்பாண்மை என்ற எண்ணமே வேண்டாம். இலங்கையர் என்ற வகையில் அனைவரும் சமம்’ என்பதாகும். இதுதான் சஜித்திடமுள்ள உயரிய பண்பு. – இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். புதிய ஜனநாய…

Read More

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எந்தவொரு பிரச்சனை வருவதற்கும் நாம் இடமளியோம் அமைச்சர் ரிஷாத்..

பயங்கரவாதி சஹ்ரானோடு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பு பட்டதாகக் கூறி சம்பந்தமே இல்லாத பழையதொரு ஒளி நாடாவினை வைத்துக் கொண்டு   அவரை கைது செய்ய வேண்டும் என நாசகாரச் செயற்பாட்டாளர்கள் சதித் திட்டமொன்றை தீட்டி அவர் மீது    வேண்டுமென்றே குற்றச்சாட்டொன்றை சுமத்துகின்றார்கள். அவ்வாறான அநாகரீகம் மிக்கவர்களின் செயற்பாடுகளை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மிக வன்மையாக கண்டிப்பதுடன், சகோதரர் ரவூப் ஹக்கீமுக்கு எந்தவொரு பிரச்சினை வருவதற்கும் நாம் எந்தவொரு விட்டுக் கொடுப்புக்களையும் புரியப்…

Read More

கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம்,மேலங்கிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டம் தி/கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கான போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் பாடசாலை உதைப் பந்தாட்ட வீரர்களுக்கான மேலங்கிகளும் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வானது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று ( 21) காலை பாடசாலை வளாகத்தில் வைத்து பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.சலீம் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன. 18,20 வயதின் கீழ் உள்ள  உதைப்பந்தாட்ட வீரர்களுக்கான மேலங்கிகளும் பிரதியமைச்சரால் வழங்கப்பட்டன. இதன்…

Read More

அ.இ.ம. காங்கிரஸின் அம்பாரை மாவட்ட செயற்குழு கூட்டம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கௌரவ அல்-ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்கள் அம்பாரை மாவட்டத்திற்கான அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு 20-10-2019, இன்று நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள அமீர் பிளேஸில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் M.A.M. தாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரிப்பதோடு தேர்தலை எப்படி நாம் முன்னெடுத்து செல்வது பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமுகர்களாலும் கட்சித் தொண்டர்களாலும்…

Read More

அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள ஹிஸ்புல்லாஹ் தன்னுடைய பிள்ளையை அறுத்துப் பலியிடவும் தயங்க மாட்டார், பொய் சொல்வதிலும் சத்தியம் பண்ணுவதிலும் அவரை மிஞ்ச யாருமே கிடையாது – அமைச்சர் அமீர் அலி

கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்கச் சொன்னால் காத்தான்குடி சமூகம் வாக்களிக்காது என்பதனால் ஹிஸ்புல்லாஹ்வை மறைமுகமாக பஷீல் ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியுள்ளார் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். நாம் யாரை ஆதரிக்க வேண்டும் எனும் கருப்பொருளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா கிளை ஏற்பாடு செய்த நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு ஓட்டமாவடி மன்னூ ஸல்வா வளாகத்தில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர்…

Read More

அன்னத்திற்கு வாக்களியுங்கள் ,சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க முடியும்_காத்தான்குடியில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து சஜீத் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம் இதனால் தான் சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க முடியும் என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று (19) இடம் பெற்ற ஐக்கிய தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவு பொதுக் கூட்டத்தில்” ஒன்றாய் முன்னோக்கி” எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்  18 ஆவது திருத்தச்…

Read More

இளைஞர் மாநாட்டுக்காண ஆலோசனை கலந்துரையாடல்

எதிர்வரும் 24ம் திகதி வியாழக்கிழமை கிண்ணியா மண்ணில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாட்டுக்காண முன் ஆயத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (20) காலை 9.30 மணியளவில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் மாவட்ட இளைஞர்கள் பங்கு கொண்டதுடன் இளைஞர்களின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி…

Read More

சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள்- ஏறாவூரில் அமைச்சர் ரிஷாத் உருக்கமான கோரிக்கை

சிறுபான்மையினரின் இருப்பையும் பாதுகாப்பையும் அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கூடாரத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக  நாம் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீபின் தலைமையில் ஏறாவூரில்  நேற்று (18) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில்  அமைச்சர் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி  வேட்பாளர் சஜித்தை ஆதரித்து முதல் முதலாக…

Read More

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க வேண்டும் புத்தளத்தில் அமைச்சர் ரிஷாத்

இந்த தேர்தலில் நாம் எடுக்கின்ற முடிவே எமது நாட்டினதும்,மக்களினதும்,சுதந்திரம்,பாதுகாப்பு,அபிவிருத்தி என்பவைகளை கொண்டுவரும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் எமக்கு ஆபத்துக்கள் வருகின்ற போது அதற்காக ஜனநாயக ரீதியாக வேண்டிய சமூகமே முஸ்லிம் சமூகம் என்றும் கூறினார். புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிளைகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் தில்லையடி அம்மார் மண்டபத்தில் சனிக்கிழமை இடம் பெற்ற போது அமைச்சர் றிசாத் பதியுதீன்…

Read More

யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்று கட்சியின் முக்கியஸ்தர்களால் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

Read More