Headlines

சட்டவிரோத மணல் அகழ்வு விநியோகத்தை நேரில் சென்று பார்வையிட்ட தவிசாளர் செல்லத்தம்பு!

சட்டவிரோதமாக நடைபெறும் மணல் அகழ்வு மற்றும் விநியோகத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் செல்லத்தம்பு இன்று நேரில் சென்று பார்வையிட்டார். முறைகேடாகப் பயணம் செய்த மணல் டிப்பரை கைது செய்த தவிசாளர், சட்ட நடவடிக்கைக்காக இலுப்பைக்கடவை பொலிஸில் ஒப்படைத்தார். எமது பிரதேச வளங்களை எவரும் அழிக்க அனுமதிக்க முடியாது என தவிசாளர் மேலும் தெரிவித்தார். இந்நடவடிக்கையில் இலுப்பைக்கடவை வட்டார உறுப்பினர் மு.விஜயபாண்டி அவர்களும் இணைந்துகொண்டார். (ன)

Read More

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி வரை (10.2.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா  உத்தரவிட்டார். கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று…

Read More

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாட்சியாக இருக்கின்ற காட்சிகள் அடங்கிய வீடியோவை சோதனைக்கு உட்படுத்துவதற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பிலான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முஸ்லிம்களின் புனித நூலான குரானை அவதூரப்படுத்தும் வகையில் கொம்பனிவீதி பொலிஸூக்கு…

Read More

ஊவா தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவு

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவுள்ளன. இதற்கிணங்க இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் பிரசாரக் கூட்டங்களை நடத்துதல், பிரசாரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகளைக் காட்சிப்படுத்தல், பிரசார விளம்பரங்களை  வெளியிடுதல் உட்பட தேர்தல் பிரசார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சகல செயற்பாடுகளையும் நிறுத்திக்கொள்ளுமாறு தேர்தல்கள் செயலகம் தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடமும் வேட்பாளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் மாகாணத்தின் இரு மாவட்டங்களிலுமுள்ள வேட்பாளர்களின் அலுவலகங்களை நாளை வியாழக்கிழமை…

Read More

மஹியங்கனையில் நிலைமை சுமுகம்

மஹி­யங்­கனை  பொலிஸார், பொலிஸ் நிலை­யத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்த இரு தரப்­பு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சமா­தானப் பேச்­சு­வார்த்­தையை அடுத்து எதிர்­கா­லத்தில்  பிரச்­சி­னைகள் எது­வு­மின்றி  சமா­தா­ன­மாக வாழ்­வ­தாக  இரு­த­ரப்­பி­னரும் உறு­தி­ய­ளித்­தனர். மஹி­யங்­கனை நக­ரி­லுள்ள பன்­ச­லையில்  கடந்த நோன்­மதி தினத்­தன்று பெளத்த தேரர்  ஒருவர்  நிகழ்த்­திய  மார்க்க பிர­சங்­கத்தில் முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றாக  தெரி­விக்­கப்­பட்­ட­மை­யை­ய­டுத்து அதற்கு  எதிர்ப்பு  தெரி­வித்து முஸ்லிம் இளை­ஞர்கள் பெளத்த  கொடி­களை  எரித்­ததாலேயே இந்த  முறுகல் நிலை உரு­வா­ன­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இச்­சம்­ப­வத்தில் ஈடு­பட்­ட­தாக  சந்­தே­கத்தின் பேரில் எட்டு  இளை­ஞர்கள் 14 நாட்கள்…

Read More

இனியும் தமிழ் மக்கள் ஏமாறமாட்டார்கள்-செல்லத்தம்பு உறுதி

1977 ஆம் ஆண்டு தமிழீழ  பிரகடனம்,82 இல் மாகாண சபை,83 இல் இனக்கலவரம்,அதனை தொடர்ந்து ஆயுதப் போராட்டம்,90 களில் முஸ்லிம்களின் வெளியேற்றம்,2007 முதல்,2009 வரை நடுப்பகுதி வரை முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்தது இதனை சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது,அதே போன்று தான் இந்த மாகாண சபைத் தேர்தலையும் சர்வதேச பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கும் என மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் சந்தியாகோ செல்லத்தம்பு தெரிவித்தார். எதிர்வரும் வடமாகாண சபை தேர்தல்…

