Headlines

தம்பலகம பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத்துக்கார அங்குரார்ப்பண நிகழ்வு

திருகோணமலை மாவட்டம் தம்பலகம பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (27) வியாழக் கிழமை தம்பலகம பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் இடம் பெற்றது. குறித்த கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நட்டு வைத்தார். சுமார் 90 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கட்டிடம் பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாக அமையப்பெறவுள்ளது இதன் போது வைத்தியசாலையின் வளாகத்தினுள் நிர்மாணிக்கப்படவுள்ள மேலும் ஒரு சிறுவர் பூங்காவினையும் பிரதமர் அங்குரார்ப்பணம் செய்து…

Read More

‘குடும்பத்தில் அனைவரும் தற்போது பாதுகாப்புடன்’ டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

‘குடும்பத்தில் அனைவரும் தற்போது பாதுகாப்புடன்’ என்ற தொனிப்பொருளின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆட்பதிவுத்திணைக்களத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் ஊடக பிரிவின் பொதுநிர்வாகம் மற்றும் நிர்வாக அமைச்சு, சுகாதார அமைச்சு, இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், கொழும்பு நகரசபை,இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பன ஒன்றினைந்து வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதேவேளை டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை முப்படையினர், கொழும்பு நகரசபை, அரச நிறுவனங்கள் என்பன சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன….

Read More

நாட்டில் மாவட்ட செயலாளராக ஒரு முஸ்லிம் கூட இல்லை; ஹுனைஸ் பாரூக் குற்றச்சாட்டு

நாட்டில், மாவட்ட செயலாளராக ஒரு முஸ்லிம் கூட இல்லை எனவும் ஒரு முஸ்லிம் மாவட்ட செயலாளரையாவது நியமிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் பாராளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்டார். இதன்போது அவரது கருத்துக்களுக்கு அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன பதிலளித்தார். எமது நாட்டில் 10% முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, இந்த வகையில் கூடுதலாக முஸ்லிம் மக்களிடம் என்றும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு விடயமாக இருக்கின்றது, இந்த நாட்டில் 25 மாவட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால், இந்த 25 மாவட்டங்களில் ஒரு முஸ்லிம் மாவட்ட…

Read More

“நமது சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முற்படுபவர்களுக்கு பொதுத்தேர்தலில் தகுந்தபாடம் புகட்ட வேண்டும்” – முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப்!

நமது சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முற்படுபவர்களுக்கு, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தகுந்தபாடம் புகட்ட வேண்டுமென்றும்  சிறுபான்மை மக்கள் உரிமைகளோடும் நிம்மதியாகவும் வாழ, சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனவும் முன்னாள் திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா, பொது நூலக மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை (14) இடம்பெற்ற, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட்…

Read More

மனிதனின் கருவறை இரகசியங்கள் (படங்கள் இணைப்பு)

ஸ்வீடன் நாட்டு புகைப்பட கலைஞர் லேனர்ட் நில்சன் தன் 12 ஆண்டுகளை அர்ப்பணித்து குழந்தை கருவுறல் முதல் பிறப்பின் முன் நிலை வரை கருவறையில் பல நுண்ணிய புகைப்பட கருவிகள் கொண்டு நேரடியாக கருவறையில் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார். இவரின் கருவறை புகைப்படம் 1965 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் புகைப்படங்கள்

Read More

வவுனியா குருமன்காடு மாவட்ட கிளைக்காரியாலயஅங்குரார்ப்பண நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா குருமன்காடு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கிளைக்காரியாலயத்தை கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்

Read More

பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர பரிந்துரை.!

இலங்கையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். என்.கே. இலங்கக்கோன் கடந்த 12 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றுள்ளதை அடுத்து, குறித்த வெற்றிடத்திற்கு பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தரவின் பெயரினை அரசியலமைப்பு சபை பரிந்துரை செய்துள்ளது.

Read More

யாழ் மாநகர சபையின் கல்வி, விளையாட்டு மற்றும் மேம்பாட்டு நிலையியல் குழு உறுப்பினராக கே.எம் நிலாம்!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், யாழப்பாணம் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் கல்வி, விளையாட்டு மற்றும் மேம்பாட்டு நிலையியல் குழு உறுப்பினராக யாழ் மாநகர சபை முதல்வர் திரு.அர்னோல்ட் அவர்களினால் நியமிகப்பட்டுள்ளார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த உறுப்பினர் நிலாம், இதன் மூலம், யாழ் மக்களுக்கு சிறந்த முறையிலான கல்வி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும். அத்துடன், இளைஞர்களின் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கான சகல வசதிகளையும்  நாம் மேற்கொள்வோம். அத்துடன், பிள்ளைகளின் கல்வி மற்றும் விளையாட்டுத்…

Read More

செட்டிக்குள பிரதேச சபையின் உத்தியோகபூர்வ கொடி மற்றும் இலச்சினை வெளியிடும் நிகழ்வு

செட்டிக்குள பிரதேச சபையில் உத்தியோகபூர்வ கொடி மற்றும் இலச்சினை என்பவற்றை முறையே வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோர் உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைப்பதையும். மேலும், அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதேச சபை ஊழியர் ஒருவருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதையும் படத்தில் காணலாம்.

Read More