Headlines

அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு உலமாக் கட்சி பாராட்டு

அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகால பிரச்சினையான கரும்பு செய்கைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நஷ்டஈட்டைப்  பெற்றுக்கொடுப்பதில் முனைப்புடன் செயற்படுவதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீனை, உலமா கட்சி பாராட்டியிருப்பதுடன் இது விடயத்தில் நல்லாட்சி அரசில் துரித வெற்றி கிடைக்க பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது பற்றி அக்கட்சி குறிப்பிட்டிருப்பதாவது, 1970களில் ஹிங்குரானை சீனிக்கூட்டுத்தாபனத்துக்கென முஸ்லிம்களின் பல காணிகள் நஷ்ட ஈடு தருவதாக கூறப்பட்டு சுவீகரிக்கப்பட்டன. இவற்றில் கன்னியம்பத்தை, கல்மடுக்கண்டத்தின் குடுவில் காட்டுவெளிக்கண்டத்தில் உள்ள 319 ஏக்கர் காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடோ மாற்றுக்காணியோ…

Read More

9 மாத குழந்தையை விற்க முயன்ற தாய் கைது

9 மாத குழந்தையை விற்க முயன்ற தாய் ஒருவர் கண்டி பொலிஸ் பிரிவின் பெண்கள்மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வெளிநாடொன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில் அங்கேயே குறித்தகுழந்தையையும் பிரசவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பே இந்தப் பெண் குழந்தையுடன் இலங்கை வந்ததாகவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் ஊடாக 2000 ரூபாவிற்கு குறித்த குழந்தையைவிற்கும் போதே குறித்த பெண்ணும், முச்சக்கர வண்டி சாரதியும் கட்டுகஸ்தொட்டபொலிஸ் பிரிவில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…

Read More

பேஸ்புக்கில் அவதூறு ஏற்படுத்தும் கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும்

அரசியல்வாதிகள் தொடர்பில் பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பும் கும்பல் தொடர்பில் இன்னும் சில நாட்களில் தகவல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (16) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த அமரவீர இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேஸ்புக் கும்பலில் 40 தொடக்கம் 50 வரையான நபர்கள் இருப்பதாகவும், இவர்களுக்கான பணம் வழங்குவதெற்கென சிலர் இருப்பதாகவும்…

Read More

ஜனாதிபதி செயலகத்திலிருந்து சென்ற அழைப்புகள் குறித்து விசாரணை

றகர் விளையாட்டு வீரர் தாஜூதீன் படுகொலை செய்யப்பட்ட அன்றைய தினம், நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்தவர் மற்றும் இன்னும் சில அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்புகள் சில வந்துள்ளன என்று நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையில், நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே, அரச சிரேஷ்ட சட்டத்தரணி டிலான் ரத்னாயக்க மேற்கண்ட விடயத்தை நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.  இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்திலிருந்து உள்வந்த தொலைபேசி…

Read More

பதுளையில் முஸ்லிம் வியாபாரி வெட்டிக்கொலை

பதுளை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகாமையில் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் முஹமட் ரொசான்  என்பவர் (வயது – 45) கூரிய ஆயுதத்தினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பதுளை நகரில் வீதி வியாபரத்தில் ஈடுபடும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இக் கொலை தொடர்பில் பொலிசார் மேலதிக வசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Read More

ரயில் சேவைகள் பாதிப்பு.!

வனவாசல பகுதியில் நேற்றிரவு (7) கெண்டனர் வாகனம்  ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த வழியாக செல்லும் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. விபத்து காரணமாக ரயில் பாதைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை திருத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

உலக உணவு தினம் இன்று

உலகில் அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி உலக உணவு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்படி  “குடும்ப விவசாயம் : உலகுக்கு உணவளிப்போம், பூமியை காப்போம்’ என்பது இந்த ஆண்டின் தொணிப்பொருளாக அமைந்துள்ளது. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனித உரிமையாக கருதப்படுகிறது. வசதி வாய்ப்பற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா சபை. உலகில்…

Read More

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க வேண்டும் புத்தளத்தில் அமைச்சர் ரிஷாத்

இந்த தேர்தலில் நாம் எடுக்கின்ற முடிவே எமது நாட்டினதும்,மக்களினதும்,சுதந்திரம்,பாதுகாப்பு,அபிவிருத்தி என்பவைகளை கொண்டுவரும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் எமக்கு ஆபத்துக்கள் வருகின்ற போது அதற்காக ஜனநாயக ரீதியாக வேண்டிய சமூகமே முஸ்லிம் சமூகம் என்றும் கூறினார். புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிளைகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் தில்லையடி அம்மார் மண்டபத்தில் சனிக்கிழமை இடம் பெற்ற போது அமைச்சர் றிசாத் பதியுதீன்…

Read More

தங்களை பிரபல்யப்படுத்துவதற்காக அமைச்சர் றிஷாத் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் – அஸ்கர் ரூமி

பாறுக் சிகான் அமைச்சர் றிஷாத் மீது அபாண்டமாக குற்றம் சாட்டும் தரப்பு தங்களை பிரபல்யப்படுத்தும் வங்குரோத்து செயற்பாட்டில் ஈடுபடுவதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸ்கர் ரூமி குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது பல தரப்பால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றது தொடர்பாக செய்திகள் தெரிவிக்கின்றனவே என கேட்டவேளை இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தனது கருத்தில் அமைச்சர் இன்று ஒரு தேசிய தலைவனாக மக்கள் மத்தியில் திகழ்கின்றார்.இவரை வீழ்த்த பலரும் நினைக்கின்றனர்.இது குறித்து பகல்…

Read More

175 ஆண்டுக்கு முன் உலகில் வெளியிடப்பட்ட முத்திரையை, இலங்கை மீண்டும் வெளியிடுகிறது

உலகில் வெளியிடப்பட்ட முதலாவது முத்திரை புதிய முத்திரையாக இலங்கையில் மீள வெளியிடப்படவுள்ளது. 1840ம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி உலகின் முதல் முத்திரை வெளியிடப்பட்டது. அப்போதைய பிரிட்டன் அரசியான விக்டோரியா மகாராணியின் மார்பளவு புகைப்படம் இந்த முத்திரையில் பதிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரையின் அப்போதைய மதிப்பு ஒரு பென்னி (பவுண்ட்சின் சத அலகு) ஆகும். இந்த முத்திரை வெளியிடப்பட்டு தற்போதைக்கு 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உலக தபால் தினத்தை முன்னிட்டு உலகில் முதலாவதாக வெளியிடப்பட்ட முத்திரையை…

Read More

போலி கச்சேரியை சுற்றிவளைப்பு

மாத்தறை கொப்பராவத்தை பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்திவரப்பட்டபோலி கச்சேரியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரொருவரும் கைதசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் மாத்தறை பிரதேசத்ததைச் சேர்ந்த 41 வயதாகனவர் என தெரிவிக்கப்படுகின்றது. சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது குறித்த இடத்திலிருந்து போது அடையாள அட்டைகள்,  பிறப்புச்சான்றிதல்கள் , அரச நிறுவனங்களின் முத்திரைகள் மற்றும் இதற்காக பயன்படுத்தப்பட்டகணினி என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More