Headlines

மியன்மார் விராத்து இலங்கை வருகிறார்..!

28 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் பொதுகூட்டத்தில் தேசிய தலைவரை அறிவிக்கவுள்ளதாக பொதுபல சேனா வட்டாரங்கள் தகவல் வெளிட்டுள்ளன. அதேநேரம் மியன்மாரின் சர்ச்சைக்குரியபௌத்த மத அமைப்பான 969 இயக்கத்தின் தலைவர் அஷின் விராத்து கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகிறது.

Read More

ACMCயின் திகாமடுள்ள மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று மாலை (13-08-2015)சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்,தேசியப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல்; தலைமையில் நடைபெற்ற இந்த இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடலில் முன்னாள் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்அமீர் அலி. முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம்.முபீத் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளீட்ட பெரும் தொகையான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

Read More

ஜனாதிபதிக்கு கிடைக்கும் முன்னர் சட்டவிளக்கம் எவ்வாறு அரச ஊடகத்துக்கு சென்றது? – சட்டத்தரணிகள் கேள்வி

“ஜனாதிபதிக்கு கிடைக்கும் முன்னர் சட்டவிளக்கம் எவ்வாறு அரச ஊடகத்துக்கு சென்றது?” என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது. ஜனாதிபதிக்கு இந்த சட்டவிளக்கம் நவம்பர் 10ம் திகதியன்று கிடைத்தது. எனினும் அதற்கு முன்னர் நவம்பர் 9ம் திகதியன்று அரச ஊடகம் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தகவல்களை வெளியிட்டது. எனவே இந்த விடயத்தை சாதாரணமானதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார். இதன்போது உயர்நீதிமன்றத்தில் எத்தனை மனுக்கள் தாக்கல்…

Read More

ஐ.தே.க தனித்து போட்டியிடும் – கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசிய கட்சி அடுத்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தனித்து போட்டியிடவே தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான கட்சி மட்ட பேச்சுவார்த்தைகளே தற்போது மேற்கொள்ளப்படுவதாக அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். அடுத்த உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்பன இணைந்து செயற்படுவது தொடர்பில் எந்தவொரு தீர்மனங்களோ பேச்சுவார்த்தைகளோ கட்சிகள் மத்தியில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவை அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளே எனவும் தெரிவித்தார். உலக வர்த்தக…

Read More

வவுனியா, தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம்!

வவுனியா, தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் (26) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Read More

அதிபர் பதவி ஓய்வுக்கு பின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஒபாமா திட்டம்

தற்போது அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற 2017–ம் ஆண்டு முடிவடைகிறது. அதன் பின்னர் எதிர்காலத்தில் அவர் மேற்கொள்ளும் பணி குறித்து தற்போது பல யூகங்கள் எழ தொடங்கி விட்டன. இந்த நிலையில் அவர் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பணிபுரிய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கொலம்பியா பல்கலைக் கழக தலைவர் லீ பொலிக் கர் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது…

Read More

பாராளுமன்றம் கலைக்கப் பட்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!:10 ரஷ்யத் துருப்புக்களைக் கைது செய்தது அரசு

திங்கட்கிழமை உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷெங்கோ அந்நாட்டுப் பாராளுமன்றத்தைக் கலைத்திருப்பதாகத் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும் ஆக்டோபர் 26 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கெய் லவ்ரோவ் கூறுகையில் உக்ரைன் விவகாரத்தில் தேசிய இணக்கப் பாட்டைக் கொண்டு வரக் கூடிய எந்தவொரு முடிவிலும் ரஷ்யா பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் உக்ரைனுக்கு இவ்வாரம் 2 ஆவது மனிதாபிமான உதவித் தொடர் வாகன அணியை அனுப்பவும் ரஷ்யா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்….

Read More

யுவதிகளின் தொழில் முயற்சிக்கு கரம் கொடுத்த ACMC தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்கள்

மன்னார் நகர சபை எல்லைக்கு உட்பட்ட. பணங்கட்டுக்கொட்டு கிராம யுவதிகளுக்கான தையல் பயிற்சி வகுப்பு இன்றைய தினம் ரெஜீவன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளர் றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர்களான நஹுசீன், உவைசுல் ஹர்ணி, வடிவுக்கரசி, டிலானி…

Read More

வத்திக்கானில் பாப்பரசர் – மைத்திரி சந்திப்பு!

பாப்பரசர் பிரான்சிஸுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14) வத்திக்கான் விசேட வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைக்குத் தான் விஜயம் செய்திருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட வரவேற்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட பாப்பரசர், உபசரிப்பும் நற்புறவும் நிறைந்த மக்களையும் இயற்கை அழகையும் கொண்ட ஒரு வளமான நாடு இலங்கை என ஜனாதிபதியிடம் தெரிவித்தார். இலங்கையின் ஐக்கியம் மற்றும் சகவாழ்வுக்காக ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சித் திட்டங்களுக்குத் தனது மகிழ்ச்சியை வெளியிட்ட பாப்பரசர், உலகில் இன்று இடம்பெறும்…

Read More

ஆஸி. சுற்றுலா பயணிகளிடம் கோரிக்கை

– ஜே.ராஜன் – இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளுக்கு புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷெப், தெரிவிக்கையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் இலங்கை அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவம்  தொடர்பான அறிவுறுத்தல்களை பின்பற்றுதல் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கையிலுள்ள  ஏனைய சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு இலங்கை சுற்றுலா அமைச்சினூடாக…

Read More

சவூதியில் மூன்று இலங்கையருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

இலங்கையர்கள் மூவருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யெமனியர் ஒருவரை கொலை செய்துவிட்டு அவரது உடமைகளை கொள்ளையடித்தமை தொடர்பில் இந்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தண்டனையை குறைப்பது அல்லது நீக்குவது குறித்து தொடர்ந்தும் சவூதி அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார். சவூதி நீதிமன்றில் குறித்த மூவர் மீதான கொலை, கொள்ளைக் குற்றச் சாட்டுக்கள் ஊர்ஜிதமாகியுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு…

Read More

கோறளைப் பற்று மேற்கு பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நேற்று 19.12.2016 கோறளைப் பற்று மேற்கு பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் ஜனாப் நெளபல் , பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More