Headlines

“கல்விக்கு உதவி செய்தோரை சமூகம் ஒரு நாளும் மறப்பதில்லை” – மாவனல்லை ஹெம்மாதகமயில் அமைச்சர் ரிஷாட்!

கல்விச் சமூகத்தினதும் நலன் விரும்பிகளினதும்   பூரண ஒத்துழைப்பு இருந்தால் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியை மேலும்  உயர்த்த முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாவனல்லை, ஹெம்மாதகம அல்/அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவும், அதனையொட்டி நடைபெறும் கல்விக் கண்காட்சி மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஆகிய நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். அமைச்சர் மேலும் கூறியதாவது, பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியில் நமது…

Read More

முஸ்லிம் மீடியா போரத்தின் போட்டிக்கான இறுதித் திகதி நீடிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடாத்தும் பரிசுப் போட்டிகளுக்கான இறுதித் திகதி ஒகஸ்ட் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Read More

பள்ளி நம்பிக்கையாளர் சபைகள் – சமகாலப் பார்வை

பள்ளிகள் தொழுகைக்காக மாத்திரம் உருவாக்கப்பட்டதல்ல என்பது உண்மைதான். இஸ்லாமிய அரசின் ராஜ காரிய அலுவல்களின் கேந்திரமாக பள்ளிவாயல்கள் காணப்பட்டன.ஸகாத் சேகரிப்பு, போருக்குப் படை திரட்டுதல்,கனீமத் பொருட்கள் பகிர்ந்தளித்தல், குற்றவிசாரணைகள் நடத்துதல்,வெளிநாட்டு அரசதானிகளைச் சந்தித்தல் போன்ற பலவகையான நோக்கங்களுக்காக பள்ளிகள் பாவிக்கப்பட்டன என்பதில் சந்தேகமில்லைதான். ஆனால் ஹசனலி அவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என ஏன் அறிக்கை விட்டீர்கள் என்ற கேள்விக்கு பள்ளிகள் தொழுகைக்காக மாத்திரம் அல்ல என்ற பதில் சற்று ஜீரணிக்க முடியாமல்  இருக்கிறது. இவர்கள் இஸ்லாத்தை…

Read More

மியன்மார் வௌ்ளப்பெருக்கில் ஒரு மில்லியன் மக்கள் பாதிப்பு!

மியன்மாரில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பம் முதல் பெய்து வரும் கடும் மழை மற்றும் வௌ்ள அனர்த்தத்தினால் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அலுவலக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவ் வௌ்ளப் பெருக்கினால் 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் 1.2 மில்லியன் ஏக்கர்கள் நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது. ஆயினும் சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் கல்விக்காக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரவட்டி டெல்ரா பிரதேச மக்களுக்கு (Irrawaddy Delta region) இன்னமும் அவதானத்துடன் இருக்கும்…

Read More

மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அ.இ.ம.கா வில் மீண்டும் இணைவு

– சுஐப் எம் காசிம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸை கொழும்பு மாவட்டத்தில் புத்துயிரூட்ட தான் திட சங்கற்பம் கொண்டுள்ளதாகவும் மக்கள் சேவகன் அமைச்சர் றிஷாட்டின் கரத்தை பலப்படுத்த தான் உறுதி பூண்டுள்ளதாகவும் மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் தெரிவித்தார். அமைச்சர் றிஷாட் பதியுதீனை கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்த சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் ஹாஜியார், சிரேஷ்ட சட்டத்தரணி என் எம்…

Read More

நாட்டில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படும்: இலங்கை மின்சார சபை

நாடளாவிய ரீதியில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. இந்த மின்வெட்டானது  தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படுமென மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. நுரைச்சுாலை அனல் மின்நிலைய செயலிழப்பே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஸ்லிம்களுக்கு எதை வழங்க வேண்டுமென கூறும் அருகதை வடமாகாண சபைகுக் கிடையாது

– சுஐப் எம்.காசிம் – வடமாகாண சபை தயாரித்துள்ள அரசியல் அமைப்பு வரைவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவில்லை எனவும், ஆனால் எந்தவொரு வரைவையும் தயாரிப்பதற்கு வடமாகாண சபைக்கும், எந்த ஒரு கட்சிக்கும் உரிமை உண்டு எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார் வவுனியா நெலுங்குளத்தில் நேற்று (24/04/2016) காலை 317 வது லங்கா சதொச கிளையை அங்குரார்ப்பணம் செய்துவைத்த பின்னர், அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள், வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ள…

Read More

முஸ்லிம் பாடசாலைகளுக்கு, 3 நாள் விடுமுறை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் காரணமாக அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஓகஸ்ட் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை பிரிவு, எதிர் வரும் ஓகஸ்ட் 17-19 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு தெரிவித்துள்ளதோடு, ஓகஸ்ட் 20ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை திறக்குமாறும் தெரிவித்துள்ளது

Read More

இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு ராஜ்ஜிய தூதரகத்தின் புதிய வீசா நிலையம்

ஏ.எஸ்.எம்.ஜாவித் இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு ராஜ்ஜிய தூதரகத்தின்   புதிய வீசா நிலையம் கொழும்பு-03, ரீட் அவனியு, இல. 112 இல் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல்.பிரீஸினால் உத்தியோக பூர்வமாக நேற்று (06) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தின் தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே. அல்-முல்லா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அமைச்சர்களான றவுப் ஹக்கீம், அதாவுட செனிவிரத்ன, டிலான் பெரோ, ஐக்கிய அரபு இராட்சியத்தின் (யு.ஏ.இ) வெளிநாட்டு அமைச்சின் செயலாளர்…

Read More

மீள்குடியேற்றச் செயலணிக்கு எதிரான எறிகணைகள் சமூக நல்லிணக்கத்துக்கு வேட்டு வைக்குமா?

-சுஐப் எம். காசிம்-  நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் சிதைந்து போன சமூக நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதில் இன்று வரைக்கும் மீள்குடியேற்றமே தடையாகவுள்ளது. ஏட்டிக்குப் போட்டியான பல கருத்தியல் தர்க்கங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட வடமாகாண செயலணியும் இந்தத் தர்க்கக் கணைகளுக்கு இலக்காகத் தவறவில்லை. எனினும் எல்லாத் தர்க்கங்களும் இனவாத நதியிலிருந்து பிரிந்து பாயும் கிளை ஆறுகளாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளன. எந்த நல்லிணக்கத்துக்காக மீள்குடியேற்றம் அவசியப்படுகிறதோ அந்த அவசியத்தின் இருப்பை பலமிழக்கும் வகையிலேயே இந்தத் தர்க்கங்கள் முளைவிட்டுக் கிளை விடுகின்றன….

Read More