சாப்பிட உணவில்லை, பள்ளிவாசல் சென்றே சாப்பிட்டேன்” ஞானலோக தேரர்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முதலாம் நாள் எனக்கு சாப்பிட உணவு இருக்கவில்லை. நான் பள்ளிவாசலுக்குச் சென்றே உணவு சாப்பிட்டேன் பள்ளிவாசல்களுக்கும் எமக்குமிடையில் இவ்வாறான ஒரு நல்லுறவு இருக்கிறது என அம்பன்வெல ஞானலோக தேரர் தெரிவித்தார். கொலன்னாவை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற வெள்ள நிவாரண பணிகள் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கொலன்னாவை மக்களுக்கு நிவாரண உதவிகள் பெரியளவில் வழங்கப்படுகின்றன. இதேவேளை கொலன்னாவையைப்…
