முசலி, இலந்தைக்குளம் கிராமத்துடான சந்திப்பு
முசலி, இலந்தைக்குளம் கிராமத்தினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார்
முசலி, இலந்தைக்குளம் கிராமத்தினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார்
முசலி, வெள்ளிமலைக் கிராமத்தினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார். #AcmcNews #Lka #srilanka #ரிஷாட்_பதியுதீன் #RB
முசலி, வெள்ளிமலைக் கிராம மாதர் அமைப்பினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார். #AcmcNews #Lka #srilanka #ரிஷாட்_பதியுதீன் #RB
சீனத்தேசத்திலிருந்து உலகலாரீதியாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இதற்கான பாடசாலை மாணவர்கள் சுத்தம் சுகாதாரம் பேணி நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமம் மீரா நகர் முஸ்லிம் வித்தியாலயத்தில் நேற்று (30) இடம் பெற்ற தேசிய மட்டத்துக்கு சிறுவர் அத்திலாந்திக் போட்டியில் தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில்…
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து, பரிதவிப்புடன் வாழ்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே முதன்முதலில் நாங்கள் அந்தப் பிரதேசத்தில் கால்பதித்தோம் எனவும் அப்போது, அரசியல் சார்ந்த எந்த நோக்கமும் இருக்கவில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்று காலை (27) இடம்பெற்ற மக்கள் பணிமனை திறப்பு விழாவில் அவர் உரையாற்றினார். அவர் அங்கு கூறியதாவது, “மோசமாக பாதிக்கப்பட்ட இந்த மாவட்டத்துக்கு நாம் வந்தபோது, வாகனங்களும்…
அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும் போது, அது இனரீதியாக செயற்படுவதாகவே தோன்றுகின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் எம் .பி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய அவர் கூறியதாவது, இரண்டு வருடங்களுக்கு முன்னர் வவுனியா அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர், மன்னார் அரசாங்க அதிபராக இருந்த முஸ்லிம் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் , வவுனியாவில் முஸ்லிம் ஒருவருக்கு இந்தப்பதவி வழங்கப்பட்டது. மூன்று இனங்களும்…
மாவடிப்பள்ளியில் அமைந்துள்ள ஒரேயொரு பாடசாலை கமு/அல் – அஷ்ரப் மகா வித்தியாலயமாகும்.இங்கு தரம் ஒன்று தொடக்கம் சாதாரண தரம் வரையான வகுப்புக்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகிறது. இப்பாடசாலையில் கல்வி கற்ற பல மாணவ மாணவிகள் வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், சமூகத்தில் உயர் அரச பதவிகளிலும் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமின்றி இப்பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை ரீதியிலும், மாகாண மட்ட ரீதியிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ஊருக்கும், பாடசாலைக்கும் பெறுமைபெற்றுத்தந்துள்ளனர். இருந்த போதிலும்…
வவுனியா, பம்பைமடு குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு அவசரமாகத் தீர்வுகண்டு, சாளம்பைக்குளம் உட்பட சுற்றுச்சூழவுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் சுக வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்குமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, “இந்தப் பிரச்சினை, தீர்வுகாணப்படாமல் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றது. பிரதேச மக்கள் குப்பைமேட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்தகாலங்களிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த போது, அதிகாரிகள் உறுதிமொழிகளை வழங்கி,…
சிரேஷ்ட அறிவிப்பாளரும் சிம்மக்குரலோனுமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மறைவு, ஊடக உலகில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார். ஜிப்ரியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்துள்ளதாவது; மரணத்தின் விதிக்கு உட்படாத ஆத்மாக்கள் எதுவும் உலகில் பிறப்பதில்லை. இறைவனின் இந்த விதிக்கு இலக்காகி இன்று ஜிப்ரி அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார். எமது கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட அவர், பன்முக…
சிறுபான்மை சமூகத்தின் ஆதரவின்றி அரசாங்கத்தை உருவாக்கி, அதன்மூலம் சிறுபான்மை மக்களை மலினப்படுத்தும் பேரினவாதிகளின் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நமது மக்களின் வாக்குகளை செல்லாக்காசாக்கும் சதி முயற்சிகள் குறித்து விழிப்பாக இருக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஹனீபா மதனி தலைமையில், அக்கரைப்பற்றில் நேற்று மாலை (18) இடம்பெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் நிந்தவூர்…
கட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நாம் பார்க்கவேண்டி இருக்கின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேசபைக்குட்பட்ட கட்சியின் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (16) மாலை நடந்த இந்த சந்திப்பின்போது மாந்தை மேற்கு பிரதேசபை தவிசாளர் செல்லத்தம்பு,மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர், கட்சியின் முக்கியஸ்தரான அமீன் உட்பட பல பிரமுகர்கள் உடனிருந்தனர். அதிகாரத்தோடும் பதவியோடும் இருக்கின்றபோது எம்முடன்…
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று (15/01/2020) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். அங்கு தமது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் விரிவாக பேசினார். எதிர் வரும் பொதுத்தேர்தலில் கட்சி எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பது தொடர்பில் ஆதரவாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். -ஊடகப்பிரிவு-