Headlines

நிறவெறி கொண்ட Apple Store ஊழியர்கள் (video)

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கருப்பின மாணவர்கள் அவமதிக்கப்பட்ட வீடியோ பேஸ்புக்கில் வைரலானதையடுத்து ஆப்பிள் நிறுவனம் அச்சிறுவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மேரிபைர்னாங் பகுதியில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் கடை ஒன்றிற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கருப்பின மாணவர்கள் 6 பேர் கடந்த செவ்வாய் அன்று சென்றுள்ளனர். அப்போது, கருப்பின மாணவர்களை நிறுவனத்தின் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஏன் என்று கேட்டதற்கு “நீங்கள் உள்ளே இருந்தால், மற்றவர்களுக்கு நீங்கள் ஏதாவது திருடிவிடுவீர்களோ என்ற அச்சம் இருக்கும்” என்று…

Read More

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

– க.கிஷாந்தன் – தபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் 12. ஆம் திகதி நள்ளிரவு முதல் பிரதான தபால் நிலையங்கள மற்றும் உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 13.11.2015 அன்று காலை விநியோகிக்கப்படவிருந்த தபால்கள் நிலையங்களில் தேங்கி கிடப்பதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் தங்களுடைய கடிதங்களை பெற்றுக்கொள்வதிலும் அவசர விடயங்களில் ஈடுப்படுவதிலும் முடியாமல் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொது…

Read More

தமிழ் மக்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு அ.இ.ம.கா. ஆதரவு வழங்கும்

– இர்ஷாத் றஹ்மத்துல்லா –  சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் பேசி வந்துள்ளார். கடந்த அரசாங்கத்திலும்,முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடத்தில் இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பல முறை பேசி யுள்ளார். புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடத்திலும் இந்த கைதிகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்படுவதுடன்,சந்தேகத்தின் பேரில் குற்றங்கள் பதியப்படாதவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை…

Read More

விழப்போகும் மர்மப்பொருள்! காத்திருக்கும் விஞ்ஞானிகள்

இலங்கையின் தென்பகுதிக் கடலில் இன்று காலை விழும் என்ற எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருளைக் கண்காணிக்க ஐரோப்பிய விண்வெளி முகவர் அமைப்பின் விஞ்ஞானிகளும், இலங்கை விஞ்ஞானிகளும், தயார் நிலையில் உள்ளனர். WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள சுமார் 7 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று, இன்று காலை இலங்கை நேரப்படி 11.50 மணியளவில் இலங்கைக்குத் தெற்கே 65 கி.மீ தொலைவில் கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மர்மப் பொருள், 1969ஆம் ஆண்டு அமெரிக்கா செலுத்திய அப்பலோ 10…

Read More

ஞானசார தேரரின் ரகசிய குர்ஆன் வகுப்பு

புனித அல்குர்ஆனை களங்கப்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர். இவர்மீது இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கும் பதியப்பட்டு, விசாரணைகள் நடைபெற்று வருவதும் பலரும் அறிந்ததே. இந்நிலையில், அல்குர்ஆன் விளக்கமும் அது பற்றிய அறிவும் போதாத நிலையில், அல்குர்ஆனை அவமதித்த வழக்கு விசாரணைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஞானசார தேரர், தற்போது அல்குர்ஆன் விளக்க வகுப்புக்களில்  ரகசியமாக குர் ஆணை பற்றி தெரிந்து வருவது  குறித்து தகவல்கள் கசிந்துள்ளன. தனக்கு…

Read More

சவூதியில் வருகிறது தடை!

துபாயை தொடர்ந்து சவூதியிலும் இலவச சேவைகளான whatsapp , imo, Line , Messenger , Tango உள்ளிடவற்றை ஒரு சில வாரங்களில் தடை செய்ய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இலவச சேவைகளால் சவூதியில் உள்ள மொபைல் கம்பெனிகள் நஷ்டத்தை சந்திப்பதாலும் அவற்றின் லாபத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஒரு சில வாரங்களில் அமலுக்கு வரும் என சவூதி அரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

சோபித்த தேரரின் இறுதி ஊர்வலத்தில் முஸ்லிம்களின் பணிஸ் தன்சல்..

