Headlines

நீர்கொழும்பு மாநகர சபை வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கம்பஹா மாவட்டத்தின்,  நீர்கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை  ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். நீர்கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் வர்த்தக சங்கங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் உட்பட பல்வேறு அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகம் என்பன காலந்துகொண்டு வேட்பாளர்களுக்கான தமது ஆதரவினை தெரிவித்ததுடன்,  அமைச்சர்…

Read More

ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயம்!

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயம் என தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. எனினும் தில்லுமுல்லுகள் மூலம் நூலிழை வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றாலும் அந்த வெற்றி நிலைக்காது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தான் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அதன் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடும். தற்போதைய அரசியல்…

Read More

உயர் நீதிமன்ற நீதியரசரும், ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினரும் நியமனம்!

ஜனாதிபதி சட்டத்தரணி திரு.பிரசன்ன சுஜீவ ஜயவர்தன உயர் நீதிமன்ற நீதியரசராக இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில்  சத்தியப்பிரமாணம் செய்தார். அத்துடன் பாரதூர ஊழல், மோசடி மற்றும் அரச சொத்துக்கள், வரப்பிரசாதங்கள், அதிகாரம் ஆகியவற்றை முறைகேடாக பயன்படுத்துதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினராக மேல் நீதிமன்ற நீதிபதி திரு.பியசேன ரணசிங்க இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோனும்…

Read More

குடியிருப்பாளர்களுக்கான புதிய வீடுகளுக்கான அடிக்கல்!

அக்கரப்பத்தனை டொரிங்டன் கல்மதுரை தோட்டத்தில் கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 12 குடியிருப்பாளர்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்கும் பொருட்டு வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டும் வைபவமொன்று அண்மையில் நடைபெற்றது. இவ் அடிக்கல்லை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நாட்டி வைத்தார். இவ் வைபவத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.உதயகுமார், ஆர். ராஜாராம், என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Read More

கொழும்பில் நவீன சாதி முறைமை நிலவுகிறது – அமைச்சர் சம்பிக்க

கொழும்பில் நவீன சாதி முறைமை காணப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த காலங்களில் சாதி முறைமை காணப்பட்ட போதிலும் பின்னர் அது வழக்கொழிந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எனினும் தற்போது கொழும்பு போன்ற பகுதிகளில் நவீன சாதிய முறைமை அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். தாய் பாலியல் தொழிலாளி என்றால் மகளையும் பாலியல் தொழிலாளி என்ற பிரிவிற்குள்ளும், தந்தை முச்சக்கர வண்டி செலுத்தினால் மகளனும் அதே முசக்கர வண்டி ஓட்டுகின்றனர் பிரிவிற்குள் உள்ளடக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Read More

வீரவன்சவின் செயற்பாடுகள் கவலைக்குரியது! ரஞ்சன் ராமநாயக்க

குற்றம் செய்துவிட்டு அதனை வார்த்தை ஜாலங்களால் மறைக்க முயலும் விமல் வீரவன்சவின் செயற்பாடுகள் கவலைக்குரியது என்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் விமல் வீரவன்ச கடவுச்சீட்டு விவகாரத்தில் நடந்து கொண்டுள்ளார். அதன் மூலம் சட்டத்தை மீறிய அவர் தற்போது எதுவுமே நடைபெறாதது…

Read More

இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் தலைவர்கள் முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் ?

இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் அரசியல் தலைவர்கள் வட கிழக்கு இணைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திக்கோடை தும்பாலை சிறுகல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு கூரைத்தகடு வழங்கும் நிகழ்வு தும்பாலை பால முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்….

Read More

இந்திய முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி இலங்கை முஸ்லிம்களுக்கும் வரும் ஆபத்து கண்டியில் அமைச்சர் றிஷாட்

இந்தியாவில் தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்து அங்கு 26 சதவீதமான வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை இரண்டு சதவீத்துக்கு குறைவாக மாற்றியமைத்தது போல இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைப்பதற்கான திட்டமிட்ட சதி இடம்பெறுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றஞ் சாட்டினார். மக்கள் காங்கிரசின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பும் கட்சிக் கினை புனரமைப்புக் கூட்டமும் கண்டியில் இன்று காலை (18) இடம்பெற்ற போது உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி மைத்திரியையும் பிரதமர் ரணிலையும்;…

Read More

தாஜூதீன் கொலை: அரச சாட்சியாளராக முன்னாள் பொலிஸ் அதிகாரி

முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் கொலை வழக்கு விசாரணையில் அரச சாட்சியாளராக மாற இளைப்பாறிய பொலிஸ் அதிகாரி ஒருவர் இணக்கம் வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் உயர்மட்டத்தை கோடிட்டு அரசாங்க பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, விசாரணை அதிகாரிகளிடம் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளார். எனினும் இன்னும் பொலிஸ் தரப்பு தமது முடிவை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்காக குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட வரப்பிரசாதங்கள் வழங்கப்படமாட்டாது என்று பொலிஸ்…

Read More

“சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறைகொண்டுள்ள ஒரு தலைவனின் கீழ் ஒன்றுபட்டுள்ளோம்” – மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி!

எதிர்காலத்தில் சஜித் பிரேமதாசவை சக்தி மிக்க தலைவராக வரவுள்ள பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனத்தினை பெற்று பிரதமராக்குவோம். இவரை சிறுபான்மை சமூகத்தினை பாதுகாக்கின்ற தலைவனாக நாங்கள் நம்புகின்றோம் என மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்  தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று (04) ஓட்டமாவடியில், பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போதே, அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர்…

Read More

பீ.ஜே. விவகாரம், ACJU க‌டித‌த்தில் ஒரு ஊழிய‌ர் கையொப்ப‌மிட்டது ஏன்..?

தென்னிந்திய‌ த‌வ்ஹீத் புர‌ட்சியாள‌ர் பீ ஜே இல‌ங்கை வ‌ருவ‌தில் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும் என‌ ஜ‌மிய்ய‌த்துல் உலமாவின் க‌டித‌ த‌லைப்பில் மௌல‌வி அல்லாத‌ ஒரு ஊழிய‌ர் கையொப்ப‌மிட்டு அறிக்கை வெளியிட்டிருப்ப‌து உல‌மாக்க‌ளை அவ‌மான‌ப்ப‌டுத்தும் செய‌ல் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. மேற்ப‌டி அறிக்கையில் ஜ‌மிய்ய‌த்துல் உல‌மாவின் நிர்வாக‌த்தில்  ச‌ம்ப‌ள‌த்துக்கு ப‌ணி புரியும் ஆத‌ம் அலி என்ப‌வ‌ர் கையொப்பமிட்டுள்ளார். மிக‌ முக்கிய‌மான‌ இந்த‌ விட‌ய‌த்தில் உல‌மா ச‌பையின் த‌லைவ‌ரோ, செய‌லாள‌ரோ, ப‌த்வாக்குழுவோ அல்ல‌து ஒரு மௌல‌வியாவ‌து…

Read More

அரச அதிகாரிகள் நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும் பிரதியமைச்சர் அமீர் அலி

அப்துல்லாஹ் அரச அதிகாரிகள் நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பவர்களாக இருக்கும்போதுதான் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்ய முடியுமென்று வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி தெரிவித்தார். கல்குடா தொகுதியின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவிலுள்ள திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் ‘திவிநெகும திட்டத்தினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தி’ என்ற தலைப்பிலான மாநாட்டில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இம் மாநாட்டில்  தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசாங்க அதிகாரிகளில் ஒரு…

Read More