Headlines

சிறுமி சேயாவுக்கு நேர்முகப் பரீட்சை கடிதம்

கழுத்து நெரிக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அக்­க­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற  ஐந்து வயதுடைய சிறுமியை 2016 ஆம் ஆண்டு முதலாம் தர வகுப்பில் இணைத்து கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை அழைப்பு கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம் 28 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு மினுவாங்கொட ரோமன் கத்தோலிக்க பாடசாலை இக் கடிதத்தை அனுப்பியுள்ளது. அடுத்த ஆண்டு சிறுமி சேயாவை முதலாம் தரத்தில்…

Read More

மைத்திரியை ஆதரித்து இளைஞர் முன்னணியின் கூட்டம் இன்று

பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணியினால் பரப்புரைக் கூட்டம் ஒன்று இன்று மாலை பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது. மாவட்ட மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கூட்டத்தொடரின் முதலாவது பரப்புரையே இன்று நடைபெறவுள்ளதாக ஐக்கிய இளைஞர் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

Read More

பழுதடைந்த 20 இலட்சம் பெறுமதியான கட்டாக் கருவாடு புறக்கோட்டையில் பறிமுதல்

-ஊடகப்பிரிவு பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் நோக்கில் புறக்கோட்டையில் பாரிய குளிரூட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த 2000 கிலோ கட்டாக் கருவாட்டினை நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் இன்று கைப்பற்றியதோடு அந்த விற்பனை நிலையத்தினையும் சீல் வைத்து மூடினர். வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தக் கருவாடு ரூபா 20 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியானதென நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த இந்தக் கருவாட்டினை பண்டிகைக் காலத்தில் துண்டு துண்டாக வெட்டி பொதி செய்து…

Read More

நிந்தவூர் பிரதேச சபைக்கு தாஹிர் எம்.பி விஜயம்..!

பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரின் அரசியல் பயணத்தில் மிக முக்கிய பங்கு வகித்த நிந்தவூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, இன்றைய தினம் (09) பிரதேச சபைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது, பிரதேச சபையின் செயலாளர், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இங்கு கருத்து தெரிவித்த அஷ்ரப் தாஹிர் எம்.பி, “நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இங்கு வந்து நிற்பதற்கு…

Read More

புதிய அரசாங்கத்தின் 1வது வரவு செலவுத்திட்டத்தில் கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலை

– ஏ.எஸ்.எம்.இர்ஷாத் – புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டத்;தில் கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலையொன்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடசாலை நிர்மானித்துக் கொடுக்கப்படுமென நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்க உறுதியளித்துள்ளார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இன்று புதன்கிழமை(12) நடைபெற்ற மௌலவிமார்கள், புத்திஜீவிகளுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீனும் பங்கேற்றிருந்தார். அமைச்சர் ரவி கருணாநாயக்க இங்கு உரையாற்றுகையில் கொழும்பு மாவட்ட…

Read More

‘குண்டுதாரி இன்ஷாபின் கொலொசஸ் நிறுவனத்துக்கு செம்பு வழங்குமாறு எழுத்துமூல வேண்டுகோள் விடுத்தவர்களையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும்’ – மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

கைத்தொழில் அபிவிருத்தி சபை மூலம் (IDB) குண்டுதாரி இன்ஷாப் அஹமட்டின் கொலொஸஸ் தனியார் நிறுவனத்துக்கு செம்பு  வழங்கியதாக, அந்த நிறுவனத்துக்கு பொறுப்பான அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அடிக்கடி விசாரணைகளுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைக்கின்றனர். ஆனால், குண்டுதாரி இன்ஷாப் அஹமதுக்கு சகாய விலையிலும் அதிகளவிலும் செம்பு  வழங்குமாறு வேண்டுகோள் கடிதம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவின் பொதுசன தொடர்பு அதிகாரி, அப்போதைய பாதுகாப்பு அமைச்சரின் மேலதிக செயலாளர் உட்பட முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்…

Read More

2000 ஆண்டு பழமையான மட்பாண்ட துண்டுகள் கண்டுபிடிப்பு

இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொட,கிரிமகுல்கொல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராச்சியின் போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன. களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜா சோமதேவ உள்ளிடட குழுவினர் இந்த அகழ்வாராச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று இந்த பண்டைய கால மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன.

Read More

ஐ.நா குழு இலங்கைக்கு வருகை

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இவர்கள் உத்தியோகபூர்வமாக எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் வருகை தரும் இவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்கள். இந்தக் காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்களை தேடிப்பார்க்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் காலி போன்ற இடங்களுக்கும் விஜயம்…

Read More

முஸ்லிம் பெண்களின் திருமண வயது 15 – குஜராத் நீதிமன்றம்!

முஸ்லீம் பெண்களின் திருமணவயது 15  என குஜராத் உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளது. 17 வயதான முஸ்லீம் இளம் பெண்ணை திருமணம் செய்தவர் மீது குழந்தைத் திருமண சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்து உள்ளது. முஸ்லீம்களின் தனிச் சட்டத்தின் படி பெண்கள் பருவம் அடைந்து இருந்தாலோ அல்லது 15 வயது பூர்த்தி அடைந்து இருந்தாலோ பெற்றோரின் சம்மதம் இன்றியும் திருமணம் செய்து கொள்ளலாம். இந்நிலையில்…

Read More

‘வடக்கு முஸ்லிம்கள்: வாக்களிப்பதற்கு மட்டும்தானா?’ (கட்டுரை)

ரஸீன் ரஸ்மின் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்துவரும் வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. எனவே, நல்லாட்சியை நோக்கி செல்லும் இந்த புதிய அரசு ஆட்சியமைக்கும் காலத்தில் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கம் வன்னி முஸ்லிம்களின் உள்ளத்தில் இருந்தாலும் அடுத்த புதிய அரசாங்கத்திலாவது தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வன்னி முஸ்லிம்களும் பொதுத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வுன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும்…

Read More

மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டேன்- நிமால் ஸ்ரீபால

எதிர்வரும் காலங்களில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என சிவில் போக்குவரத்து மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டிசில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தனது சட்டதரணி தொழிலையே செய்வதற்கு முடிவு எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விடயம் தொடர்பில் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் அமைச்சர் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

பெண் பணியாளர்களுக்கு பதில் ஆண் சேவையாளர்-வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவிப்பு

பணிப்பெண்களுக்கு பதிலாக பயிற்சி பெற்ற ஆண் சேவையாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு பெண்களை பணிப்பெண்களாக அனுப்புவதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி யுள்ளது என்றும், அவற்றை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் குறித்துஆலோசிக்கப்படுகின்றது என்றும் அவர் கூறினார். அதேவேளை, கடந்த காலங்களில்வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாள்களாக செல்லும் பெண்கள் பல்வேறான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு…

Read More