Read More

வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் பழுதடைந்த பழங்கள் விற்பனை

வவுனியா வைத்தியசாலையை  அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பழக்கடைகள் சிலவற்றில் பழுதடைந்த பழங்கள் விற்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் அவர்களுக்காக பழங்களை கொள்வனவு செய்யும் போது பழுதாகிய மற்றும் அழுகிய நிலையில் உள்ள சில பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சிறுவர்கள் கூட பழுதாகியமை தெரியாது பழங்களை வாங்கி கழுவிவிட்டு உண்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த  விடயம் தொடர்பில் வவுனியா நகரசபை மற்றும் பொது…

Read More

இனவாதிகளின் கொட்டத்தை அடக்க சஜித்தே சரியான தெரிவு. முல்லைத்தீவில் அமைச்சர் றிஷாட்!

இனவாதிகள் கூட்டுச்  சேர்ந்துள்ள அணியை ஜனாதிபதித்  தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கோரிக்கைவிடுத்தார். சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இன்று காலை (04) முல்லைத்தீவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.அவர் கூறியதாவது, சிறுபான்மை மக்களை “வந்தான் வரத்தான்” எனக்  கருதும் இனவாதிகளுக்கு இந்த தேர்தலில் நாம் ஒன்றுபட்டு பாடம்புகட்டுவோம். நமது சமூகம் தன்மானத்துடனும், தலைகுனிவின்றியும் வாழவேண்டும் என்பதற்காகவே சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம். கடந்த ஒரு தசாப்தகாலமாக…

Read More

ஜனாதிபதி அவசர பணிப்புரை

– ப.பன்னீர்செல்வம் – சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் “நிதியை” பிரச்சினையாக்கிக் கொள்ளாது அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர பணிப்புரையை விடுத்தார். வெள்ளத்தால் கொழும்பு மாவட்ட மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், இம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி. திஸாநாயக ஆகியோரை ஜனாதிபதி இணைப்பாளர்களாகவும் நியமித்துள்ளார்.

Read More

முறைகேடான வர்த்தக  நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது!!!

கொழும்பு 12 இல் உள்ள  வீடொன்றை சுற்றிவளைத்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவரை நேற்று (01) கைது செய்துள்ளனர். தகவல் ஒன்றின் அடிப்படையில், அந்த வீட்டை முற்றுகையிட்ட அதிகாரிகள் முறை கேடான வகையில்  தயாரிக்கப்பட்டிருந்த 7500 வெள்ளை நீல  சவர்க்காரகட்டிகளையும், 250 பார்சோப் கட்டிகளையும்,15 லீட்டர் கொள்ளளவான 3500 போத்தல்களில் அடைக்கப்பட்ட உடலுக்கு பூசுவதற்கான வாசனைத் திரவங்களையும் (Body lotion) ,  நகத்துக்கு பூசுவதற்கான 3000 கியூடெக்ஸ் …

Read More

யெமன் மீதான போர் – சவூதி அரேபியாவிடம் அமெரிக்கா பாடம் படிக்க வேண்டும்….!!

யெமன் நாட்டின் 90 சதவீத பகுதிகளை ஷியா தீவிரவாதிகள் ஆக்கிரமித்த பிறகு யெமன் அதிபர் ஹாதி தம்முடைய நாட்டை மீட்டுத்தருமாறு சவூதி மன்னர் சல்மான் அவர்களிடம் உதவி கோரினார். அதனை தொடர்ந்து உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் தலைமையில் முஸ்லிம் நாடுகள் ஏமனுக்கு படையெடுத்து ஷியா தீவிரவாதிகளை முற்றாக அழித்து நிர்மூலமாக்கியது. சுமார் 20 நாட்களில் முஸ்லிம் நாடுகளின் அதிரடியான தாக்குதலில் ஷியா தீவிரவாத இயக்கம் முற்றிலுமாக நிலைகுலைந்தது. அதனைதொடர்ந்து போரை…

Read More

யோஷித வாக்குமூலமளிக்க வந்தார்

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் ஒருவரான யோஷித ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை (13) காலை வருகை தந்துள்ளார். முன்னதாக கடந்த புதன்கிழமையும் யோஷித ராஜபக்ஷ, வாக்குமூலமளித்திருந்தார்.

Read More