Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

-ஊடகப்பிரிவு- 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம், இன்று முதல் (01) அமுலுக்கு வரும் வகையில் ௦7 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. பாவனையாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும் இந்த விஷேட விலைக்கழிவு இம்மாதம் 07ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்….

Read More

அமைச்சர் ராஜித அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய முடிவுகள்

ஊடகப்பிரிவு வடக்கு, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள  பிரதான  வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும், ஆளணித் தேவைகளையும்; நிவர்த்தி செய்து தருவதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளதுடன் மருத்துவ துறையில் எதிர்கொள்ளும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உடன் நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தார். கொழும்பில் சுகாதார அமைச்சின் தலைமையகமான சுவசிரிபாயவில் நடைபெற்ற உயர்மட்ட…

Read More

விபத்துக்குள்ளான விமானத்தில் ஜெர்மன் பள்ளி சேர்ந்த 16 மாணவர்கள் உட்பட 150பேரும் உயிரிழப்பு – கருப்பு பெட்டி கிடைத்தது

ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் 4யூ 9525 என்ற பயணிகள் விமானம் நேற்று ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரமான பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனின் டஸ்சல்டிராப் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், 16 பள்ளிக்குழந்தைகள் உட்பட 144 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர். பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனிச்சறுக்கு பகுதி அருகே பறந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளானது. 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன்பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான…

Read More

பொத்துவில் அந்நஜாத் ஜும்மா பள்ளிவாயலுக்கு உதவி

இர்ஸாத் ஜமால்தீன் குவைத்தில் இயங்கும் அறுகம்பே அந்நஜாத் நலன்புரி ஒன்றியத்தினரால் பொத்துவில் அந்நஜாத் ஜும்மா பள்ளிவாயலுக்குதரைவிறிப்பு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அப்பின் தலைவர் அப்துல் ஹலீம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் “ரமழானுக்கு பள்ளிவாயல்களை அழங்கரிப்போம்” என்ற வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக குறித்த தரைவிறிப்பு இன்று10 வழங்கி வைக்கப்பட்டது. அமைப்பின் முன்னால் செயலாளர் மெளலவி யூ.எல்.அப்துல் அஸீஸ், முன்னால் தலைவர் எம்.ஏ.ஏ சித்தீக், பொருலாளர் மாஹீர் சகிதம் ஏனைய உறுப்பினர்கள் பள்ளிவாயல் நிறுவாக சபைத் தலைவர் மெளலவி எஸ்.எச் அப்துல்…

Read More

மூடிக்கிடக்கும் நுரைச்சோலை வீடுகள் மக்கள் பாவனைக்கு

-சுஐப் எம்.காசிம் – சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென அம்பாறை, நுரைச்சோலையில் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் வீடுகளை விரைவில் மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் இன்று (24/06/2016) தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் அமைச்சர் இன்று (24/06/2016) பங்கேற்றார். இப்தார் நிகழ்வுக்கு முன்னதாக சாய்ந்தமருது மீனவக் குடியிருப்புக்கு விஜயம் செய்து, அங்கு வாழ்ந்துவரும் மீனவர்களையும், அவர்களின் பிரதிநிதிகளையும்…

Read More

சிறுமியின் கொலை: கம்பஹாவில் ஆர்ப்பாட்டம்

5வயதுச் சிறுமி கொட்டதெனியாவில் ஈவிரக்கமின்றி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு துணித் துண்டு ஒன்றினால்  கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் கொலைக்கான குற்றவாளியை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கம்பகாவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சிறுமி உறங்கிய கட்டில் மெத்தையில் காணப்படும் கால் தடங்கள் தொடர்பாக பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலையுடன்…

Read More

லலித் வீரதுங்கவை ஏன் கைது செய்யவில்லை – நீதிபதி கேள்வி

இலங்கை அரசின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிச் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்ப்பு மானிய ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷா பல்பிட ஆகியோருக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னர் அவர்களைக் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தத் தவறியது ஏன் என்பது குறித்து தம்மிடம் விளக்கமளிக்குமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் காவல்துறை நிதி மோசடிப்பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடந்தபோது 600 மில்லியன் ரூபா…

Read More

வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்

வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , சாணக்கியன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் வில்வரட்ணம் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

‘எமக்கு பயமில்லை’

-வி.நிரோஷினி ‘நிர்ணயிக்கப்படும் திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முகங்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது. நாம் எதற்காகவும் யாருக்காகவும் பயப்படவில்லை. கடந்த தேர்தல்களில் தைரியமாக முகங்கொடுத்து, வெற்றியீட்டிய எமக்கு, இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வெற்றி இலகுவாகவே அமையும்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்…

Read More

மக்கள் காங்கிரஸுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் வை.எல்.எஸ்.ஹமீத்!!!

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் கையெழுத்திடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருந்தது. இதற்கு எதிராக கட்சியின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீத் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். முன்னைய நாட்களில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உச்சநீதிமன்ற நீதியரசர்கள் அந்த வழக்கானது மேற்கொண்டு விசாரிக்கப்படுவது அவசியமற்றது எனக்கருதி, வழக்கை வாபஸ் பெறுவதற்கான உரிய அறிவுறுத்தல்களை பெற்றுக்கொண்டு, அதனை…

Read More

காலி கடற்பரப்பில், ஆயுதக் கப்பல் பிடிக்கப்பட்டது

கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலிக்கு அப்பால் 15 கடல்மைல் தூரத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக்கப்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடற்படை தளபதி ரவீந்திர விஜேயகுணரட்ன இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் இருந்து சுமார் 810 ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கப்பல் காலி துறைமுகத்தில் தரிக்கச்செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கப்பலில் தலைவரிடம் இருந்து இதுவரை முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பல் யுக்ரெய்னுக்கு சொந்தமானது என்று ஆவணங்களில் கூறப்பட்டுள்ளபோதும் அதன் கெப்டன் இலங்கையர் என்று கூறப்பட்டுள்ளது.

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவேன்” எம்.பி பதவியை இராஜினாமாச் செய்த நவவி அறிவிப்பு!

-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப்பிரிவு- பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் இராஜினாமாச் செய்துள்ள போதும், கட்சிக்கும் தலைமைக்கும் தொடர்ந்தும் விசுவாசமாகவே இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவி தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அந்தப் பதவியிலிருந்து நேற்று (23) இராஜினாமாச் செய்த நவவி மேலும் கூறியுள்ளதாவது, கடந்த பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின்…

Read More