Headlines

பெண் பணியாளர்களுக்கு பதில் ஆண் சேவையாளர்-வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவிப்பு

பணிப்பெண்களுக்கு பதிலாக பயிற்சி பெற்ற ஆண் சேவையாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு பெண்களை பணிப்பெண்களாக அனுப்புவதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி யுள்ளது என்றும், அவற்றை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் குறித்துஆலோசிக்கப்படுகின்றது என்றும் அவர் கூறினார். அதேவேளை, கடந்த காலங்களில்வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாள்களாக செல்லும் பெண்கள் பல்வேறான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு…

Read More

இறக்காமத்தில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமுகமாக, நேற்று (13) இறக்காமத்தில் இடம்பெற்ற மகளிருக்கான கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை  கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, மயில் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் எமது பெண்களின் அனைத்து விதமான தேவைகளையும் வேண்டுகோள்களையும் மக்கள் காங்கிரஸ் நிறைவேற்றித் தரும். கிழக்கு மாகாணத்திலே நாங்கள் அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறோம். அந்தவகையில், உண்ண…

Read More

தெல்லிப்பளையில் குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் குண்டுகளை கண்டு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

‘நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதாயின் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்’ இஷாக் எம்.பி!

-ஊடகப்பிரிவு- நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதாயின் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பாராளுமன்றில் தெரிவித்தார். 1970களில் இலங்கையைப் பார்த்து சிங்கப்பூர் முன்னேற ஆசைப்பட்டது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறி சிங்கப்பூரை போன்று முன்னேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பங்களாதேஷ் போன்ற நாடுகள் முன்னேறுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன. சுற்றுலாத்துறையின் ஊடாக வருமானத்தை ஈட்டும் நாடாக இலங்கை இருக்கின்ற போதும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சில குழுவினரால்…

Read More

தீவிரவாதத்துக்கு, ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை – றிஷாத் பதியுதீன்

நாட்டில் சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்க மேற்கொள்ளும் சதி முயற்சிகளுக்கு இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென்றும், இவ்வாறான பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். நேற்று  (17) குருநாகலில் இடம்பெற்ற பேராளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

Read More

”ஜனாதிபதியின் தம்பி என்பதால், நான் எல்லாவற்றையும் செய்யலாம் என கூறுவது தவறாகும்” கோட்டா

அபிவிருத்திப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தமைக்கு ஜனாதிபதியின் சகோதரர் என்பது காரணமாகவில்லை எனவும் அந்த பணிகளை தனது பணியாக நினைத்து செயற்படுத்தியமையே இதற்குக் காரணம் எனவும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். Nf டுடனான விஷேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். கேள்வி உங்களது கண்காணிப்பின் கீழ் பெறும் தொகையானோர் சேவையாற்றுகின்றனர். பல நிறுவனங்களும் உள்ளன. அவர்களுக்கு எவ்வகையான ஆலோசனையை வழங்குவீர்கள்? பதில் மக்களின் வாழ்விற்கு தகுதியான இடங்களாக உருவாக்குவதற்காகவே…

Read More

ஒலுவில் கடலரிப்பு பிரதேசங்களை றிஷாத் பதியுதீன் பார்வை

அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் பிரதேசத்தில் துறை முகத்தினை அண்டிய கடற்பகுதி கடலரிப்புக்குள்ளாகிவருவதனால் அப்பிரதேச மக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த கடலரிப்பு பிரதேசத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் .இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்து நிலைமையினை பார்வையிட்டதுடன்,பிரதேச மக்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினார். இந்த கடலரிப்பால் கொண்டுள்ள இழப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தவுள்ளதாகவும்,கப்பல;.துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க,மற்றும் கடற்றொழில்,நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவையும் இந்த…

Read More

சோபித தேரரின் பதவிக்கு தம்பர அமில தேரர்

நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மாதுளுவாவே சோபித தேரர் அண்மையில் காலமானதை அடுத்து, அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. மாதுளுவாவே சோபித்த தேரரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை அவ்வாறே முன்னெடுக்குமாறு நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் நிறைவேற்று குழு, தம்மர அமில தேரரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், நிறைவேற்றுக் குழுவிற்கும்…

Read More

அபிவிருத்தி நடவடிக்கைகளை சிலர் கறுப்புக் கண் கொண்டு பார்க்கின்றனர்

சுஐப் எம் காசிம் – வவுனியா மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களான  அண்ணா நகர், தெற்கிலுப்பைக்குளம், பாரதிபுரம், சமயபுரம், சுந்தரபுரம், ஈஸ்வரிபுரம், கல்மடு போன்ற தமிழ் கிராமங்களுக்கு அமைச்சர் ரிஷாட் கடந்த சனிக்கிழமை (7)  விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அந்தக் கிராம மக்களை அவரவர் இடங்களில் சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்த அமைச்சர் அங்கு நடைபெற்ற கூட்டங்களிலும் உரையாற்றினார். அமைச்சர் கூறியதாவது, கடந்த காலங்களில் நான் இந்தப் பிரதேச மக்களுக்கு முடிந்த வரையில் உதவியுள்ளேன். என்னாலான பணிகளை மேற்கொண்டுள்ளேன். யுத்த…

Read More

‘பொலிஸார் மீது உரிய நடவடிக்கை’ முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி! இன்று மாலை மீண்டும் பேச்சு!

-சுஐப் எம்.காசிம்- அம்பாறையில் பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு, பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும், சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் ஆகியோர் கடுந்தொனியில் சுட்டிக்காட்டிய போது, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, அம்பாறை பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளித்தார். சிரேஷ்ட பிரதி…

Read More

மஹிந்த பாவமாம்; விடிய விடிய நாடாளுமன்றத்தில் போராட்டம், போராட்டத்தில் சிலர் தூக்கம். ( அனைத்து படங்களும் இணைப்பு)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நடத்தப்படவுள்ள விசாரணையை மீளப் பெறும் வரை போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நேற்று இரவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பை மீளப் பெறும் வரை நாடாளுமன்றத்தை விட்டு செல்லப்போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எழுத்து மூலம் உறுதி மொழி வழங்கப்படும் வரை நாடாளுமன்றில் தங்கியிருக்க எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும்…

Read More

கிண்ணியா, மூதூர் மு.கா உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

கிண்ணியா நகரசபையின் பிரதித் தவிசாளர் ஐ.சப்ரீன் (ஐயூப் நளீம்), மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் தானீஸ் ஆகியோர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், இன்று (08) கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர். கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகரசபை, பிரதேசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More