Headlines

வட்டக்கண்டல் பிரதேசத்தில் புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வட்டக்கண்டல் ரெக்பானா பிரதேசத்தில் புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ் வீடுகளுக்கு சீரான பாதையும், மின்சார வசதிகளும் ஏற்படுத்தி கொடுப்பதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Read More

“தொல்பொருள் அடையாளப்படுத்தும் முனைப்புக்கள் இனச் சச்சரவுக்கு வழிகோலக் கூடாது” – மன்னார், அடம்பனில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன், மன்னார் – மாந்தை மேற்கு, அடம்பனில், இன்று (10) இடம்பெற்ற கட்சியின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னரான, ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தொல்பொருள்…

Read More

குழப்பத்திற்கு தூபமிடும் டிலந்தவை உடன் கைதுசெய்யுங்கள் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

-ஊடகப்பிரிவு   பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசாரதேரரைக் கைதுசெய்தால் நாட்டில்  இரத்த ஆறு ஓடும் எனவும் நாட்டிலே பாரிய குழப்பங்கள் உருவாகுமென்றும் அடிக்கடி கூறி வரும் அவ்வியக்கத்தின் தலைவர் டிலந்த விதானகேயை பொலிஸார் உடன் கைதுசெய்து, சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில பொலிஸில்; முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டுவரும் ஒருவரை கைதுசெய்ய வேண்டாம் என டிலந்த பிரச்சாரங்களை மேற்கொள்வது சட்டத்தையும், நீதியையும் கேலிக்கூத்தாக…

Read More

இராணுவ மாநாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பாதுகாப்புப் பிரதி நிதிகள் வடக்கு கிழக்கிற்கு விஜயம்

இன்றும் நாளையும் வெளிநாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வாறு வடக்கு கிழக்கின் நிலைமைகளை பார்வையிட உள்ளனர். போரின் பின்னர் வடக்கு கிழக்கின் நிலைமைகளை இவர்கள் நேரில் பார்வைளயிட உள்ளனர். இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யும் பிரதிநிதிகள் நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்ய உள்ளனர். வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு பிரிவின் 20 அதிகாரிகள் இவ்வாறு வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.A

Read More

நியூஸிலாந்து ஒரு இலட்சம் டொலர்களை இலங்கைக்கு வழங்கியது

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு இலட்சம் டொலர் நிதியுதவியை நியூஸிலாந்து வழங்கியுள்ளதாக தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு கூறியுள்ளது. அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் வேண்டுகோளுக்கமைய இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது. நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் மியுரி மெக்கலி இலங்கை உயர் ஸ்தானிகர் ஊடாக இந்நிதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த நிதியை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் என்று தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல்…

Read More

மஹிந்த சூழ்ச்சிகள் மூலமே தோற்கடிக்கப்பட்டாராம்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கை நாட்டு வரலாற்றில் மிகவும் இருண்ட தினம் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொம்பே உடுபில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது  உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கம் மகிந்த மீது கொண்டுள்ள அச்சமே இதற்கான காரணமாகும்.நல்லாட்சி அரசாங்கம் மகிந்தவை அரசியலிலிருந்து ஒரம் கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம்…

Read More

மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் எம்.பி நீக்கம் – விசாரணையின் பின் உயர்பீடம் முடிவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவரை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியான அலிசப்ரி ரஹீம் சட்டவிரோதமாக தங்கத்தைக் கடத்திய சம்பவம், கட்சிக்கும் சமூகத்துக்கும் அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கும் மற்றும் நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே,…

Read More

இரணை இலுப்பைக்குளம் வட்டார மக்களை சந்தித்த மாந்தை மேற்கு தவிசாளர்!

