Headlines

தம்மாலோக தேரரின் பிணை மனு மீது இன்று விசாரணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் உடுவே தம்மாலோக தேரரை பிணையில் விடுவிக்குமாறு கேட்டு முன்வைக்கப்பட்டுள்ள மனு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சட்ட ரீதியான அத்தாட்சிப் பத்திரம் இன்றி யானையொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் உடுவே தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காலஞ் சென்ற அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகளில் சந்தேகநபரான உடவே தம்மாலோக தேரரை சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கலந்து கொள்ள அனுமதிக்குமாறும் கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான்…

Read More

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சேகு பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பட்டியடிப்பிட்டியில் இன்று மாலை 07.00 மணிக்கு இடம்பெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் பங்கேற்கவுள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் சேகு இஸ்ஸதீன் இணைந்தவுடன் பங்கேற்கும், முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில் பிரபல அறிவிப்பாளரும், மக்கள் காங்கிரஸின் கல்முனை அமைப்பாளருமான எ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

எனது செயலை கடந்த ஆட்சியின் ஊழல்களுடன் ஒப்பிட வேண்டாம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்றுள்ள குழுவில் ஜனாதிபதியின் மகனும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன. எனவே இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன, தன்னுடைய பேஸ்புக்கில் விளக்கமளித்துள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு தன்னுடைய தாய்க்கு அழைப்பிதழ் வந்தது. ஆனால் அவரால், இதில் பங்கேற்க முடியாமல் போனது, எனவே அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது….

Read More

பிரேதப் பெட்டிக்குள் பூவாடை தேடும் ஐய்யூப் அஸ்மின்

மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சீற்றம். வன்னி மாவட்ட தமிழ் மக்களினது அபிலாஷைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கருத்துக்களைக் கூற மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் பழகிக்கொள்ள வேண்டுமென்று முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு பிரதேச சபைகளை  அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமை தொடர்பிலும், அந்த பிரதேச மக்கள் வழங்கிய ஆணைகளை கொச்சைப்படுத்தியும்…

Read More

ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரன் அமைப்பாளராக நியமனம்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன கம்பஹா மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வியாழக்கிழமை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவராகவே ஜே.ஆரின் பேரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

‘ஆசிரியையின் வாயை மூடியது தவறு’: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

“பாடசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து, கல்வி அமைச்சு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட கொழும்பு, மஹாநாம வித்தியாலயத்தின் ஆசிரியையின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக, கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்றுப் புதன்கிழமை தீர்ப்பளித்தது. அத்துடன், குறித்த ஆசிரியைக்கு நட்டஈடு வழங்குமாறும், பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இலங்கை அரசியல் அமைப்பில் 12.1 உறுப்புரை மற்றும் 14.1 உறுப்புரையில் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 12….

Read More

அரசியல் கைதிகளுக்கு இன்று முதல் பிணை

சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்கும் செயற்­பாட்­டுக்கு சட்­டமா அதிபர் திணைக்­களம் எதிர்ப்புத் தெரி­விக்கக் கூடாது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். அந்த வகையில் இன்று முதல் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்கும் செயற்­பாடு இடம்­பெறும் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி தமிழ் அர­சியல் கைதிகள் மீண்டும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். இந்­த­நி­லையில் இவ்­வி­டயம் குறித்து தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்சர் மனோ கணேசன் நேற்று பிர­தமர் ரணில்…

Read More

சூடுவெந்தபுலவு கிராம மக்களுடனான சந்திப்பு

சூடுவெந்தபுலவு கிராம மீனவர் சங்கத்தினரின் அழைப்பையேற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களை  சந்தித்துக் கலந்துரையாடினார்

Read More

Top 10 சாதாரண தர சிறந்த பெறுபேறு பெற்றவர்கள் இவர்களால்தான்.. (இம்முறை மாணவன் முதலிடம்)

வெளியாகியுள்ள 2014ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கொழும்பு, நாலந்த கல்லூரியைச் சேர்ந்த எல். தரிந்து நிர்மால் விக்கிரமசிங்ஹ சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம், முதல் 10 இடங்களை பெற்றுகொண்ட மாணவர்களின் விவரங்கள்: 1. எல். தரிந்து நிர்மால் விக்கிரமசிங்ஹ – நாலந்த வித்தியாலயம், கொழும்பு 2. டப்ளியு. ஏ. சந்துனி நவன்ஜனா – ஹொலி க்றோஸ் கல்லூரி, கம்பஹா 3….

Read More

முஸ்லிம் ஒருவரின் படுகொலை மிகவும் துரதிஷ்டவசமானது -மோடி

– சாகுல் ஹமீட் – இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கருத்து தெரிவித்துள்ளார். அதில், தாத்ரி சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இது போன்ற சம்பவங்களை அரசு ஒருபோதும் ஆதரிக்காது. இதனை அரசு எதிர்க்கிறது. பா.ஜ.,வும் சரி, அரசும் சரி, நானும் சரி இந்த போலி மதவாதத்தை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சிகள் இதனை வேண்டுமென்றே பிரச்னையாக்க முயற்சிக்கின்றன. பாக்., பாடகர் குலாம் அலி விவகாரம் சர்ச்சை ஆக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி உட்கொண்டதாக…

Read More