Headlines

‘ஆண்மை நீக்கம்’ செய்யுங்கள் -வாசுதேவ நாணயக்கார

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஆதரவளிக்க முடியாதெனத் தெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவரும் எதிர்க்கட்சி எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார, சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு ‘ஆண்மை நீக்கம்’ செய்யுமாறு ஆலோசனையொன்றையும் முன்வைத்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற மரண தண்டனையை அமுல்படுத்தக்கோரும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு ஆலோசனை முன்வைத்தார் வாசுதேவ நாணயக்கார.

Read More

தலைவர் முடிவு நியாயமானது! அ.இ.ம.கா வேட்பாளர்கள் கூட்டறிக்கை

– ஏ.எச்.எம்.பூமுதீன் – .இ.ம.கா வுக்கு கஷ்டப்பட்டு வாக்கு திரட்டிய நாங்கள் இருக்கும் போது வீட்டிற்குள் சொகுசாக இருந்த கட்சியின் செயலாளர் நாயகத்தை எம்பியாக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இவ்வாறு நடந்த முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் அ.இ.ம.கா சார்பில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களும் ஒருமித்;த நிலையில் கருத்து வெளியிட்டுள்ளனர். 10 வேட்பாளர்களும் ஒருமித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது வருமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அ.இ.ம.கா வுக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் நியமனத்தை கட்சியின்…

Read More

நாளை ஞானசாரவின் வழக்கு; சட்டம் தனது கடமையை செய்யும்

ஞானசார தேரரின் கைது தொடர்பாக பெரும்பான்மை சிங்கள மக்களிடத்தில் எதுவித தாக்கங்களும் ஏற்படாமை பொதுபல சேனா அமைப்புக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவ்வமைப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் எமக்கு அறியக்கிடைத்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்தலை எதிர்கொண்ட பொதுபல சேனா மூக்குடைத்து கொண்டது. அதனை தொடர்ந்து சிறிது துவண்டு போன பொதுபல சேனா ஞானசார தேரரின் கைது சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்திருந்தது. இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஞானசார…

Read More

மெகசின் சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு!

கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெளிக்கடை சிறைச்சாலைகளுக்கான பிரதான வாயில் முற்றாக மூடப்பட்டுள்ளதோடு எந்தவொரு வாகனமும் அதனூடாக பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். சில நாசகார கும்பல்கள் சிறைச்சாலைக்குள் அத்துமீறி புகுந்து குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதே பாதுகாப்பு…

Read More

பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சராகிறார் லக்ஸ்மன் கிரியால்ல….!

பாராளுமன்ற அவை தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியல்ல அவர்கள் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை பெருப்பேற்கும் நிகழ்வில் பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். இன்று நண்பகல் பன்னிரண்டு மணிக்கு இடம்பெறவுள்ள  அமைச்சரவை பெருப்பேற்கும் நிகழ்வில்  கண்டி மாவட்டத்தில் இம்முறை அதிகூடிய சாதனை விருப்பு வாக்குகளை பதிவு செய்த லக்ஸ்மன் கிரியல்ல பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

காக்கைதீவு கடற்கரைப்பூங்கா திறந்து வைப்பு

கொழும்பு வடக்கில்  275 மில்லியன் ரூபா செலவில் மீள்நிர்மாணிக்கப்பட்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா கடந்த சனிக்கிழமை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதனை அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை முதல்வர் முஸம்மில் ஆகியோர் திறந்து வைத்தனர். 7.5 ஹெடேயர் பரப்பளவைக் கொண்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா, 275 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பூங்கா, 24 கடைகள் மற்றும் ரெஸ்டுரட் வசதிகளையும் கொண்டமைந்த இக் கடற்கரைப்பூங்கா வெளிநாட்டு…

Read More

19வது திருத்தச் சட்டம் அதிகூடிய விருப்புவாக்குகளால் நிறைவேற்றப்படும் : பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

அரசாங்கத்தின் 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்திலே அதிகூடிய விருப்புவாக்குகளால் நிறைவேற்றப்படும் என்று சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அரசாங்கத்தின் நூறு நாள் விஷேட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் என்ற தொனிப் பொருளில் கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தில் இன்று (26) செம்மண்னோடை மௌலானா குறுக்கு வீதியில் அமைந்துள்ள வடிகானுக்கு மூடியிடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்…

Read More

சவூதி இளவரசர் இலங்கை வருகை

சவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவூத் மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவ்விஜயத்தின் போது சவூதி இளவரசர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Read More

கைவிடப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்களின், வேலை நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் -03- விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மாணவர்களை 16 ஆம் திகதிக்கு முன்னர் இணைத்துக் கொள்ளவும் ; கல்வி அமைச்சு

பிரபல பாடசாலைகளுக்கு தரம் ஐந்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன் முடித்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சு குறித்த பாடசாலைகளின் மேலதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. மேலும் 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பிரபல பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படாத மாணவர்களின் மேன் முறையீட்டுக்காக 16 ஆம் திகதிக்குப் பின்னர் இரண்டு வாரங்கள் அளவில் வழங்குவதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாடசாலைகள் கிடைக்காமை, வேறு பாடசாலைகளை பெற்றுக் கொள்ளல், விண்ணப்பிக்காத பாடசாலைகளை பெற்றுக் கொள்ளல்,…

Read More

‘பிற நாடுகளின் கொந்தராத்துக்களுக்காக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் ஆதரிக்கமாட்டோம்”

– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் அதனை ஆதரிக்க முடியாது என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (07) ரோமன் பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,…

Read More

மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு (photos)

A.S.M.இர்ஷாத் கிரான்ட்பாஸ் அவ்வல் ஸாவிய்யா அல் மத்தரசத்துல் யூசுபிய்யாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மத்ரசாவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்களை வழங்கினார். ஆ பவுண்டேசனின் ஏற்பாட்டில் இவ் இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த அமைச்சருக்காக விசேட துஆப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்வில்…

Read More