Headlines

தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றது: அஸ்வர் கடும் கவலையாம்!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நேரடியாக ஒளிப்பரப்பபட்டு வரும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியின் போது விளம்பர அனுசரனையாளர்கள் தமிழ் மொழியை புறக்கணிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர்; ஊடக துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் முறையிட்டுள்ளார். மேற்படி “ஹதவத்தின் சிறிலாங்கியோ” என்ற விளம்பர நாமம் சிங்களத்தில் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது தமிழில் எழுதப்படவில்லை. எனவே இது குறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சரிடம் அவர் எடுத்துரைத்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நேரடியாக…

Read More

நாட்டுக்குத் தேவையான மொத்த குளோரினையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை!

நாட்டுக்குத் தேவையான மொத்த குளோரினையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நாட்டின் முன்னணியிலுள்ள கைத்தொழில் விநியோகஸ்தர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது நாட்டின் நீரின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உயர்த்தவும் வழிவகுக்கின்றது. குளோரின் விநியோகஸ்தர்களின் கருத்தின்படி: நாட்டில் முன்னிலையிலுள்ள இவ்வர்த்தகத்தை சர்வதேச தராதரத்துக்கு உயர்த்த முடியும். வடமாகாணத்தில் அமையப்பற்றுள்ள பரந்தன் இரசாயண தொழிற்சாலை (Paranthan Chemical Company) 1985ல் தனது செயற்பாடுகளை முற்றாக இழந்தமையால் நாட்டுக்குத் தேவையான இரசாயணங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நாங்கள் இத்தொழிற்சாலையை மீள…

Read More

Video-‘தலைவர் ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல்’

“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட காதர் மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்”- ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன தெரிவிப்பு! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன்  மீது, கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்கள் மீது இதுவரையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன…

Read More

மியன்மாரில் 50 வருடத்திற்கு பின்னர் முதலாவது ஜனாதிபதி நியமிக்கபட்டார்

மியன்மாரில் 50 வருடத்திற்கும் மேற்பட்ட இராணுவ ஆட்சியையடுத்து முதலாவது சிவிலியன் ஜனாதிபதியாக ஹதீன் கயாவ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவரான ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளரான ஹதீன் கயாவ் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து உரையாற்றுகையில், இது ஆங் சான் சூகியின் வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார். “இந்த வெற்றி எனது சகோதரி ஆங் சான் சூகியின் வெற்றியாகும். அவருக்கு…

Read More

எனது 15 வருட அரசியல் வாழ்வில் பிரதேச வாதம்,இனவாதம் பற்றி சிந்தித்ததே இல்லை – றிஷாத் பதியுதீன்

எனது 15 வருட அரசியல் வாழ்வில் பிரதேச வாதம்.இனவாதம் என்பனபற்றி சிந்தித்ததே இல்லை என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த இரண்டும் எமது மக்களின் முன்னேற்றத்திற்கு சாபக் கேடு எனவும் கூறினார். தான் பிறந்து,வளர்ந்து,கல்வி கற்ற பாடசாலையான மன்னார் தாராபுரம் அல்மினா பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர்…

Read More

கம்பனி வரலாற்றில் புதிய கம்பனிகளின் பதிவுக்கட்டணங்கள் வெகுவாகக் குறைப்பு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

ஊடகப்பிரிவு இலங்கையின் கம்பனி வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் புதிய கம்பனிகளுக்கான பதிவுக்கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 73% ஆல் குறைக்கப்பட்டிருக்கின்றதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கம்பனிப்பதிவு புதிய கட்டணங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் உரையாற்றிய போது கூறியதாவது, இந்தக் கட்டணக்குறைப்பு இலங்கையின் புதிய தொழிற்துறை வளர்ச்சிக்கான முயற்சியாகும். 2016 ஆம் ஆண்டு நமது நாட்டில் 8289 புதிய கம்பனிகள் ஆரம்பிக்கப்பட்டன….

Read More

 யோஷிதவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு, அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒரு மாத கால அனுமதி வழங்கியுள்ளது.

Read More

யோஷிதவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கடுவளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீ.எஸ்.என் எனும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பான வழக்கு விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ உட்பட ஐந்து பேர் இன்று காலை கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோதே அவர்களை தொடர்ந்தும்  மார்ச் மாதம் 24ஆம் திகதி…

Read More

தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்

விவசாய,நீர்பாசன,மீன்பிடி நீர்வளத்துறை அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சில் கடந்த 12.09.2019 தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதாரஇராஜாங்க அமைச்சர் அமீர் அலி , மீன்பிடி நீரியவளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துலிப்வெத ஆராச்சி, சமூக வலூவூட்டல் இராஜாங்க அமைச்சர்அலி சாஹிர் மொளலான, இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, நவாஸ் கனி , செயலாளர் றூவான் சந்திர, பணிப்பாளர் மீன்பிடி மொன்டி ரனந்துங்க ஆகியோர் கலந்து…

Read More

மொரவெவ பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டம்,  மொரவெவ பிரதேச சபைத் தேர்தலில், ரொடவெவ வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.        

Read More

சவுதியின் யமன் யுத்தமும் முரண்நிவர்த்தியும்

(கால ஓட்டத்துடன் ஒன்றிய ராஜதந்திரங்களும் தற்காப்புக்கான நகர்வுகளும்) எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும் அதன் உடன்பாடும் எதிர்மரையும் அந்தந்த கால ஓட்டத்தின் கருத்துவயப்பட்ட நிலையில் நின்று அணுகப்படும்போதே அதன் சாத்தியநிலை காலநிலைச் சூழலை தனக்கு சாதகமாக உருவாக்கி நிற்கும்.இது அரசியலில் மட்டுமல்ல சமூக சிவில் ராணுவ ஒழுங்கிலும் பேணப்படும் ஒன்றே. யமன் ஹூதிகளுக்கு எதிரான சவுதியின் யுத்தத்தை நோக்கும் பலர் எகிப்தில் முர்சிக்கு எதிரான சவுதியின் நிலைபாட்டில் நின்றே முரண்நிலையை நிறுவ வருகின்றனர்.ஒரு நாட்டின் இரண்டு வேறுபட்ட…

Read More

உலக புகைபிடித்தல் எதிா்ப்பு தினத்தையொட்டி பிரதமருக்கு மாணவா்கள் கொடி அணிவிப்பு

அஸ்ரப் ஏ சமத் உலக புகைபிடித்தல் எதிா்ப்பு தினத்தையொட்டி பிரதமா் ரணில் விக்கிரகசிங்கவுக்கு பாடாசலை மாணவா்கள் கொடியொன்றை அணிவித்தனா். இது அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் இந் கொடி விற்பனை தினத்தை சமுாத்தி அதிகரிகள் ஊடகா அமுல் படுத்தபட உள்ளது. படத்தில் சமுா்த்தி வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதியமைச்சா் அமீர் அலியும் காணப்படுகின்றனா்.

Read More