Headlines

புத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப  முயற்சி:  அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி 

அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து,  திசை திருப்புவதற்காக மெளனித்து கிடந்த வில்பத்து புரளியை மீண்டும் கிளறிவிட்டு இரண்டையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போட்டு போராட்டத்தை திசை திருப்பும் வகை சூத்திரதாரிகள் சிலர் செயற்பட்டு வருவதாக கைத்தொழில், வர்த்தகம்,நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். கலைவாதி கலீலின் பவள விழாவும் “என் வில்பத்து டயரி” நூல் வெளியீடும் கொழும்பு…

Read More

அரசாங்கத்துடனான பேச்சுக்கு தயார் – தமிழ்க் கூட்டமைப்பு

இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்​தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் என கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை சர்வதேசத்திற்கு காட்டும் வகையில் அமையக்கூடாது எனவும் ஒரு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையாக காணப்படவேண்டும் எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அரசாங்கத்துடனான இருதரப்பு பேச்சுவார்த்தையானது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read More

ஜனாதிபதிக்கு விசேட இணையதளம்

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை ஜனாதிபதி கொண்டுள்ள தொடர்புகள், நடவடிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தும் வகையில் விசேட இணையத்தளமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக ஜனாதிபதி இந்த இணையதளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். பின்வரும் முகவரியினூடாக http://unga.president.gov.lk இந்த புதிய இணையதளத்தை அணுகமுடியும். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்குபற்றுதலுடன் தொடர்பான, நியூயோர்க்கில் இடம்பெறும் ஏனைய உத்தியோகபூர்வ நிகழ்வுகளும் மும்மொழிகளிலும் உரிய காலத்தில்…

Read More

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இனைவு ..

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இம்ரான் கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைந்து கொண்டார்.. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் சதொச பிரதித்தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) , கட்சியின் அரசியல் விவகாரப்பொறுப்பாளர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், குளியாப்பிடிய பிரதேசசபை உபதவிசாளர் இர்பான், குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளர்…

Read More

உலகில் அதிக கோடீசுவரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்!

வழக்கம் போல உலக பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்து விவரத்தை ஹுரன் குளோபல் ரிச் அறிக்கை வெளியிட்டு உள்ளது. 2014ம் ஆண்டில் இந்தியாவில் கோடிசுவரர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது பல வருடமாக 3ம் இடத்தில் இருந்த ரஷ்யாவை இந்த முறை 4ம் இடத்துக்கு பின் தள்ளி முதல் முறையாக டைப் 3 இடத்துக்கு வந்து உள்ளது.ஆனாலும் உலகத்தில் இருக்கும் பாதி கோடிசுவரர்கள் அமெரிக்கா,சீனா வில் உள்ளனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இந்திய கோடீசுவரர்கள்…

Read More

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஷீயாக்களின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது : அம்பாறை ஜம்இய்யத்துல் உலமா தலைவர்

அஸ்லம் எஸ்.மௌலானா இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஷீயாக்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாக அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின தலைவர் அஷ்ஷெய்க்.எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) தெரிவித்தார். அம்பாறை மாவடட ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்திருந்த உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான விசேட செயலமர்வு நேற்று சனிக்கிழமை சாய்நதமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை வகித்து உரையாற்றும் போதே அஷ்ஷெய்க்.எஸ்.எச்.ஆதம்பாவா இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது; “எமது நாட்டில் தற்போது ஷீயா கொள்கை மிகவும் தீவிரமாக…

Read More

சந்திரிக்கா – சுஷ்மா சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துள்ளார். இந்திய புதுடெல்லியில் நடைபெறுகின்ற சர்வதேச இந்து- பௌத்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சந்திரிக்கா அங்கு சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று ஆரம்பமாகிய இந்த மாநாடு 3 நாட்கள் நடைபெற்று நாளை நிறைவடையவுள்ளது. இதேவேளை சந்திரிக்கா நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

“நாம் உளவியல் ரீதியில் எம்மிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்” பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார்!

நாம் உளவியல் ரீதியில் எம்மிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் தெரிவித்தார். மேல் மாகாண உள்ளுராட்சி மன்ற திணைக்களத்தால், மேல் மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு நேற்று (15) எம்பிலிபிட்டிய இராணுவ முகாமில் இடம்பெற்றது. பேருவளை, புலத்சிங்ஹல, ஹொரணை, திவுலப்பிட்டிய ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இங்கு உரையாற்றிய உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் கூறியதாவது, எமது நாட்டில் காலத்துக்கு…

Read More

சஜின் வாஸினால், கிறிஸ் நோனீஸ் தாக்கப்பட்டதற்கான காரணம் சுவாரஸ்யமானது…!

இலங்கை வெளிவிவகார சேவையைசாரத, அரசு தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டாத இராஜதந்திரிகளை வெளியேற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பிரிட்டனிற்கான இலங்கை தூதுவர் கிறிஸ் நோனிஸ் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரிட்டன் தூதுவர் பதவவிலகியதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரித்து தெளிவுபடுத்தப்படுதல் அவசியம். ஏனெனில் இது இலங்கையின் சர்வதேச உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயம். அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்த வி;டயங்கள் இந்த விடயத்தில் குழப்பம் நிலவுவதை புலப்படுத்தியுள்ளன. மிகத்…

Read More

சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களில் இலங்கையர்களுக்கு மூன்றாம் இடம்

கடந்த வருடத்தில் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளவர்களில் இலங்கையர்கள் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.இதன்படி 1277 இலங்கையர்கள் அரசியல் அடைக்கல கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது முன்னைய ஆண்டுக்களை காட்டிலும் 87 வீத அதிகரிப்பாகும். இந்தநிலையில் மொத்தமாக சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட 11 வீதத்தால் அதிகரித்து 23,765ஆக இருந்தது.பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்று வரும் உள்நாட்டு பிரச்சினைகளே இதற்கான காரணங்களாகும்.இதன்படி எரிட்ரியாவில் இருந்து அதிகமான 6923 பேர் சுவிட்ஸர்லாந்தில் கடந்த வருடம் அடைக்கலம் கோரினர். 2014ஆம்…

Read More

மஹிந்த ரெஜிமன்ட் முஸ்லிம்களை தாக்குகிறார்கள்

– அஸ்ரப் ஏ சமத் – பாராளுமன்றத்தில் ஊடக அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட விவாத்தின்போது பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க உரையாற்றும்போது பாராளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக சில ராஜபக்ச ரெஜிமன்ட் உறுப்பினர்கள் தாக்குவதற்கு வந்துள்ளனா். கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தான் பாராளுமன்றதுக்கு வெளியில் வைத்து முஸ்லீம்களை எல்லாம் அடித்தீா்கள். அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்த பிறகு தற்பொழுது அந்த சண்டித் தணத்தை பாராளுமன்றத்திற்குள் கொண்டு வந்து முஸ்லீம் எம்.பிக்கு அடிக்க வருகின்றீா்கள். இதனை நாம்…

Read More

அரச அச்சக மோசடி குறித்து உரிய நடவடிக்கை இல்லை!

அரச அச்சுத் திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, அரச அச்சக ஊழியர்கள் சங்கத்தினால் பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அச் சங்கத்தின் செயலாளர் சரத் லால்பெரேராவால் பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் முன்னாள் மேலதிக அச்சகர் இணைந்து பல்வேறு மோசடிகளை மேற்கொண்டு, திணைக்களத்தில் உரிய நிர்வாகம்…

Read More