Headlines

ஆசிய கிரிக்கட் சபையின் தலைமையகம் கொழும்பில்

விளையாட்டுத்துறை அமைச்சர்  தயாசிறீ ஜயசேகரவால் ஆசிய கிரிக்கட் சபையின்  தலைமையகம்  இலங்கையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு – 07 மெயிட்லாண்ட் கிரிசென்ட் வீதியில் கடந்த 20ந் திகதி ஆசிய கிரிக்கட் சபை  தமது தலைமையகத்தை திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கிரிக்கட் சரித்திரத்தில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். குறித்த  அலுவலகத் திறப்பு விழா வைபவத்தின் பிரதம அதிதியாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க சமூகமளித்திருந்தார்.

Read More

அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு நாளை

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாளை (05) பிற்பகல் 2 மணிக்கு அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய நாளை(05) முதலாவது அமர்வு நடைபெறுகிறது. 2017ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றை உருவாக்கி அதனை  சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. விருப்பு வாக்கை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறையை மாற்றுதல், தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன்வைக்கத்தக்க…

Read More

ஜனாதிபதியின் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் “வவுனியா மாவட்டத்திற்கான சிறுநீரக நோய்த் தடுப்புக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் போகஹகஸ்வேவ பிரதேசத்தில் நேற்று (12) இடம்பெற்றது. இந் நிகழ்வில் கௌரவ அமைச்சர் றிஷாத் பதியூதீனும் பங்கேற்றிருந்தார்.

Read More

சிங்கள- பௌத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும்: இராயப்பு ஜோசப்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதுடன், சிங்கள- பௌத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயருமான இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு மூவின மக்களையும் சரிசமமாக கருத்தில் கொள்ளும் ஒருவரையே ஆட்சிப்பீடத்தில் அமர்வதற்கு ஆதரவளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் தரப்பு தொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசின் ஒட்டுண்ணித் தாவரங்கள் போன்றே இருக்கவேண்டும் என்ற கருதுநிலையை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அரசியல் யதார்த்தத்தை புரிந்து…

Read More

21 வது நாளாக தொடரும் மறிச்சுக்கட்டி பூர்வீக மண்ணை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க குருணாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் களத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட முக்கியஸ்தர் அசார்தீன் மொய்னுதீன் அவர்களினால் போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மறிச்சுக்கட்டி மக்களின் இந்த சாத்வீக போராட்டம் தொடர்பில் குருணாகல் மாவட்ட பெரும்பான்மை அரசியல் தலைமைகளுக்கு தெளிவு படுத்தி அவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வதாகவும் தெரிவித்தனர். இப் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மௌஜூத், களுத்துறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹசீப் மரைக்கார்  ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதி மைத்திரி ஜேர்மன் நோக்கி பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜேர்மனுக்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார். ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார். இதன் முதல் கட்டமாக ஜனாதிபதி இன்று (15) ஜேர்மனுக்கு செல்லவுள்ளார். ஜேர்மனிய அதிபர் ஏஞ்சலா மோர்கலின் அழைப்பை அடுத்தே இந்த விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்திக்கொள்வது குறித்து இந்த விஜயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ்…

Read More

ஐ.எஸ்.ஐ.எஸ்சை அழிக்க அமெரிக்கா அடுத்த திட்டம்

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்த முயலும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் புதிய போர் செயல்திட்ட உத்தி வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் “ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு எதிரான அறிவிப்பை புதன்கிழமை அன்று வெளியிடவுள்ளேன். இருப்பினும் இந்த அறிவிப்பில் அவர்களுக்கு எதிரான அமெரிக்க தரைப்படைகளின் தாக்குதல் தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறாது. இவர்களுக்கு எதிரான சண்டையை ஈராக் போர் என்று கூறிவிட முடியாது. இது கடந்த 7 வருடங்களாக அமெரிக்கா…

Read More

போலாந்தில் இப்படியும் நடைபெற்றது..!

போலந்து நாட்டின் வார்சாவில் உள்ள விலங்கியல் காப்பகத்தில் காதலில் மூழ்கித் திளைத்த காரணத்திற்காக பிரிக்கப்பட்ட இரண்டு கழுதைகள் பிரிக்கப்பட்டு மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. அந்தக் கழுதைகளின் பெயர் நெப்போலியன் மற்றும் அனடோசியா என்பதாகும். இருவரும் இப்போது மீண்டும் தங்களது காதலைத் தொடர்கின்றனர். இரு கழுதைகளும் காதலில் மூழ்கித் திளைத்ததாக கூறி சமீபத்தில் இதைப் பிரித்து விட்டனர். இரு கழுதைகளும் கிட்டத்தட்ட 10 வருடமாக ஒன்றாக சுற்றித் திரிந்த காதல் பறவைகளாகும். ஆனால் இந்த விலங்கியல் பூங்காவுக்கு வந்த…

Read More

முஸ்லிம்களின் தேசியத் தலைவராக றிஷாத் பதியுதீன் சாய்ந்தமருது மக்ககளால் பிரகடனம்

– அகமட் எஸ். முகைடீன் – திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியினை உறுதிப்படுத்தும் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருது கடற்கரையில் அமைந்துள்ள ஆப்பிள் திடெலில் நேற்று முன்தினம் (8) மாலை நடைபெற்றது. கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இவ்வெழுச்சிக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சரிமான…

Read More

மூதூர் இளைஞர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பு

மூதூர் இளைஞர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பொன்று மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் (30) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், இராஜாங்க அமைச்சர் அமீர்அலி , அநுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் றகுமான் , கட்சியின் பொதுச் செயலாளர் சுபைர்தீன், பிரதி தலைவர் ஜெமீல், கனியவள கூட்டுத் பணிப்பாளர் ரசாக் , ஆரம்ப கல்விப் பணிப்பாளர் தெளபீக் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்…

Read More

கூட்டு வன்புணர்ச்சியே சிறுமி சாவுக்கு காரணம் : நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களிடம் ஊரவர்கள் கதறல்

வவுனியா, கனகராயன் குளத்தைச் சேர்ந்த 16வயதுச் சிறுமி திடிரென உயிரிழந்தமைக்கு அவர் 10 பேரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமையே காரணம் என்று ஊரவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். சிறுமியின் வீட்டுக்கு நேற்றச் சென்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடம் சிறுமியின் உறவினர்களும்,ஊரவர்களும் இதனைத் தெரிவித்தனர். சம்பவத்தை மூடிமறைத்துவிட குற்றவாளிகள் முயன்று வருகின்றனர் என்றும் ஊரவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். (U)

Read More

அடுத்தவருடம் இலவச வாட்ஸ்அப் CALL – இஸ்ரேலின் Viber க்கு பாதிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ்அப் நிறுவனம் தனது இலவச வாய்ஸ் கால் சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பின் இந்த இலவச வாய்ஸ் கால் சேவை 2015ல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாய்ஸ் கால் சேவை சரியாக தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய அம்சங்களை கொண்ட வாட்ஸ்அப் வெளியிடுவதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளதால் அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது. இத்தகைய பிரபலமான வாட்ஸ்அப் 600 மில்லியன்…

Read More