Headlines

“உய­ரிய சில்­லறை விலையை” மீறி அத்­தி­யா­வ­சிய பொருட்­களை விற்­பனை செய்தால் நடவடிக்கை

வற்­வரி திருத்­தங்­களின் போது அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­கான வற்­வரி அதி­க­ரிக்­கப்­ப­டாது. அரசின் “உய­ரிய சில்­லறை விலையை” மீறி அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை விற்­பனை செய்­வோரை கண்­டு­பி­டிக்க நாடு முழு­வதும் விழிப்­புக்­கு­ழுக்கள் சோத­னை­களை மேற்­கொண்டு வருகின்றன என்று அர­சாங்­கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்­பாக ஆராயும் குழு தெரிவித்தது. கொழும்பில் நிதி­ய­மைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இங்கு வர்த்­தக வாணி­பத்­துறை அமைச்சின் செய­லா­ளரும் அர­சாங்­கத்தின் வாழ்க்கை செலவு தொடர்­பாக ஆராயும் குழுவின் தலை­வ­ரு­மான ரி.வி.கே.பி.தென்­னகோன் மேலும்…

Read More

முஸ்லிம் சமூகத்தின் முதுகில் நிரந்தர அடிமைச்சாசனம் எழுதப்படும் அபாயம். அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு.

புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீபி எழுதிய ‘நான் மூச்சயர்ந்த போது’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்தளை ஹூணுப்பிட்டி சாஹிரா மகா வித்தியாலயத்தில் நேற்று (11)  நடைபெற்ற போது அமைச்சர் றிஷாத் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த அச்சத்தை வெளியிட்டார். முஸ்லிம்…

Read More

‘மக்கள் பணியில் கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடு’ மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தயானந்தன் பாண்டியங்குளத்தில் விசனம்!

-ஊடகப்பிரிவு- கொழும்பிலே கூடி மகிழ்ந்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அபிவிருத்தித் தேவைகளையும், இன்னோரன்ன உதவிகளையும் பெற்றுவரும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், இந்தப் பிரதேசங்களில் அவரைப் பற்றிய பிழையான எண்ணங்களை மக்கள் மத்தியில் சித்தரித்து, வேற்றுமைகளை வளர்த்து வருவதாக முல்லைத்தீவு,  மாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் (நந்தன்) தெரிவித்தார். மாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு, பாண்டியங்குளம் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (04) இடம்பெற்றது. இந்த விழாவில் தலைமை…

Read More

பொலிஸ் மா அதிபர் ஓய்வு

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (07) அறிவித்தார். இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி, ‘அண்மையில் உருவாகிய பொலிஸ் மா அதிபர்களுள் அனைவருக்கும் முன்மாதிரியாக தனது பதவியின் கௌரவத்தை பாதுகாத்து பணியாற்றிய ஒரு பொலிஸ் மா அதிபராக என்.கே.இலங்ககோன், வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்’ என்று கூறினார். சுமார் ஐந்தாண்டு காலம் பொலிஸ் மா அதிபராக அளப்பரிய சேவையாற்றியஇலங்ககோனுக்கு, ஜனாதிபதி இதன்போது வாழ்த்து தெரிவித்து, அவரது…

Read More

உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்: பாதாள உலகக்குழு உதவி

பாதாள உலகக்குழுவின் உதவியுடன் இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் வழிநடத்தியதாகவும் அந்நாட்டு பாதாள உலகக்குழுவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பினாங் மாநிலத்தின் முதலமைச்சர் பீ.ராமசாமியின் ஆதரவாளர்களான ஸீரோ தெர்டீன்ஸ் என்னும் பாதாள உலகக்குழுவினரின்…

Read More

மன்னார் மாந்தை கிழக்கில் மாதிரிக் கிராமம்!

