Headlines

டெங்கு அபாயம் அதிகரிப்பு!

நாடு முழுவதும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 837 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். இதில் அநேகமான நோயாளர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர். கடந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களுக்குள் வட பகுதியில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு…

Read More

பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாந்துவிடக்கூடாது!

புதிய அர­சி­ய­ல­மைப்­பினால் இலங்­கையில் பௌத்த தர்­மத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள முத­லி­டமோ ஒற்­றை­யாட்­சிக்கோ எது­வி­த­மான பாதிப்பும் ஏற்­ப­டாது. இலங்கை வர­லாற்­றில சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்ள முத­லா­வது புதிய அர­சி­ய­ல­மைப்­பாக இது அமையும் என்று அர­சாங்கம் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது. பிட்­ட­கோட்­டே­யி­லுள்ள ஐ.தே.கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சபை முதல்­வரும் நெடுஞ்­சா­லைகள் மற்றும் உயர் கல்வி அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்; அர­சாங்கம் தற்­போது புதிய அர­சி­ய­ல…

Read More

முஸ்லிம்களை புறக்கணித்தால் நெருக்கடி ஏற்படும்: சம்பிக்க

அனைத்து தரப்­பி­னதும் ஒத்­து­ழைப்பின் பிர­கா­ரமே அர­சி­ய­லமைப்பு திருத்­தத்தை மேற்­கொள்ள வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்­களை புறக்­க­ணிக்கும் வகையில் இனியும் செயற்­பட முடி­யாது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். இன­வாத அடிப்­ப­டையில் தொடர்ந்தும் செயற்­பட்டால் மீண்டும் நாட்டில் உரி­மைக்­கான போராட்டம் ஏற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் எவ்­வா­றான யோச­னை­களை ஜாதிக ஹெல உறு­மய கட்சி முன்­வைக்கும் என வின­வி­ய­போதே அவர் மேற்­ கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், கடந்த…

Read More

மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது!- நீதி அமைச்சர்

wrவின் கோரிக்கைக்கு அமைய மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். யார் யாராவது கோருவதற்காகவோ அல்லது யார் யாராவது தீர்மானம் நிறைவேற்றுவதற்காகவே நாட்டின் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட முடியாது. சட்டங்களை இயற்றும் பூரண அதிகாரம் நாடாளுமன்றிற்கு காணப்படுகின்றது. மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றின் கருத்தை கோரியிருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்றில் ஒரு நாள் விவாதம் நடத்தப்பட்டிருந்தது. எனினும், மரண தண்டனை குறித்து இந்த விவாதங்களின் போது தீர்மானம்…

Read More

வித்தியாவின் படுகொலை: இன்று விசாரணை!

பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. புதிதாக இடமாற்றம் பெற்று வந்துள்ள நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த வருடம் மே மாதம் குறித்த மாணவி கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் முதலில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் கடந்த மாதம் ஆரம்ப பகுதியில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இவ் வழக்கு…

Read More

தாக்கப்பட்ட நவமணி பத்திரிகை அலுவலகம்!

களுபோவில, வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள நவமணி அலுவலகம் நேற்று முன்தினம்  (09) இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை விடுமுறை என்பதனால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது  இந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மர்மநபர் சி.சி.டி.வி.யின் இணைப்பை துண்டித்துவிட்டு, அலுவலகத்தின் பூட்டை உடைப்பதற்கு முயற்சித்துள்ளதாகவும் பூட்டின் உறுதித்தன்மை காரணமாக முயற்சி கைவிடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மர்மநபர் முகத்தை மூடிக்கொண்டு சி.சி.டி.வி.யின் இணைப்பை துண்டித்துள்ளதால் குறித்த நபரை அடையாளம் காணமுடியவில்லை. இதனை…

Read More

அரசியல் வேண்டாம், பௌத்த பிக்குவாக இருந்தால் போதும்! ஞானசார தேரர்

எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கை எதிலும்  ஈடுபடப் போவதில்லை என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுபல சேனா அமைப்பும்  அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தாம் ஒரு  பௌத்த பிக்கு என குறிப்பிட்ட அவர் இனியும் தமக்கு  அரசியல் தேவையில்லை எனவும் கூறியுள்ளார். எனினும் பொதுபலஜன பெரமுன அமைப்பு தமது கொள்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்லும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கடந்த…