மன்னார், இரணை இலுப்பைக்குளம் பிரதேச சபை உறுப்பினர் அருணாசலம் (குலம்) ஐயாவின் அழைப்பின் பேரில், அங்கு சென்ற மாந்தை மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் செல்லத்தம்பு  மற்றும்  உறுப்பினர் நந்தன் ஆகியோர் அவ் வட்டார மக்களுடன் கலந்துரையாடினார்கள். அத்துடன், அவ்வட்டாரத்தில் அமைக்கப்பட்ட கிராம அபிவிருத்தி குழுக்களின் நிர்வாகத்தினரை சந்தித்துப் பேசினர். பின்னர் பரசன்குளம், சின்னவலையன்கட்டு பகுதிக்கு சென்று அங்கு மழை மற்றும் காற்றால் சேதமாகிய வீடுகளை பார்வையிட்டனர். அத்துடன், அவர்களுக்கு உரிய நிவாரணத்தை விரைவில் பெற்றுத் தருவதாகவும்…

Read More

சம்பா கிலோ 80/- பச்சையரிசி கிலோ 70/- நாடு கிலோ 72/- பாவனையாளர் அதிகார சபை இன்று விலை நிர்ணயம். அதிகரித்து விற்போருக்கு உரிய கடும் நடவடிக்கை என ரிஷாட் எச்சரிக்கை.

-சுஐப் எம் காசிம் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை இன்று (8) நிர்ணயித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியாகின்றது (வர்த்தமானி இலக்கம் 2005/24) வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று தொடக்கம் இந்த விலை அமுல் படுத்தப் படுவதாக பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த விலை நிர்ணயத்தின் படி நாட்டரிசியின் ஆகக் கூடிய சில்லறை விலை கிலோ ரூபா 72/- ஆகவும்,…

Read More

இம்முறை ஹஜ் யாத்திரை செல்ல 2240 இலங்கையர்களுக்கு வாய்ப்பு

இம்முறை ஹஜ் யாத்திரைக்காக இலங்கையில் இருந்து முதற்கட்டமாக புறப்பட்டு சென்ற குழுவினர் சவுதி அரேபியாவின் ஜோடா நகரை அடைந்துள்ளனர். 62 யாத்திரிகர்கள் இவ்வாறு சவுதி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களை சவுதிக்கான இலங்கைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர். இதேவேளை, ஹஜ் புனித யாத்திரைக்காக இலங்கையில் இருந்து இம்முறை 2240 பேர் செல்லவுள்ளனர். மக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டம் காரணமாக, இந்த வருடம் யாத்திரிகர்களின் தொகை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஹைட் மைதானத்துக்கு நானும் செல்வேன்: மஹிந்த

கூட்டு எதிரணியினரால் கொழும்பு, இப்பன்வெல ஹைட் மைதானத்தில் இன்று நடத்தப்படவுள்ள கூட்டத்தில், தான் கலந்துகொள்ளப்போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் மூலம் அறிவித்துள்ளார். ‘பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாராதீர்கள். நான் ஹைட் மைதானத்துக்குச் செல்வேன்’ என்று அவர் அந்த வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஹைட் மைதானத்தில் இன்று (17) நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க, அறிவித்துள்ளமை…

Read More

வேறு ஒருவரின் பெயரில் சிம் இணைப்புகளை பயன்படுத்த தடை!

– ஆர்.கிறிஷ்­ணகாந் – இலங்­கையில் பாவ­னை­யி­லுள்ள சகல தொலை­பேசி இணைப்­பு­களின் உரி­மை ­யா­ளர்­களை பதிவு செய்­வ­தற்­கான வேலைத்­திட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தொலைத்­தொ­டர்பு ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. அனைத்து தொலை­பேசி சேவை வழங்­கு­நர்­களின் ஒத்­து­ழைப்­புடன் இந்த வேலைத்­திட்­ட­த்தினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது வேறு ஒரு­வரின் பெயரில் சிம் இணைப்­பு­களை பெற்றுக் கொள்­வது இத்­திட்­ட­த்தி­னூ­டாக தடை செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது பாவ­னை­யி­லுள்ள சிம் உரி­மை­யா­ளர்கள் தொடர்பில் நிலவும் சிக்­கல்கள் வெகு­வி­ரைவில் தீர்ப்பதற்கு தேவை­யான அனைத்து வச­தி­க­ளையும் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தொலைத்­தொ­டர்பு…

Read More