-ஊடகப்பிரிவு- மன்னார், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட அம்பாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் கீழ் வீடமைப்பு அதிகார சபையினால் 25 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம்  அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் மகாலிங்கம் நந்தனின் பங்குபற்றுதலுடன் கடந்த வாரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் கடந்த உள்ளுராட்சி மன்றத்  தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியீட்டி தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், தவிசாளர் மகாலிங்கம் நந்தனினால்  ஆரம்பித்து வைக்கப்பட்ட முதலாவது வேலைத்…

Read More

சிறைக்காவல் அதிகாரிகளை தாக்கிய மூவர் கைது

நான்கு சிறைச்சாலை காவல் அதிகாரிகளை தஹாய்யகம பிரதேசத்தில் வைத்து தாக்கியதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்களை  அனுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அனுராதபுர சிறைச்சாலை அதிகாரிகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகளை இளைஞர்கள் முடி வெட்டும் நிலையமொன்றில் வைத்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் 21 தொடக்கம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தாக்கப்பட்ட சிறைச்சாலை காவல் அதிகாரிகள் சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்ய கூட்டாக இணைந்துள்ள கடும்போக்குவாதிகள்

– அபூ அஸ்ஜத் – பௌத்த மதம்  சமாதானம்,இன உறவு ,விட்டுக் கொடுப்பு என்பன போன்ற ஏனைய மதத் தவர்களுக்கு பங்கம் விளைவிக்காத நல்ல கொள்கையினையே வலியுறுத்திவருகின்றது.பௌத்தர்களாக இருந்தாலும்,இஸ்லாமியர்களாக இருந்தாலும்,ஏனைய மதத் தவர்களாக இருந்தாலும்  எல்லோரும் மனிதர்கள் என்ற உயர் கொள்கையினை எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொண்டுள்ள வேளையில் இந்த நாட்டில் அண்மைய காலமாக இந்த தத்துவத்தை மிஞ்சி பௌத்த மதத்தின் பெயரால் சில இனவாத சக்திகள் மேற்கொண்டுவரும் அடக்கு முறைகளும்,அட்டூழியங்களும் எல்லை கடந்து செல்வதை காணமுடிகின்றது. சமூக வலைத்தளங்களை…

Read More

தொலைபேசி கட்டணங்களில் வற் வரி சேர்க்கப்படாது!

தொலைபேசி கட்டணங்களுக்கு வற் வரி சேர்க்கப்படாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார். வற் வரி அதிகரிப்பினை இடைநிறுத்துமாறு அண்மையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தீர்ப்பிற்கு அமைய தொலைபேசி கட்டணங்களில் வற் வரியை சேர்க்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி வற் வரி அதிகரிப்பின் அடிப்படையில் தொலைபேசி கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாது என நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்….

Read More

நிந்தவூர் பிரதேச சுற்றுச்சூழல், சுகாதார மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல்!

-முர்ஷிட்- நிந்தவூரின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ.எம் தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (25) தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது நிந்தவூரில் காணப்படும் உணவகங்கள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட விற்பனை நிலையங்கள், வடிகான்கள், தெருக்கள், மர ஆலைகள், கடற்கரை, விளையாட்டு மைதானம், பொதுச்சந்தை மற்றும் மடுவம் போன்றவற்றின் பொதுச் சுகாதார நிலைகள் மற்றும் அவற்றின் மேம்பாடு தொடர்பிலும், தின்மக்கழிவகற்றல் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Read More

ஜனாதிபதியால் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி

இன்று 01.02.2017 களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

Read More

‘தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதச் செய்யும் இனவாதிகளின் திட்டத்துக்கு பலிக்கடாவாகாதீர்கள்’ மாந்தையில் அமைச்சர் ரிஷாட் உருக்கமான கோரிக்கை!

  -ஊடகப்பிரிவு- தமிழர்களையும், முஸ்லிம்களையும் முட்டிமோதச் செய்து, பிரச்சினைகளை உருவாக்குவதற்காக இனவாதிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபையில் சொர்ணபுரி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் மௌலவி அஷ்ரப் முபாரக் (ரஷாதி) தலைமையில், சொர்ணபுரியில் இன்று (26) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்….

Read More