Headlines

மீண்டும் மரண பயம்

கஹாவத்தை, கொட்டகெதன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் ஆயுதத்துடன் மறைந்திருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ள நபர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த முறைப்பாட்டின் பின்னர் கொட்டகத்தெனவில் மீண்டும் மரணபயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. தாயும் மகளும் மட்டுமே வாழ்கின்ற வீட்டுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் மறைந்திருந்துள்ளவரைக் கண்ட அவ்வீட்டிலிருந்த 29 வயதான யுவதி, கூச்சலிட்டதையடுத்தே அவர் தப்பியோடியுள்ளார். அரைகாற்சட்டை மட்டுமே அவர் அணிந்திருந்துள்ளார் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டகத்தென பகுதியில் உள்ள வீடுகளுக்கு இரவிரவாக செல்லும்…

Read More

கோத்தா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

‘ஜனாதிபதி மைத்திரியின் இதயம் பலமானது’

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சரவைப் பேச்சாளரும் , அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன பதிலளிக்கும் போது, கேள்வி: அப்படி என்றால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமில்லையா? பதில்: ஏன், இல்லை. அவரும் அவரது குழுவும் நல்லாட்சியின் பின்னால் வரமுடியும். எஸ்.டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்க சாகும் வரை முன்னோக்கி சென்றார். எங்கள் குடும்பமே நாசமாகிவிடும் என்று தெரிந்துகொண்டுதான் நாங்கள் அரசாங்கத்திலிருந்து…

Read More

யாழில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பொன்னாலை சந்திக்கு அண்மித்த கடற்கரையை அண்டிய காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருக்கின்றமை நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டது என்று வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர். மேற்படி சடலத்தை கண்ணுற்ற பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தந்தமைக்கமைய சடலத்தை கண்டுபிடித்ததாக பொலிஸார் கூறினர். சடலம் அவ்விடத்திலேயே இருப்பதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) மல்லாகம் மாவட்ட நீதவானுடன் சென்று சடலத்தை மீட்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சில வாரங்களுக்கு முன்னர் இறந்த ஒருவரின் சடலமாக இது இருக்கலாம் என…

Read More

நயவஞ்சக ஷிஆக்களை இனம் காண்போம்- மசூர் மௌலானா

ஊடகப் பிரிவு யெமனின் ஜனநாயக ஆட்சியை சீர்குலைக்கும் வகையில் ஈரானின் பூரண ஒத்துழைப்போடு ஹோதி இனத்து ஷிஆக்கள் யெமன் நாட்டின் தலை நகர் சனா மற்றும் ஏடன் நகரை கைப்பற்றி அந்த நாட்டு மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். யெமன் நாட்டின் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அப்துரப்பு மன்சூர் ஹாதி மற்றும் அந்த நாட்டு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஹோதி இனத்து ஷிஆ கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியாவின் மன்னர்…

Read More

இரவு 1௦ மணிவரை வெளிநோயாளர் சிகிச்சை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று முதல் இரவு 1௦ மணிவரை வெளிநோயாளர் சேவை இடம்பெறவுள்ளது. வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளர்களின் சிரமத்தை குறைத்துக்கொள்ளும் விதத்தில் இன்று முதல் தொடர்ந்து இரவு 1௦ மணிவரை வெளிநோயாளர் சிகிச்சை வழங்கவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Read More

“ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழா”

புத்தளம் அல்-காசிமி “இஸ்லாமிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின்” ஏற்பாட்டில் இடம்பெற்ற “ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழாவும் மாணவர் பரிசளிப்பு விழாவும்” இன்று (9) மாலை அல் – காசிமி ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலய விளையாட்டுத்திடலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தாராபுரம் மண்ணிண் மைந்தரும் மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் சப்ரி,…

Read More

வங்கக்கடலில் காற்றழுத்தம்! இலங்கைக்கு வெள்ள ஆபத்து

தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம், தீவிரம் பெற்று,  இலங்கை மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கையிலும், தென்னிந்தியாவிலும், இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும். இந்த காற்றழுத்தம் காரணமாக இலங்கை முழுவதும் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றின்…

Read More

குருநாகல் மாவட்ட வறியமக்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

குருநாகல் மாவட்டத்தில் உள்ள வறியமக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாணகமுவ, சியம்பலாகஸ்கொட்டுவ பகுதிகளில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்வி, கலாசாரத்துக்குப்பொறுப்பான Dr. சாபி சிஹாப்தீன், முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நஸீர்,மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Read More

நவாற் தோட்ட விஷ்னு இளைஞர் கழகத்திற்கு கானி கொள்வணவு செய்வதற்கு நிதி கையளிக்கும் நிகழ்வு

வவுனதீவு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட நவாற் தோட்ட விஷ்னு இளைஞர் கழகத்திற்கு கானி கொள்வணவு செய்வதற்கு நிதி கையளிக்கும் நிகழ்வு (25) இணைப்பாளர் மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு நிதியை கையளித்தார். இந்நிகழ்வுக்கு மாவட்ட இணைப்புச் செயலாளர் லோகநாதன் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

ஞானசார தேரர், அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல்

பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், உயர்நீதிமன்றத்தில் நேற்று (25)  அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நேற்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தம்மை கைது செய்தமையானது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழுமையான நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இலங்கையில் ஷரியா வங்கி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுடன் இன்று சந்திப்பு ஒன்றை…

Read More