மறைந்த மரியாதைக்குரிய  மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடலுக்கு இன்று இன, மத பேதமின்றி பலரும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தோருக்கு முஸ்லிம் சகோதரர்கள் தானசாலையொன்றை அமைத்து ‘பணிஸ்’ வழங்கியிருந்த நிகழ்வை சிங்கள ஊடகங்களும், இன- மத நல்லுறவுக்கு இலங்கை முஸ்லிம் உதாரணமாக வாழ்கிறார்கள் என குறிப்பிட்டு இருந்தது காணக்கூடியதாக இருந்தது. இன, மத நல்லுறவுக்கு உதாரணமாக அமைந்த இந்நிகழ்வின் படங்கள் சில..

Read More

தென் வான்பகுதி பறப்பற்ற பகுதியாக பிரகடனம்

விண்ணில் இருந்து ‘WT1190F’ என்று பெயரிடப்பட்ட மர்மப்பொருள் ஒன்று நாளை வீழ்வதை அடுத்து, இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருள், கரைக்கு அண்மித்த கடற்பகுதியிலேயே வீழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. காலிக்கும் ஹம்பாந்தோட்டைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியிலேயே இந்த மர்மப்பொருள் வீழும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் குறித்த வான்பரப்புக்கு ஊடாக செல்லும் மாலைத்தீவு, அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளுக்கான விமான பறப்பு பாதைகள் மாற்றப்பட்டுள்ளன.

Read More

றிஷாத் கொஞ்சம் தாமதித்து செல்லுங்கள்! மைத்திரியின் இரண்டாவது சந்திப்பு!!

– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதன் தற்போதைய நிலை தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிக்கும் அமைச்சர் றிஷாதுக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஒக்டோபர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது, வடமாகாண முஸ்லிம்களின் விடயத்தில், அரசு மாற்றான்தாய் மனப்பாங்கோடு செயற்படுவதாக கடும் தொணியில் ஆக்ரோசமாக றிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டியிருந்தார். இதன் பிற்பாடு ஜனாதிபதி மைத்திரியின் விசேட வேண்டுகோளுக்கு அமைய றிஷாத் பதியுதீனுடனான நேற்றைய சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல்…

Read More

ஐந்து பிள்ளைகளால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்

– செல்வராஜர் – 80 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயை கடந்த 15 வருட காலமாக வீட்டில் அடைத்து வைத்து இருந்த கொடூர சம்பவமொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மொனராகல, சியம்பலாண்டுவ பகுதியில் தாய் தந்தை, இரு மகன்மார்கள், 3 மகள்மார்கள் உட்பட 7 பேர் கொண்ட குடும்பமொன்று வசித்து வந்துள்ளது. 80 வயதுடைய தாயின் பெயரிலே அனைத்து சொத்துகளும் இருந்துள்ளன. இந்நிலையில் இவருடைய கணவன் 28 வருடங்களுக்கு முன்னர் இறந்துள்ளார். இதன் பின்னர் தாயின்…

Read More

சோபித தேரரின் இறுதி கிரியைகள் : நேரடி ஒளிபரப்பு

மறைந்த சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ளரும் கோட்டே ஸ்ரீ நாகவிகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு ­வாவே சோபித தேரரின் இறுதிக்கிரி­யைகள் பூரண அரச மரி­யா­தை­யுடன் தற்போது பாரா­ளு­மன்ற மைதா­னத்தில் இடம்பெற்றுகொண்டிருக்கின்றன.

Read More

நாகவிஹாரையிலிருந்து கண்ணீர் வெள்ளத்துடன் பயணிக்கும் மாதுலுவாவே

இறையடி எய்திய மாதுலுவாவே சோபித்த தேரரின் தேகம், கோட்டே ஸ்ரீ நாகவிஹாரையிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளது. பெருந்திரளான மக்களின் துயர கண்ணீருடன் அன்னாரை சுமந்த பேழை விஹாரையிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாகவிஹாரைக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அன்னாரது தேகம், பாராளுமன்ற கட்டட மைதானத்தை நோக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகின்றது.

Read More