Headlines

எருக்கலம்பிட்டி கிழக்கு அ.மு.க பாடசாலை நுழைவாயல் கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டுவிழா

கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் எருக்கலம்பிட்டி கிழக்கு அ.மு.க பாடசாலைக்கான நுழைவாயல் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது எருக்கலம்பிட்டி மகளீர் பாடசாலை ஆசிரியர் அஸ்மீன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி…

Read More

2,700 பாடசாலைகளில் இணையத்தள இணைப்புகள் துண்டிப்பு

இணையத்தள கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் நாடெங்கிலுமுள்ள சுமார் 2700 பாடசாலைகளில் இணையத்தளத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாடசாலை மாணவர்களுக்கான ‘ஸ்கூல் நெட்’ எனப்படும் சேவையினை கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனடிப்படையில் நாடெங்கிலுமுள்ள அரச பாடசாலைகளுக்கு இலவச இணையத்தள வசதியினை வழங்கியிருந்தது. மேலும் இணையத்தள வசதிக்காக ஒவ்வொரு பாடசாலையும் மாதாந்தம் 7 ஆயிரம் ரூபா முதல் 9 ஆயிரம் ரூபா வரை…

Read More

‘மட்டக்களப்பு மாவட்டத்தில் 20,000 பேருக்கு இதுவரையில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன’ பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பொருளாதார அமைச்சினால் இருபதாயிரம் பேருக்கு இதுவரையில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள…

Read More

பணக்காரர்கள் பட்டியலில் IKEA நிறுவனரின் குடும்பம் முதலிடம்

சுவிட்சர்லாந்தில் உள்ள மக்களில் மிகுந்த பணக்காரர்கள் பட்டியலில் IKEA நிறுவனரின் குடும்பம் முதலிடம் பிடித்துள்ளது. சுவிஸின் தொழில்துறை நாளிதழான பிலான்ஸ், சுவிஸில் உள்ள 300 பணக்காரர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரபல மரச்சாமான்கள் விற்கும் நிறுவனம் வைத்துள்ள கம்பிராட்டின் (Ingvar Kamprad) குடும்பம் முதலிடம் பிடித்துள்ளது. இவர் தனது சொந்த நாடான சுவீடனில் வசித்து வந்தாலும், இவர்களது மகன் பீட்டர், ஜோனஸ் மற்றும் மத்தியஸ் ஆகியோர் சுவிஸ் கடவுச்சீட்டு வைத்துள்ளனர். இவர்களுக்கு சுவிஸில் 42…

Read More

சிங்கப்பூரில் தலை சிக்கிய நிலையில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தமிழர்கள் ! (வீடியோ இணைப்பு)

சிங்கபூரின் ஜோராங் கிழக்கு தெரு கவுசிங் போர்டில் 371 வது வீட்டில் ஒரு பச்சிளங்குழந்தை 2 வது மாடியின் கம்பித் தடுப்பைத் தாண்டி வந்த பச்சிளங்குழந்தையின் முதுகு பின் பகுதி கம்பியில் மாட்டியது. மேலே எழ முடியாமல், கம்பியிலிருந்து விடுபடவும் முடியாமல் அந்தரத்தில் தவித்த அந்தக் குழந்தை கதறி அழுதது. குழந்தையின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இருவர், இரண்டாம் மாடிக்கு ஏற முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் தீயணைப்புத் துறைக்கு தகவல்…

Read More

முசலி, வேப்பங்குளம் கிராம ஆதரவாளர்களினால் வழங்கப்பட்ட வரவேற்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முசலி, வேப்பங்குளம் கிராம ஆதரவாளர்களினால் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு மற்றும் பொதுக்கூட்டத்தின் போது…

Read More

தாஜுடீனின் கொலை : சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான பொலிஸ் அதிகாரிகள் இருவரும் எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த கொலை தொடர்பிலான சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோருக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான்…

Read More

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையும் / எவ்வாறு மாணவர்களுக்கு கற்பித்தல்

இன்று எமது சமூகத்திலே பலர் இந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகி வருகின்றனர், இந்த பரீட்சையானது உண்மையிலே எதற்கு.. ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த சிறுவர்களை நாம் தயார் படுத்துகின்றோம் என ஒவ்வொரு பெற்றோரும் சற்று யோசியுங்கள். இந்த பரீட்சையில் சித்தியடைந்தால் என்ன, சித்தியடையாவிட்டால் என்ன நடக்க போகிறது.. என்பதை சற்று தனியாக இருந்து கொஞ்சம் யோசியுங்கள். உங்களுக்கு தேவை அதிக புள்ளிகளா ? அல்லது நல்ல உடல் உள ஆரோக்கியமான பிள்ளையா? உங்களுக்கு தேவை…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் துறைமுக அபிவிருத்தி தொடர்பாக விசேட கலந்துரையாடல்…

துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களை இலங்கை துறை முக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவா விதான ஆகியோர்கள் சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பானது இன்று (13) கொழும்பில் உள்ள பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம் பெற்றது. துறை முக ஊழியர்கள் சார் பிரச்சினைகள், துறை முக அபிவிருத்திக்கான எதிர்கால திட்டமிடல்கள் உட்பட பல்வேறு விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன. குறித்த சந்திப்பில் பிரதியமைச்சரின் இணைப்புச்…

Read More

கொழும்பு விருப்பு வாக்கு முழு விபரம்..

– அஸ்ரப் ஏ சமத் – கொழும்பு ஜ.தே.கட்சி மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிபு செய்யப்பட்டோா் விபரங்கள் வரலாறு காணாத விருப்பு வாக்கு ரணிலுக்கு மஹிந்தவை விட முன்ணிலையில்.  இம்முறை முதன் முதலாக 2 முஸ்லீம்களும் தெரிவு. கொழும்பு மாவட்ட ஜ.தே.கட்சி தெரிவான 11 இலங்கையில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்ற பிரதமர். (1) ரணில் விக்கிரமசிங்க 500.566 (2) சுஜிவ சேரசிங்க – 114,849 (3) ஹா்சா டி சில்வா –…

Read More

‘52 நாள் அரசாங்கத்தில் களவுபோன அரிசி தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விளக்கம்’ – முன்னள் அமைச்சர் ரிஷாட்!

“சதொச களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் கொள்ளளவானது, 52 நாள் அரசாங்க காலத்தின்போது குறைந்திருந்தமை தொடர்பில், எனது வேண்டுகோளின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னர் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரமே, நேற்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விளக்கமளித்தேன்” என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஊடகவியலாளரிடம் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “2018 டிசம்பர் 20 ஆம் திகதி மீண்டும் நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், எனது அமைச்சின் கீழான…

Read More