Headlines

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கணவனின் ஊதியத்தை மனைவி அறியலாம்!

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கணவனின் ஊதியத்தை மனைவி அறியலாம் என்று, தகவல் அறியும் உரிமை ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. தனி நபர் ஒருவரின் ஊதியத்தை அறியும் உரிமை யாருக்கும் இல்லை என்று சட்டத்தில் இருக்கும் பட்சத்தில், கணவனின் ஊதியம் குறித்து அறிந்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பெண்மணி தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தகவல் அறியும் உரிமை ஆணையம், இனி கணவனின் ஊதியத்தை அறிந்துக்கொள்ளும் உரிமை…

Read More

சஜீத் பிரேமதாசவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சார பணியில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது வெற்றிப் பயணத்திற்காய் இலங்கை துறை முகத்துவாரப் பகுதியில் மக்கள் கலந்துரையாடலும் பிரச்சார நடவடிக்கையும் பிரதியமைச்சரும்,மூதூர் தொகுதிக்கான புதிய ஜனநாயக முன்னணியின் அதிகாரமளிக்கப்பட்ட முகவருமான  அப்துல்லா மஃறூப் அவர்களால் இன்று (02) முன்னெடுக்கப்பட்டது வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் சஜீத் பிரேமதாச தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது.

Read More

முன்மாதிரியாக செயற்பட்ட அமைச்சர் கபீர் ஹாசிம்

அரச நிறுவனங்கள் துறை அமைச்சர் கபீர் ஹாசிம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வர்த்தகப்பிரிவு ஆசனத்தில் அமராது பயணிகளுடன் சாதாரண ஆசனத்தில் இருந்து பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்ற அவரை வர்த்தக பிரிவு ஆசனத்தில் அமர்ந்து செல்லுமாறுகோரப்பட்டபோதும் வரிசெலுத்துவோரின் பணத்தில் தாம் பயணம் செய்யவிரும்பவில்லை என்று கூறி அதற்கு மறுப்புத்தெரிவித்துவிட்டார். கபீர் ஹாசிமின் அமைச்சின் கீழேயே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூம் உள்ளடங்குகிறது. இந்தநிலையில் அவரும் மனைவியும் சாதாரண இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்துள்ளனர். அமைச்சரின் இந்த நடவடிக்கை, அவரின்…

Read More

தேர்தல் தினம் 21 அறிவிக்கப்படும்!

மீதமிருக்கின்ற 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோரல், இன்று (18) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் இடம்பெறும். இறுதித் தினமான 21 ஆம் திகதியன்றே, தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More

துருக்கியின் உதவியுடன் இரண்டு கிராமங்களுக்கு குடிநீர் வசதி!

துருக்கி நிறுவனம் ஒன்றின் உதவியுடன் குளியாப்பிடிய பிரதேசசபைக்குட்பட்ட மிகநீண்ட நாட்களாக நீருக்காக கஷ்டப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் மாராப்பிடிய, பகமுனே ஆகிய இரண்டு கிராமங்களுக்கு குழாய் கிணறு மூலம் நீரை பெற்றுக்கொள்ளும் வசதிகளை பெற்றுக்கொடுத்ததுடன், நேற்று முன்தினம் (27) துருக்கி நாட்டு நிறுவன சகோதரர்களுடன் இணைந்து  மக்கள் பாவனைக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் திறந்து வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவதுடன், பெரும்பான்மை இன சகோதரர்களுக்கும்…

Read More

விபத்தில் ஊடகவியலாளர் பலி

-மயூரன் – யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து யாழ்.கண்டி வீதியில் இருந்து சோமசுந்தரம் வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியதில் அதில் பயணித்த ஊடகவியலாளர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். மாவட்ட செயகத்திற்கு அருகில் கண்டி வீதியில் நேற்று மாலை (02) இடம்பெற்ற வீதி விபத்தில் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் காயமடைந்த…

Read More

பாணின் விலை அதிகரித்தமை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன் அமைச்சர் ரிஷாட் அவசர சந்திப்பு! கோதுமை மா இறக்குமதியாளர்களுக்கும் கடும் எச்சரிக்கை!

கோதுமை மாவை ஆகக்கூடிய சில்லறை விலையான 87 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை விடுத்துள்ளார். அதேவேளை, பேக்கரி உரிமையாளர் சங்கத்தை இன்று காலை (19) சந்தித்த அமைச்சர் ரிஷாட், கோதுமை மாவின் விலையுயர்வை பயன்படுத்தி பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை பாவனையாளரை பாதித்துள்ளதாகவும் எனவே, மீண்டும் பழைய விலையில் பாணை விற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரின்…

Read More

புறக்கோட்டை அரிசிச் சந்தைக்கு அமைச்சர் றிஷாட் திடீர்ப் பாய்ச்சல்

-அமைச்சின் ஊடகப் பிரிவு மொத்தத வியாபாரச் சந்தையில் போதியளவு அரிசி கையிருப்பில் இருந்த போதும் தட்டுப்பாடு என்று கூறி அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் எச்சரித்தார். புறக்கோட்டை 5ம் குருக்குத்தெருவில் உள்ள மொத்த வியாபார அரிசிக் கடைகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து திடீரென விஜயம் செய்த அமைச்சர் அரிசி நிலவரங்கள் மற்றும் விலைகள் தொடர்பில் கேட்டறிந்தார். புறக்கோட்டை மொத்த…

Read More

மக்களின் யோசனைகள் பிரதமரிடம் நாளை கையளிப்பு

புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பது தொடர்பில், பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் அடங்கிய அறிக்கை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், நாளை செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படவுள்ளதாக, அவ்வறிக்கையைத் தயாரித்த குழு அறிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான பொதுமக்களின் யோசனைகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழு, கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல், பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றிடமிருந்து யோசனைகளையும் பரிந்துரைகளையும் சேகரித்து வந்தது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட அறிக்கையே, நாளைய தினத்தில், பிரதமரிடம் கையளிக்கவுள்ளதாக அக்குழு தெரிவித்தது.

Read More

முரளிதரன் இலங்கை நாட்டின் சிறந்த மகன் – சங்ககார

முத்தையா முரளிதரன் இலங்கை நாட்டின் சிறந்த மகன். அவர் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள தேவையில்லையென இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் விக்கட் காப்பாளருமான குமார் சங்கக்கார தமது உத்தியோகபூா்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். முரளிக்கு தன் நாட்டின் மீது அன்புள்ளது, மேலும் அவர் யாருக்கு வேண்டுமானாலும் ஆலோசகராக அல்லது பயிற்சியாளராகவும் செயற்படலாம். இலங்கை கிரிக்கெட் சபை முரளியிடம் பயிற்சியளிக்க இதுவரையும் கேட்டுக்கொண்டதில்லை. தனது நாட்டிற்காக தனது முழு திறமையினையும் வெளிபடுத்தியுள்ளவர். நாட்டிற்காக செயற்பட எப்போதும் தயாராகவே உள்ளார். இலங்கை கிரிக்கெட்…

Read More

பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்

ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்க மாட்டார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவர் கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என்றும் அவர் அனைத்து மக்களின் ஜனாதிபதி என்பதால் பிரசாரப் பணிகளில் பங்கெடுக்கமாட்டார் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் மாதிரிக்கிரமத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை மஜ்மா கிராமத்தில் செமட்ட செவன மாதிரிக் கிராம வேலைத் திட்டத்தில் ஐம்பது வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. ஓட்டமாவடி பதில் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சில்மியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், கிராம சேவை அதிகாரிகள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Read More