Headlines

சட்டவிரோத குடியிருப்புக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி அதிரடி!

இனிவரும் காலங்களில் இலங்கையின் எந்தவொரு இடத்திலும் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். அண்மையில் கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் உள்ள வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்களில் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் ஆக்கிரமித்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் நீர் வழிந்தோடுவதற்கான எந்தவொரு வழியும் அங்கு விட்டு வைக்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் வெள்ள சேதம் அதிகரித்திருந்தது. இதனைக் கருத்திற் கொண்டு இனிவரும் காலங்களில் எந்தவொரு இடத்திலும் யாருக்கும்…

Read More

5 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாகிறது

வன்முறையால் 5 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாகிறது என ‘யூனிசெப்’ தெரிவித்துள்ளது. ஐ.நா. குழந்தைகள் நல நிறுவனமான ‘யூனிசெப்’பின் அமெரிக்க கிளை சமீபத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. அதில் சர்வதேச அளவில் 5 நிமிடத்துக்கு ஒரு குழந்தை வன்முறைக்கு பலியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதுக்குட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் தங்கள் வீடுகள், பள்ளிகள் மற்றும் சமுதாயத்தில் பாதுகாப்பின்றி உள்ளனர். அதிகவேகமாக நகர்புறமயமாகுதல், வேலையின்மை, சமத்துவம் இன்மை போன்றவைகளால் வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன. உலகில் நாள் ஒன்றுக்கு…

Read More

மீள்குடியேற்றக் கிராமங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

– சுஐப் எம் காசிம் – சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் தென்னிலங்கையில் அகதி வாழ்வுக்கு முகம் கொடுத்து தற்போது மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள அகதி முஸ்லிம் மக்களின் பூர்வீகக் கிராமங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (22) விஜயம் செய்தார். மன்னார் முசலி – சிலாவத்துறை பிரதேசங்களிலுள்ள அகத்திமுறிப்பு, அளக்கட்டு, பீ பீ பொற்கேணி, எஸ் பீ பொற்கேணி, வேப்பங்குளம், மறிச்சுக்கட்டி ஆகிய கிராமங்களுக்கும் சிங்கள மக்கள்…

Read More

பேஸ்புக் காதலால் பிக்கு கைது

பேஸ் புக்  ஊடாக 18 வயது யுவதியை காதலித்து ஏமாற்றிய பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பேஸ் புக் சமூக வலையமைப்பின் ஊடாக அறிமுகமாகி தன்னை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றிய பிக்குக்கு    எதிராக குறித்த யுவதி குற்றம் சுமத்தியுள்ளார்.இதனையடுத்து சந்தேக நபரான பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்னர்.இதன்போது எதிர்வரும் 7ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே உத்தரவிட்டுள்ளார்.பௌத்த பிக்கு குறித்த யுவதியிடம் தம்மை சாதாரண ஓர்…

Read More

மாளிகாவத்தையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸி தேர்தல் பிரச்சாரக்கூட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு (25) நடைபெற்றது. கட்சியின் தலைவரும் அமைச்சருமான் றிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட பலர் கலந்து கொண்டதுடன் பெருந்திரளான உலமாக்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். மௌலவி முபாரக் தலைமையில் இது நடைபெற்றது.  

Read More

ITN தொலைக்காட்சியில் மகிந்தவின் ஊழல் வெளிச்சத்துக்கு

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விளம்பரங்கள் ; ஒன்றரை மாதமாக சுயாதீன தொலைக்காட்சியில் கட்டணம் செலுத்தாமலே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சுயாதீன தொலைக்காட்சியின் ஜ.தே.கட்சி ஊழியர்கள் தொழிற் சங்கம் தெரிவிக்கின்றது. தேர்தல் காலத்தில் காட்சிப்படுத்திய விளம்பரச் செலவு 11 கோடி ருபாவாகும். இந் நிதியை அவர்களிடமிருந்து சுயாதீன தொலைக்காட்சிக்கு பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. புதிய ஊடக அமைச்சர் இதனை ஒரு கமிசன் ஒன்றை நியமித்து இந் நிதியைப் பெற்றுத்தரல்வேண்டும். அத்துடன் கால்டன் ஸ்போட் தொலைக்காட்சி…

Read More

உமா ஓயா திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எல்லப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள், உமா ஓயாத் திட்டத்தின் விளைவாகத் தமக்கான நீரைத் தாம் இழப்பதாகத் தெரிவித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில், இன்று புதன்கிழமை (21) காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

Read More

தேர்தல்கள் ஆணையாளர் இன்று கட்சி செயலாளர்களை சந்திக்கிறார்

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இன்று (02) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானதன் பின் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Read More

வடமாகாண சபையில், முஸ்லிம்கள் குறித்து பிரேணை – றிப்கான் பதியுதீன்

வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 25 வருடங்களாகும் நிலையில், அதுகுறித்து வடமாகாண சபையில் கவனயீர்ப்பு பிரேணையை கொண்டுவர இருப்பதாக வடமாகாண சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கூறினார், இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வடமாகாண முஸ்லிம்கள் பலவழிகளிலும் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகிறார்கள். வடமாகாண முஸ்லிம்களுக்கு பின்னர் இடம்பெயர்ந்த பல தொகுதியினர் மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர். வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தில் வாழத் துடிக்கிறார்கள். ஆனால் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கபட்டவில்லை. மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கு தமிழ் கூட்டமைப்பைச் சேந்த சிலர் தொடர்ந்தும் தடையேற்படுத்துகின்றனர். அரச அதிகாரிகள் முஸ்லிம்கள்…

Read More

ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை

சொத்து எப்படி சம்பாதிக்கப்பட்டது என்பதை வெளியிட முடியாது போன மேலும் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்கும் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது. ஒருவரிடம் இருக்கும் சொத்து எப்படி வாங்கப்பட்டது என்பதை அவர் உறுதிப்படுத்த தவறினால், பணச் சலவை சட்டத்தின் கீழ் அந்த சொத்து அரசுக்கு சொந்தமாகும். அத்துடன் அவ்வாறான சொத்துக்களை கொள்வனவு செய்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் ஏற்பாடுகள்…

Read More

அரநாயக்கவில் மீட்கப்பட்ட உடற்பாகங்களால் சிக்கல்

அரநாயக்கவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் இன்னும் கேகாலை பெரிய வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த உடற்பாகங்கள் வைத்தியசாலையில் பிரதே அறையில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த உடற்பாகங்கள் பிரேத அறையில் குளிரூட்டப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி டொக்டர் ரமேஷ் அழகியவன்ன கூறுகின்றார். இதன்காரணமாக வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மஹிந்தவிற்கு நோட்டீஸ்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, அச்சபைக்குச் சேர வேண்டிய 142 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட எழுவரையும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 10ஆம் திகதி,  கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவுடன்,  அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழ்வரை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபையே  கொழும்பு வர்த்தக…

Read More