Read More

ஹிருணிகா ஓர் அப்பாவி! சுமணா பிரேமச்சந்திர

தனது மகள் ஹிருணிகா அடாவடித்தனங்கள் தெரியாத ஒரு அப்பாவி என்று பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமணா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தெமட்டகொடை வாலிபர் ஒருவர் டிபெண்டர் வாகனத்தில் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிருணிக்கா கைது செய்யபட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹிருணிக்கா குறித்து அவரது தாயார் சிங்கள ஊடகமொன்றுக்கு பேட்டியொன்றை வழங்கியுள்ளார். அதில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறித்த கடத்தல் சம்பவத்துடன் ஹிருணிக்கா எவ்வகையிலும் தொடர்பற்றவர். அவரது எதிரிகளே இந்தச் சம்பவத்துடன் அவரது பெயரைத் தொடர்புபடுத்தியுள்ளனர்….

Read More

நீல மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்கள் என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். இதன் இலங்கை ரூபாய் பெறுமதி படி சுமார் 4,300 கோடி ரூபாவாகும் என உரிமையாளரான இலங்கையர் அறிவித்துள்ளார். இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட குறித்த நீல மாணிக்கக் கல்லின் நிறை 1404.49 கரட் ஆகும். முன்னதாக குறித்த மாணிக்கல்லை 175 மில்லியன் டொலர்களுக்கும் அதிக தொகையில் ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என்று மதிப்பிட்டிருந்தது. இந்நிலையிலேயே அதற்கான விலையை அதன்…

Read More

கடவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் கொலை

கடவத்தை கோனஹென பிரதேசத்தில் இன்று (10) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

குரங்குக்கு புகைப்படத்துக்கான பதிப்புரிமை கிடையாது – அமெரிக்க நீதிமன்றம்

குரங்­குக்கு புகைப்­ப­டத்­துக்­கான பதிப்­பு­ரிமை வழங்க முடி­யாது என அமெ­ரிகக் நீதி­ப­தி­யொ­ருவர் தீர்ப்­ப­ளித்­துள்ளார். குரங்கு ஒன்­றினால் பிடிக்­கப்­பட்ட செல்பீ புகைப்­படங்­க­ளுக்­கான பதிப்­பு­ரிமை அக்­கு­ரங்­குக்கே உரி­யது எனவும் அதன் கையில் கெமரா கிடைப்­ப­தற்கு வழி­வ­குத்த மனி­த­ருக்கு உரி­ய­தல்ல எனவும் பிர­க­ட­னப்­படுத்தக் கோரி, அமெ­ரிக்­காவின் சான்­பி­ரான்­சிஸ்கோ நக­ரி­லுள்ள  நீதி­மன்­ற­மொன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. மிரு­கங்கள், பிரா­ணி­களின் நலன்­க­ளுக்­காக செயற்­படும் PETA அமைப்­பினால் இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. பிரித்­தா­னிய புகைப்­ப­டப்­பி­டிப்­பாளர் டேவிட் ஸ்லேட்டர் 2011 ஆம் ஆண்டில் இந்­தோ­னே­ஷி­யாவின் சுலா­வெஸி தீவுக்குச்…

Read More

நாளொன்றுக்கு ஏழு பேர் வீதி விபத்­துக்­களால் உயி­ரி­ழப்பு

நாட்டில் தற்­போது அதி­க­ரித்து வரும் வீதி­ வி­பத்­துக்கள் கார­ண­மாக நாௌான்றுக்கு ஏழு பேர் உயி­ரி­ழப்­ப­தாக பொலிஸ் போக்­கு­வ­ரத்து பிரிவின் தலை­மை­யகம் வெளியிட்ட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அத்­தோடு நா.ௌான்றுக்கு 101 வீதி விபத்­துக்கள் பதி­வாகி வரு­வ­தையும் ஒருங்கே சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. நாட­ளா­விய ரீதியில் கடந்த ஆண்டில் மாத்­திரம் 36,894 வீதி­வி­பத்­துக்­களில் 2,771 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 7,719 பேர் பார­தூ­ர­மான காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இது­வரை காலங்­களில் கடந்த ஆண்­டான 2015 ஆம் ஆண்­டி­லேயே அதி­க­மான வீதி விபத்­துக்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக வர­லாற்றில் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் பொலிஸ்…

Read More