Headlines

செந்தில் தொண்டமானை கைது செய்ய நடவடிக்கை

எல்ல – நியுபேர்க் பகுதியில் வைத்து அஞ்சல் பணியாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகித்து வந்த அஞ்சல் பணியாளர் ஒருவரை, எல்ல – நியுபேர்க் – நான்காம் கட்டை பிரதேசத்தில் வைத்து மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட சிலர் தாக்குதல நடத்தி இருந்தனர். இதற்கு எதிராக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று…

Read More

கொண்டையாவின் இரத்தமாதிரி ஒத்துப்போகவில்லை

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொண்டையாவின் இரத்தமாதிரி குற்றத்துடன் ஒத்துப்போகவில்லை என  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சேயாவை தான் கொலை செய்ததாக கொண்டையாவின் சகோதரன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பதவியுயர்வு

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிவழங்கப்படுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையானது பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் (23) கூடவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் போது இதற்கான அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். இதன்போது கொழும்பு – வடக்கு பிரதேச பிரதி பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன உள்ளிட்டஅதிகாரிகள் 7 பேரே பிரதி…

Read More

“சரணாகதி அரசியலுக்கு அடிபணியோம்” – வஃபா பாறுக்!

கொழும்பில் வர்த்தக சங்கமொன்றுக்கு தலைவராகுவதும், சிறந்த வர்த்தகருக்கான ஜனாதிபதி விருதை பெறுவதும் அவ்வளவு இலேசான விடையங்களல்ல. அரச நிறுவனங்களுடன் இருக்கும் வர்த்தக ரீதியான தொடர்பு சாதாரணமானது. தமது வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்குடன், அரசின் உச்ச அதிகாரங்களை அணுகுவார்கள். அவர்கள் அமைச்சர்களாகவும், அமைச்சின் செயலாளர்களாகவும், அதைவிட அதிகாரம் கூடியோராகவும் இருக்கலாம். தனியார் வர்த்தகத்தை மேம்படுத்துமுகமாக, நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் அமைச்சர்கள், செயலாளர்கள் உதவுவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. நாம் உதவி செய்வோர், எந்தக் நிமிடம் தற்கொலை…

Read More

கொதடுவை அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா!

வெல்லம்பிட்டிய, கொதடுவை தாருல் நாபீஹா அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று மாலை (21) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஜெ.எம்.பாயிஸ் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.  (ன)

Read More

சம்மாந்துறையில் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்!

-ஊடகப்பிரிவு-  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தில்  சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வீரமுனை வட்டார வேட்பாளரான ஏ.சி.எம்.சஹீலின் தலைமையில்,  வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரம் இன்று (12) இடம்பெற்றது. முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான ஏ.எம்.எம்.நெளஷாத், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் மற்றும் பலர் இந்த பிரசாரத்தின் போது உடனிருந்தனர்.      

Read More

நாடகமாடிய வர்த்தகர் கைது

கடந்த ஞாயிற்றுக் கிழமை திருகோணமலையில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் மொஹமட் நஸ்ரின் இன்று காலை ஹல்துமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தகர் ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு பஸ்ஸில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் நஸ்ரின் கடன் தொல்லைகளிலிருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாகியிருந்துள்ளார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சந்தேகநபர் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்வதற்காக…

Read More

பீ. ஜெ வந்தால் கலவரம் வெடிக்குமாம்

இந்திய மார்க்க அறிஞர் பி ஜெய்னுலாப்தீன் இலங்கை வரவுள்ள நிலையில் அவரை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என ஆசாத் சாலி வலியுருத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் கடந்த 2005ல் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களும் அப்போதைய பாதுகாப்பு செயலாலரும் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். இன்று ரனிலின் அரசு அவர் நாட்டுக்குள் வந்து மார்க்க சொற்பொழிவு நடத்த அனுமதி அளித்துள்ளது.இலங்கைக்குள் இஸ்ரேல் நட்பு உயிர்பெற்றுள்ள நிலையில் பி ஜெய்னுலாப்தீன் இஸ்ரேல்…

Read More

ஹஜ்ஜூப் பெருநாள் விளைாயட்டுப் போட்டிகள்

ஹஜ்ஜூப் பெருநாள் விளைாயட்டுப் போட்டிகள் இன்றும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் நடை பெற்றது.மோட்டார் சைக்கிள்,குதிரை,மற்றும் ரேஸ் கரத்தைகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன. பிரதம அதிதியாக கைத்தொழில்,வணித் துறை அமைச்சர் றிசத் பதியுதீன் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி,வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.தாஹிர்,முன்னாள் உறுப்பினர் எஹியா ஆப்தீன்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Read More

ராவணா பலயவுக்கு ஆதரவளித்தால் நல்லாட்சி கவிழும்

மஹிந்த ராஜபக்ஷ அரசு பொதுபல சேனா என்ற பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொ டுத்து அரவணைத்தது. அதன் விளைவை இன்று ராஜபக்ஷ அனுபவிக்கின்றார். இன்று ராவண பலய என்ற பாம்பு படம் எடுத்து ஆட முற்படுகின்றது. இவ் நல் லாட்சியில் ராவண பலய எனும் பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொடுத்து அரவணைக்க முற்பட் டால் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் நிச்சயம் கவிழ்க்கப்படும்…

Read More

24 ஆம் திகதிக்கு பிறகு முறைப்பாடு செய்ய முடியாது..!

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவானது எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதை நிறைவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

Read More

மாலைதீவு பிரஜைகள் கைது!

ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு மாலைதீவு பிரஜைகள், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலப்பிட்டியவில் உள்ள விடுதி ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த போது நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Read More